Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

எரிமலைக் குழம்பை சாப்பாட்டுக்கு ஊத்திச் சாப்பிடலாமா ஜீபா?

-பி.கோபி பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

!இது என்ன வெண்டைக்காய், கத்தரிக்காய் மாதிரி எரிமலையைப் போட்டு பண்ற குழம்புன்னு நினைச்சுட்டியா பச்ச..? எரிமலைக் குழம்போட வெப்பநிலை 700-1300 டிகிரி சென்டிகிரேடு. கொதிக்கிற தண்ணீரோட ஹீட்டைப் போல குறைஞ்சது ஏழு மடங்கு! அதனால, நீ முதல்ல கொதிக்கக் கொதிக்க வெந்நீரை சாதத்துல போட்டு அப்படியே அள்ளிச் சாப்பிடப் பழகு... அப்புறம் எரிமலைக் குழம்பைப் பாத்துக்கலாம்!

மை டியர் ஜீபா !
##~##

மை டியர் ஜீபா! தண்ணீர் நிறமற்றதுதானே... அப்படி என்றால் வெண்பனி மட்டும் ஏன் வெள்ளை வெளேரென்று இருக்கிறது?  

-ஆர்.சக்திவேல், கரூர்.

!முதல்லே ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ சக்தி. ஒளிங்கறது வெவ்வேறு அலை நீளங்களைக் கொண்ட நிறக் கற்றைகளால் ஆனது. இதைத்தான் 'க்ஷிமிஙிநிசீளிஸி’-ங்கற ஏழு நிறங்களா நாம சொல்றோம். எந்த ஒரு பொருள் மேல ஒளி பட்டாலும் அந்த ஒளில இருக்கிற ஒரு குறிப்பிட்ட நிறத்தை மட்டும் பிரதிபலிச்சுட்டு மற்ற நிறங்களை உள்வாங்கிக்கும். எந்த நிறம் பிரதிபலிக்கப்படுதோ அது அந்தப் பொருளோட கலரா நம் கண்ணுக்குத் தெரியுது. ஓகே?

தண்ணீரை எடுத்துக்கிட்டா, எந்த நிறத்தையும் பிரதிபலிக்காம மொத்த ஒளியையும் முழுசா உள்வாங்கிக்கும். வெண்பனியும் தண்ணீர் மாதிரிதான்... ஆனா, ஃப்ரீஸ் ஆன தண்ணீங்கறதால க்ரிஸ்டல் மாதிரி, அதுமேலே படற ஒளியை அப்படியே பிரதிபலிச்சுடுது. எந்த ஒரு நிறத்தையுமே கிரகிச்சுக்காது. அதேசமயம், அதன் மேலே படற ஒளியை ஆயிரக் கணக்கான குட்டிக் குட்டி ஒளிக் கற்றைகளா சிதறச் செஞ்சு, 'கன்னா பின்னா’ன்னு பல திசைகளுக்குத் திருப்பிவிட்ருது. இதேமாதிரி ஒவ்வொரு பனித்துகளும் பண்ணினா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு!

சொல்லும்போதே வெள்ளை வெளேர்னு நம்ம கண்ணு கூசுதுப்பா!

டியர் ஜீபா! என் நண்பன் ஒரு கேள்வி கேட்டான். 'மிளகாய்ப் பொடி எதில் இருந்து தயாரிக்கிறார்கள்?’ என்று. 'மிளகாயில் இருந்து’ என்றேன். 'மஞ்சள் பொடி?’ என்று கேட்டதற்கு, 'மஞ்சளில் இருந்து’ என்றேன். 'அப்படினா, சாம்பார் பொடி, ரசப் பொடி... இதெல்லாம் எதில் இருந்து தயாரிக்கிறார்கள்?’ என்று கேட்கிறான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை ஜீபா. ஹெல்ப் மீ ப்ளீஸ்!

மை டியர் ஜீபா !

-டி.பிரபாகரன், பெரியாரியபட்டி.

!நண்பனிடம் சொல்லு, அது அப்படி இல்லைடா... மிளகாய்ப் பொடியை வெச்சு மிளகாயா பயன்படுத்திக்கலாம்... மஞ்சள் பொடியை வெச்சு மஞ்சள் வேலைகளைச் செய்துக்கலாம். அப்படிதான் சாம்பார் பொடியை வெச்சு சாம்பாரும், ரசப் பொடியை வெச்சு ரசமும் செஞ்சுக்கலாம்னு சொல்லு. ஒருவேளை, இதுக்கு அடுத்ததாவும். 'அப்போ, பல்பொடியை வெச்சு பல்லு செய்லாமா?’ மாதிரியான கேள்வி ஏதாவது கேட்டான்னு வெச்சுக்க... பதில் எதுவும் பேசாதே, அவனோட ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிக்க!

  கப்பல் எப்படி தண்ணீரில் மிதக்குது ஜீபா? சின்ன இரும்புத் துண்டைப் போட்டா பொதுக்குன்னு தண்ணீருக்குள்ளே போயிடுது... ஆனா, அவ்வளவு வெயிட்டான கப்பல் எதுவும் ஆகாம மேலேயே இருக்கே... எப்படி?

-சு. செல்வி, தஞ்சாவூர்.

!கப்பல் மிதக்கிற தண்ணீரோட அளவைக் கவனி. கப்பல் அந்தத் தண்ணீரை அழுத்தி, அதன் மட்டத்தை உயர்த்த முயற்சிக்குது. தண்ணீரோட அளவும் எடையும் இந்த முயற்சியை முறியடிக்கப் போராடும். கப்பலோட 'க்ஷி’ மாதிரியான வடிவமைப்புதான் அதனோட பெரிய பலம். இதோடு கப்பலோட வெயிட் சேர்ந்து, தண்ணீரை கீழ் நோக்கியும், பக்கவாட்டிலும்னு அழுத்தி விலக்க முயலும்.

தண்ணீரோட மொத்த வெயிட்டும், பரப்பு இழுவிசையும் பலமா கப்பலோட முயற்சியோடு மோதும். இந்தத் 'தள்ளு முள்ளு’ போட்டில தண்ணீர் ஜெயிச்சுட்டு இருக்கிற வரைக்கும் கப்பல் மிதக்கும். கப்பல் ஜெயிச்சா... அடுத்த நிமிஷம் தண்ணிக்குள்ளே மூழ்கிடும்!

கேள்விக் குறிக்கும் ஆச்சர்யக் குறிக்கும் என்ன வித்தியாசம் ஜீபா?

-ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

மை டியர் ஜீபா !

!கேள்விக் குறியை ஆணில மாட்டித் தொங்க விடலாம். ஆச்சரியக் குறியை தொங்கவிட முடியாது.

கேள்விக் குறியில இருக்கிற புள்ளிக்கு மதிப்பு உண்டு (புள்ளியை எடுத்துட்டா மிச்சதுக்கு அர்த்தம் இருக்காது). ஆச்சரியக் குறியில இருக்கிற புள்ளிக்கு மதிப்புக் கிடையாது (புள்ளியை எடுத்தாலும் மிச்சம் இருக்கறது 'ஒண்ணு’ மாதிரி தெரியும்).

கேள்விக் குறி மாதிரியே ரோடு போட்டா அதுல ஓடுற வாகனங்களுக்கு ஸ்டியரிங் அவசியம். ஆச்சரியக்குறி ரோட்டில் ஓடும் வாகனங்களுக்கு அது அவசியமில்லை.

இப்படி பல வித்தியாசங்களை நான் சொன்னப் பிறகு, உன் கேள்வியின் முடிவில் இருக்கிற 'கேள்விக் குறி’க்குப் பதிலாக 'ஆச்சரியக் குறி’ விழுந்து ''கேள்விக் குறிக்கும் ஆச்சர்யக் குறிக்கும் என்ன வித்தியாசம் ஜீபா!''ன்னு ஆச்சரியப்படவும் வாய்ப்பிருக்கு மஞ்சரி!

  ஹாய் ஜீபா! ஒரு நாளைக்கு நீ எத்தனை பொய் சொல்லுவே?

-சி.விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி.

!ஒண்ணே ஒண்ணுதான்! (அடடா! இன்னிக்கான கோட்டா தீர்ந்துடுச்சே!)