Published:Updated:

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !

Published:Updated:

சுட்டி விகடன் நடத்திவரும் 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2011-ல் 'சுட்டி ஸ்டார்’களாகத் தேர்வான சுட்டிகளின் பள்ளிகளில் 3D போட்டோ கண்காட்சி நடத்தப்பட்டன. சுட்டிகளின் கற்பனைத் திறனைத் தூண்டும் வகையில் நடத்தப்பட்ட இக் கண்காட்சி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கண்டு ரசித்து, 3D நுணுக்கம் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டனர்.

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !
##~##

சென்னை, வேலூர், புதுச்சேரி, கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், காரைக்குடி மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற இக்கண்காட்சியை இருப தாயிரத்துக்கும் மேற்பட்ட சுட்டிகள் கண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் வியந்து பார்த்த 3D போட்டோ கண்காட்சி யைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்...  

'வாவ்! எல்லாம் நிஜம் மாதிரியே நிக்குது. கண் அருகே வந்து கலக்குது!’

'எங்கள் பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்துகிட்டே தமிழகம் முழுக்க சுற்றுலா போய் வந்த மாதிரி இருக்கு!’

'சுட்டி விகடன் என்றாலே எப்போதும் அதிரடி... அதில் இந்த 3D கண்காட்சி புது வெடி!’

'பாரு... பாரு... பார்த்துட்டே இருன்னு மனசு சொல்லுது! நகரு... நகரு... நகர்ந்துட்டே இருன்னு டீச்சர் சொல்றாங்க... நான் என்ன செய்றது?’

'போட்டோக்கள் எல்லாமே ஜோரு... சுட்டி விகடனுக்கு ஒரு 'ஓ’ போடு!’

சுட்டி ஸ்டார் பள்ளிகளில் 3D !

'நாலு எழுத்துல 'நச்’னு  சொல்லணும்னா... 'சூப்பர்! வெல்டன்! கீப் இட்!’