Published:Updated:

பொன்விழா சாதனை !

பொன்விழா சாதனை !

பொன்விழா சாதனை !

பொன்விழா சாதனை !

Published:Updated:

அ.முகமது சுலைமான்

'என்னால் இந்த பள்ளிக்குப் பெருமை’ என்ற வார்த்தையை அனை வரும் சொல்ல ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த வாய்ப்பு கிடைப்பதற்கும், தன் பள்ளியின் பெருமையை உலகறியச் செய்வதற்கும் சரியாகத் திட்டமிட  வேண்டும். இதற்கு உதாரணமா ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருக்கு.

பொன்விழா சாதனை !
##~##

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகமும் மாணவர்களும் தங்கள் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டத்தை வித்தியாசமாகப் பதிவு செய்யத் திட்டமிட்டு,  சாதித்து இருக்கிறார்கள்.

இந்தச் சாதனையைப் பற்றி அப்பள்ளியில் பயின்று, தற்போது ஃபிடிலைட் நிறுவனத்தில் சூப்பர் டீச்சராகப் பணியாற்றும் ஷியாமளா தேவியிடம் பேசியபோது, ''எங்க பள்ளியின் இந்தச் சாதனை... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்ல இடம்பெறப் போகுது. இந்த சாதனையில் 3500 கார்ட்ஸ்ல மாணவர்கள் ஒரு மணி நேரத்துக்குள்ள ராஜஸ்தானி பெயின்டிங்கை செய்யணும். இதுக்கு முந்தைய சாதனை 3000 கிரீட்டிங் கார்ட்ஸ்தான். இந்த பெரும் முயற்சியில் எங்களின் திருப்போரூர், கேளம்பாக்கம் பள்ளிகளின் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

பொன்விழா சாதனை !

ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ப்ராக்டீஸ் கொடுத்தோம். இந்த சாதனையைச் செய்ய ஹெல்ப் பண்ணது... ஃபிடிலைட் நிறுவனமும், எங்கள் பள்ளியின் தாளாளரும்தான். செலவை பள்ளி நிர்வாகம் செஞ்சுது. இந்தச் சாதனையோட பேரு 'மீனாகுமாரி ஒர்க் ஆன் கேன்வாஸ்’ (ட்ரெடீஷ்னல் ஆர்ட் ஆஃப் ராஜஸ்தான்).

எங்க ஸ்கூலோட பெயர், கோல்டன் ஜூப்ளி வருடத்தில் லிம்கா புக்ல இடம் பெறப்போகுது என்பதை நினைக்கறப்ப ரொம்பப் பெருமையா இருக்கு.'' என்றார்.  

படங்கள்: அ.ரஞ்சித்