Published:Updated:

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

Published:Updated:

கே.யுவராஜன்

மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டார் அண்ணா ஹஜாரே. ''மேலும் பல விஷயங்கள் இந்தியாவில் மாற வேண்டும். அதற்காகத் தொடர்ந்து போராடுவேன்'' என்றும் சொல்லி இருக்கிறார். இந்த நேரத்தில், அண்ணா ஹஜாரே 'சுட்டிகளுக்காக தலைமை தாங்கி போராட்டம் நடத்தினால், என்ன விஷயங்களுக்காக போராடலாம்?’ என்று சில பிரபல சுட்டிகள் சொல்கிறார்கள்.

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !
##~##

''நம்ம நாட்டுல எத்தனையோ திறமையான சுட்டிங்க இருக்காங்க. விளையாட்டுல நம்ம நாட்டுக்கு வருங்காலத்துல புகழ் சேர்க்கும் ஆர்வத்தோடு உழைக்கறாங்க. ஆனா, வறுமையால் தங்கள் திறமையை வளர்த்துக்க முடியாம இருக்கு. சரியான ஸ்பான்சர் கிடைக்கறதில்லை. இந்த மாதிரி சுட்டிகளை முன்னேற்ற அரசாங்கம் நிறைய செய்யணும். அதுக்காக ஒரு போராட்டம் நடத்தினா நல்லா இருக்கும்.'' என்கிறார் ஏர்டெல் ஜூனியர் சூப்பர் சிங்கர் மூலம் அசத்திய ஸ்ரீகாந்த்.

''குடிசை வீடுகளைப் பார்க்கிறப்ப எல்லாம் மனசுக்கு கஷ்டமா இருக்கும். ஒரு தீபாவளி சமயத்துல நான் விட்ட ராக்கெட், ஒரு குடிசையில போய் விழுந்துடுச்சு.  இப்பவும் தீபாவளி முடிஞ்ச பிறகு பேப்பர்ல குடிசைகள் எரிஞ்ச விஷயத்தைப் படிக்கிறப்ப கஷ்டமா இருக்கும். குடிசைகள் இல்லாத இந்தியா உருவாகணும். அவங்களுக்கு அரசாங்கம் ஹவுசிங் போர்டு மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்குது. அதை இன்னும் சிறப்பா, முறைகேடுகள் இல்லாம செய்யணும். அண்ணா ஹஜாரே தலைமை தாங்கினா நானும் கலந்துப்பேன். ஏழைகளின் நிலையும் மாறும்... சுட்டிகளும் டென்ஷன் இல்லாம தீபாவளியைக் கொண்டாடலாம் இல்லையா'' என்கிறார் 'பசங்க’ படத்தின் கிஷோர். (அதாங்க... அன்புக்கரசு ஐஏஎஸ்).

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

அன்புக்கரசுடன் படத்தில் மல்லுக்கட்டிய ஜீவா என்கிற ஸ்ரீராம் என்ன சொல்கிறார்? ''சுற்றுச்சூழல் எப்படி எல்லாம் பாதிக்குது? அதைத் தடுக்கறது எப்படி என்கிற மாதிரி விஷயங்களை டிஸ்கவரி சேனலில் பார்ப்பேன். சில வல்லரசு நாடுகளின் மக்காத கழிவுகளை, நம் நாட்டில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்றாங்க. அதை எல்லாம் தடை செய்யணும். இதுக்காக ஹஜாரே போராட்டம் நடத்தினா கலந்துப்பேன்'' என்கிறார்.    

பத்துவித கவனகம் மூலம் எல்லோரையும் கவர்ந்து வருபவர் 'திருக்குறள்’ திலீபன். நமது  சீனியர் சுட்டி ஸ்டாரும்கூட. ''எனக்கு நீண்ட நாளாவே ஒரு வருத்தம் உண்டு. நம் தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல சிறப்புகள் உள்ளது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் பலரும் ஆங்கிலம் கலந்து பேசுறாங்க. இது நம் மொழியை  சிதைக்குது. இதை தப்புன்னு யாரும் உணர்வதே இல்லை. தங்கள் சொத்துக்களை கவனமா        பாதுகாக்கிற மாதிரி ஒவ் வொருத்தரும்  தாய் மொழியை சிதைக்காமல் பேசணும்... பாதுகாக்கணும். இதுக்காக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹஜாரே தலைமையில் போராடுவேன்'' என்கிறார்.

சர்ஃப் எக்ஸல் நடத்திய போட்டியில் கதை எழுதி, ஒரு விளம்பரப் படத்தை இயக்கியவர் அபிநயா. ''அப்பாவோடு வெளியே போறப்ப, சாலை ஓரம் நோயால் படுத்து இருக்கிறவங்களைப் பார்ப்பேன்.  வசதி இல்லாததால ஆஸ்பிடலுக்குப் போகாம இருக்காங்கன்னு அப்பா சொல்வார். அரசு மருத்துவமனைகள் பல இடங்களில் சரியா இருக்கிறது இல்லை. எல்லோருக்கும் தரமான, இலவச மருத்துவம் கிடைச்சா இது மாறும் இல்லியா? இதுக்காக போராட்டம் நடத்தினா, நானும் அண்ணா ஹஜாரே தாத்தாவோடு இணைவேன்'' என்கிறார் இந்தச் சுட்டி இயக்குனர்.

ஹஜாரே தலைமையில் எங்கள் போராட்டம் !

விளம்பரப் படங்களில் வரும் சுட்டி களுக்கு பின்னணிக் குரல் கொடுப்பவரும், சினிமா சுட்டிப் பாடகியுமான ஹரிணி, ''அண்ணா ஹஜாரேக்கு முதல்ல ஒரு சல்யூட்'' என்கிறார். ஹரிணி பத்தாம் வகுப்பில் 'டாப் ரேங்க்’ எடுத்து, குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் கையால் பரிசு பெற்றவர். ''கல்விதான் எல்லோரையும் உயர்த்தும் மந்திரக்கோல். ஆனா, இன்னிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியா முழுக்க இருக்காங்க. இதை ஒழிக்க எல்லோருக்கும் ஆரம்பம் முதல் பட்டப்படிப்பு வரை இலவசமா கல்வி வழங்கணும். அடுத்து, மின்சாரத்தையே பார்க்காத கிராமங்கள் இந்தியாவில் இருக்கு. இதனால அதிகம் பாதிக்கிறது படிக்கிற சுட்டிகள்தான். மின்சாரத் தட்டுப் பாட்டை ஒழிக்கணும். இதுக்காக அவர் போராட்டத்தில் இறங்கினா, நானும் கலந்துப்பேன்'' என்கிறார் ஹரிணி.

படிப்போடு, சமூக அக்கறை உள்ள விஷயங்களிலும் நாங்கள் கில்லிகள்தான் என்பதை நிரூபிப்பதுபோல் இருந்தது சுட்டிகளின் பேச்சு. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து அண்ணா ஹஜாரேக்கு 'ஜெ’ போட்டார்கள்.