Published:Updated:

கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்

வி.எஸ்.சரவணன் படங்கள் : ச.வெங்கடேசன்

கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்

வி.எஸ்.சரவணன் படங்கள் : ச.வெங்கடேசன்

Published:Updated:

தலைகீழா நின்னு மனப்பாடம் பண்ணினாலும் வாய்ப்பாடு மறந்துபோய்விடுகிறதா?

கவலையை விடுங்கள். ஆசிரியர் சங்கர், தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கும் புதிய ஐடியாவை நீங்களும் பின்பற்றினால், வாய்ப்பாடு உங்கள் வசம்.

வேலூர் மாவட்டம், ராமநாயக்கன்பேட்டை தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் சங்கர். இப்போது, ராமநாயக்கன்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். எந்தப் பள்ளியில் பணியாற்றினாலும் இவரது வகுப்பை மாணவர்கள் ஆர்வமாக எதிர்பார்ப்பது வாடிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'குறைந்த விலையில் கிடைக்கும் ஆடியோ பிளேயரில்... வாய்ப்பாடு, ஆங்கில இலக்கணப் பயிற்சிகளை மாணவர்களைச் சொல்லவைத்து  பதிவுசெய்வேன். மதிய உணவு இடைவேளையில் அதை ஒலிபரப்பி, எல்லோரையும் கேட்கவைப்பேன். உதாரணத்துக்கு... ஆறாம் வாய்ப்பாடு என்றால், 1 ஙீ6=  என்று மட்டும் ஆடியோவில் ஒலிக்கும். அதைக் கேட்கும் மாணவர்கள், அதற்குரிய விடையைச் சொல்வார்கள். ஒரு சிலருக்குத் தெரியாமல் இருந்தாலும் மற்றவர் சொல்லும்போது தெரிந்துகொள்வார்கள். இதைத் தினமும் கேட்கும்போது, மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்'' என்கிறார் சங்கர்.

மாணவர்களை சாதிக்கத் தூண்டுவதில் மட்டும் அல்ல, இவரே ஒரு சாதனையாளராக விளங்குகிறார். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் அளிக்கும் இன்னோவேட்டிவ் டீச்சர்ஸ் லீடர்ஷிப் ((Innovative Teachers Leadership)) விருதைப் பெற்றிருக்கிறார்.

கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்

''2006-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்தப் போட்டியில் மாநில அளவு விருதுகளைப் பெற்றுவந்தேன். 2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டியில் தேர்வாகிய ஆறு ஆசிரியர்களில் நானும் ஒருவன்'' என்கிறார்.

இந்தியாவில் இருந்து தேர்வாகிய ஆறு பேரையும் பிரேசில் நாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச்சென்றனர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர்.

கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்

''அங்கு 11 நாடுகளில் இருந்து வந்த ஆசிரியர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஏதேனும் ஒரு புராஜெக்ட் செய்யச் சொன்னார்கள். குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை மையமாக வைத்துச் செய்தோம். அது, அங்கே வந்திருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல நாடுகளில் இருந்து வந்த ஆசிரியர்களோடு பழகியது, உரையாடியது மறக்கவே முடியாது'' என்கிறார்  சங்கர்.

தமிழக அரசு கொண்டுவந்த ஏ.பி.எல் அட்டைக்கான பணி, எஸ்.எஸ்.ஏ வில் வெளியிடும் டிவிடி-கள் என்று இவரின் பங்களிப்புப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. பள்ளியின் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

''பாடங்களைப் படங்கள் வழியாகச் சொல்லிக்கொடுத்தால், எளிதாகப் புரிவதோடு, மனதில் ஆழமாகப் பதியும். எனவே, அந்த முறையைப் பயன்படுத்தி, பாடம் நடத்த ஒரு விரிவான முயற்சியில் இருக்கிறேன். இது, மாணவர்களுக்கும் பாடங்கள் மீது அதிக ஆர்வத்தை உண்டாக்கும்'' என்கிற ஆசிரியர் சங்கரின் குரலில் ஒளிர்கிறது நம்பிக்கை.