Published:Updated:

பிட்ஸ் !

தோசை சுட்டி !

பிட்ஸ் !

தோசை சுட்டி !

Published:Updated:

செங்கல்பட்டு அருகே உள்ள தைலாவரத்தில், இரவு இந்த வாக் கியத்தை அடிக்கடி கேட்கலாம். ''என்ன தோசை வேணும் கேளுங்க அண்ணா?'' என்று கேட்டு, அழகாக தோசை சுட்டுத் தருகிறாள் ஏழாவது படிக்கும் தோசை மாஸ்டர் கலைவாணி. தோசை சுட்டுக்கொண்டே நம்மிடம் பேசுகிறாள்...

பிட்ஸ் !
##~##

 ''நான் நத்திவரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிச்சுட்டு இருக்கேன். சாயங்காலம் எங்க அம்மா, அப்பா கூட ஏழு மணிக்கு வந்துடுவேன். நான்தான் இங்க தோசை சுடுவேன். ராத்திரி பத்தரை மணி வரைக்கும் வர்றவங்களுக்கு தோசை சுட்டுப் போடுவேன்' என்று குழந்தைத்தனமாகப் பேசுகிறாள்.

''சரி, இங்கு தோசை சுட்டுட்டு இருந்தா எப்ப படிப்பே?'' என்று கேட்டதற்கு... ''நான் நல்லா படிப்பேன். நான்தான் செகண்ட் ரேங்க். கிளாஸ் லீடரும்கூட, பாடங்களை கிளாஸ்லேயே படிச்சுடுவேன். ஹோம் வொர்க் கொடுத்தாங்கன்னா இன்ட்ரவல், லஞ்ச் டைம்லயே  உட்கார்ந்து எழுதி முடிச்சுடுவேன். ஆனா, ஸ்கூல்ல இருந்து வந்ததும் படிப்பேன், என்னோட தங்கச்சிக்கும் பாடம் சொல்லித் தருவேன். எங்க அப்பா, அம்மா படிக் கலை.  நான் இப்ப கஷ்டப்பட்டு படிச்சு, பின்னாடி, டாக்டர் ஆகி எல்லாரையும் நல்ல வைச்சுப்பேன்.'' என் கிறாள் புன்னகையுடன்.  

-நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: க.கோ.ஆனந்த்

 வெள்ளி வீராங்கனைகள் !

சமீபத்தில் கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜூனியர் குத்துச் சண்டை 2011-ல் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்... நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டி, பாரதி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் சிந்துவும், சுபாஷினியும்.

பிட்ஸ் !

அவர்களிடம் பேசியபோது  ''படிப்பில் நாங்கள் முதல் ஐந்து ரேங்க் எடுத்துடுவோம். தினமும் ஸ்கூல் முடிந்தவுடன் ஆறு மணி வரை பயிற்சி எடுப்போம். முதன் முதலில் 2010-ல் கோவையில் நடை பெற்ற தேசிய அளவிலான சப்- ஜூனியர் குத்துச் சண்டை போட்டியில் கலந்துகொண்டு முதல் இடம்பெற்று இருவருமே தங்கப் பதக்கம் வென் றோம். இப்போது  நடைபெற்ற இறுதிப் போட்டியில் மணிப்பூர் மாநிலத்தோடு போட்டி போட்டோம். கொஞ்சம் பாயின்ட்ல மணிப்பூர் ஜெயிச்சு முதல் இடம் வாங்கிட்டாங்க. நாங்க இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றோம்.

ரெண்டு பேருமே ஸ்டேட் லெவல் பாக்ஸிங் ட்ரயலில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளோம். மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் நாங்கதான் முதலிடம். இதற்கு எங்கள் பள்ளி தரும் ஆதரவுதான் காரணம்'' என்றார்கள்.

 -ப.பிரகாஷ் படங்கள்: தெ.அருண்குமார்