Published:Updated:

சிலிர்க்க வைத்த சிசர் !

சிலிர்க்க வைத்த சிசர் !

சிலிர்க்க வைத்த சிசர் !

சிலிர்க்க வைத்த சிசர் !

Published:Updated:

சமீபத்தில் வெளியான ரைஸ் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ்   (Rise of the planet of the apes) என்ற ஆங்கிலப் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 93,000,000 டாலர்கள். முதல் வார வசூல்,  அமெரிக்காவில் மட்டுமே 105,208,226 டாலர்கள்.  உலக அளவிலான வசூலை கணக்கு எடுத்தால், 'அம்மாடியோவ்’ என்பீர்கள்!

சிலிர்க்க வைத்த சிசர் !
##~##

இதுவரை எத்தனையோ குரங்குப் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் பலரையும் வெகுவாகக் கவர்ந்து இருக்கிறது. அதற்குக் காரணம், முதல் முறையாக முழு அளவில் இதில் பயன்படுத்தி இருக்கும் Motion Capture Technology என்னும் தொழில் நுட்பம்தான்.

படத்தில் ஏகப்பட்ட சிம்பன்சிகள். ஆனால், ஒன்று கூட நிஜம் இல்லை. நடிகர்களை குரங்கு போல நடிக்க வைத்து, அந்த உடல் அசைவுகளை  குரங்கு உருவங்களுக்கு இடம் மாற்றி  தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர், 'ருபட் வயட்’  ''எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருந்தன. நிஜக் குரங்குகளை நடிக்க வைப்பது அல்லது Motion Capture Technology பயன்படுத்துவது. நிஜக் குரங்குகளைப் பயன்படுத்துவது பல விதங்களில் பிரச்னை தரக்கூடிய விஷயம் என்பதால், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினோம். ஒரு விதத்தில் நம்முடைய சகோதரர்களான சிம்பன்சிகளைத் துன்புறுத்தாமல் படம் எடுத்து இருக்கிறோம், என்பதில் மனத் திருப்தி'' என்கிறார்.

சிலிர்க்க வைத்த சிசர் !

பொதுவாக அனிமேஷன் மற்றும் நிஜ கேரக்டர்கள் இணைந்து நடிக்கும் படங்களை தனித் தனியாகப் படம் பிடித்து இணைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரே நேரத்தில் அனைத்தையும் செய்துள்ளார் கள்.

இந்தப் படம் முழுக்க நிஜம் மற்றும் செட்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. Motion Capture Technology எனும் கருவியைப் பயன்படுத்தி படம் எடுத்துள்ளனர். படத்தின் முக்கியக் கதாபாத்திரமான சீசர் எனும் சிம்பன்சிக்கு உடல் அசைவு  களைத் தந்தவர், ஹாலிவுட் நடிகர் ஆன்டி செர்கிஸ். ''நான் 'கிங் காங்’ படத்தில் நடித்தபோது என்னுடைய முக பாவனைகளை அதற்கு பயன்படுத்தினார்கள். இதற்காக என் முகத்தில் 132 மார்க்குளைப் பதித்து, முகத்தில் இருக்கும் தசை நார்களின் அசைவுகளையும் பதிவு செய்தார்கள். ஆனால், 'அவதார்’ படம் வந்த பிறகு தொழில்நுட்பம் மாறிவிட்டது. ஹெட் மவுன்டட் கேமரா மூலம் மிகவும் எளிதாக முக அசைவுகளைப் படம் பிடிக்க முடியும். ஒரே நேரத்தில் எவ்வளவு நடிகர் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.

முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிப்புறப் படப்பிடிப்புகளை சர்வ சாதாரணமாக நடத்தினோம். நிஜமான காடுகளிலும், பாலங்களிலும் படம் பிடித்தோம்'' என்று பெருமையுடன் சொல்கிறார் ஆன்டி செர்கிஸ்.

படத்தின் கதை எளிமையானதுதான்...சிலர் செய்த ஆராய்ச்சியால்  மனிதனைப் போல் அறிவு பெறுகிறது ஒரு சிம்பன்சி. எதிர்பாராமல் அது இறந்துவிடுகிறது. அதற்குப் பிறந்த குட்டியே சீசர். தாயின் ஜீன்கள் மூலம் இயல்பாகவே அறிவாளியாக இருக்கிறது. குரங்குகளை வைத்து ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் நடத்தும் அட்டகாசங்களை சீசர் கவனிக்கிறது. பொறுக்க முடியாமல் மற்ற குரங்குகளை வைத்து, புரட்சி செய்கிறது சீசர்.  கடைசியில் தன் சகாக்களுடன் காட்டுக்குள் சென்று விடுகிறது.

சிலிர்க்க வைத்த சிசர் !
சிலிர்க்க வைத்த சிசர் !

அதை, குழந்தை போல் பாசத்துடன் வளர்த்த ஆராய்ச்சியாளர் சீசரைத் தேடி வருகிறார். தன்னோடு வந்துவிடுமாறு சொல்கிறார். அதற்கு, ''இதுதான் சீசர் வீடு'' என்று மனிதக் குரலில் பதில் சொல்லும் போது தியேட்டரே கை தட்டலால் அதிர்கிறது. மனிதக் குரங்கின் பரிணாம வளர்ச்சியைச் சொல்லும் சிலிர்க்க வைக்கும் அற்புதக் காட்சி.

'இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என் வீட்டு நாயுடன் வாக்கிங் செல்வதையே  தவறாக உணர்க்கிறேன். அதன் சுதந்திரத்தைப் பறிக்க எனக்கு ஏது உரிமை?’ என்பது போன்ற  கமென்ட்கள் இணையத்தில் உலா வருகிறது.  இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றியை இந்த மூன்று வரியே தெளிவாகச் சொல்கிறது.

சிலிர்க்க வைத்த சிசர் !