Published:Updated:

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !

Published:Updated:

ஜி.த்வஜஸ்வி
ராஜாஜி வித்யாலாயா.
திருச்சி

 மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,

தங்கள் நல்லாட்சியை விரும்பும் மாணவன் சஞ்சீவி எழுதும் கடிதம்.  நண்பர்களுடன் பள்ளியில் பேசிக்கொண்டு இருந்தபோது, உங்களைப் பற்றியும் பேச்சு வந்தது. அதனால், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !
##~##

தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவச கிரைண்டர், மிக்ஸி திட்டத்தை செப்டம்பரில் தொடங்குவதாக அறிவித்து இருக்கிறீர்கள். 'உழைத்து வாழ வேண்டும்’, 'சோம்பேறியாக இருக்காதே’ என்று பள்ளியில் பாடம் நடத்துகிறார்கள். நண்பர்களிடம் ஒரு பேனாவோ, பென்சிலோ வாங்கினால் வீட்டில் திட்டுகிறார்கள். ''உனக்கு வேணும்னா எங்களைக் கேளு... நாங்க வாங்கித் தர்றோம்.'' என்கிறார்கள். இதெல்லாம் சுட்டிங்களான எங்களுக்கு மட்டும்தானா?  'இது வாங்கினா அது இலவசம்... அது வாங்கினா இது இலவசம்’னு பல கம்பெனிகள் விளம்பரம் தருது. மக்களும் வாங்குறாங்க.  தனியார் நிறுவனங்கள்தான் இப்படி செய்யுதுனு நினைச்சா, அரசாங்கமும் செய்வது சரியா?

கடந்த ஆட்சியில் வெகுநேரம் கூட்டத்தில் நின்று வாங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியே எங்கள் வீட்டில் பரணில் இருக்கு. எங்கள் வீடும் ரொம்பச் சின்னது. இருக்கிறதே ஒரு அறைதான். சரி, ஏன் வாங்கினே என்கிறீர்களா? வேறு யாராவது எங்கள் பெயரில் வாங்கிட்டுப் போயிடக் கூடாதே!

முதலமைச்சருக்கு சுட்டி எழுதும் கடிதம் !

இப்ப கிரைண்டர், மிக்ஸி கொடுக்கிறீங்க.  சீக்கிரம் சமையல் முடிக்க அது எல்லாம் தேவைதான். ஆனால்,  எங்கள் வீட்டுல ஏற்கெனவே இருக்கு. நீங்க கொடுக்கிறதை எங்கே வைக்கிறது? இப்பவே டிவி, பீரோ, கட்டில் எல்லாம் இடத்தை அடைச்சது போக, அங்கே இங்கே தொத்திக்கிட்டுத்தான் படிக்கிறோம். மேலும் மிக்ஸி, கிரைண்டர்களில் மறுசுழற்சி செய்ய இயலாத மக்காப் பொருள்களும் இருக்காம். புதுசு கிடைச்சதும் பழசை எல்லோரும் வெளியில அனுப்பினா, அது சுற்றுச்சூழலையும் பாதிக்குமே!

தேவையற்ற பொருள் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும்,  வைத்திருப்பது அறிவுடைமையாகாது. நீங்க பெரியவங்க. இதைச் செய்யா தீங்க... அதைச் செய்யாதீங்கனு நாங்க சொல்ல முடியாது. குறைந்தபட்சம் இந்த இலவச மிக்ஸி, கிரைண்டர் எனக்கு வேண்டாம்னு நான் முடிவு எடுக்கலாம் இல்லியா... எங்க அப்பா, அம்மாகிட்டேயும் சம்மதம் வாங் கிட்டேன். இந்த கடிதத்துடன் எங்கள் வீட்டு ரேஷன் கார்டின் நகலை இணைச்சு இருக்கேன். எனது கோரிக்கையை ஏற்று, இந்தக் கார்டுக்கு மட்டுமாவது இலவசம் கொடுக்க வேண்டாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். இப்படி இன்னும் சிலர் முன் வந்தால், இவ்வாறு மீதமாகும் பணம் வேறு நல்ல திட்டங்களுக்கு உதவும் அல்லவா! இப்போது சட்ட மன்றத்தில், 'தமிழர்கள் யாரிடமும் கையேந்தாத நிலை வரவேண்டும் . அதுவும் நான் இருக்கும் காலத்திலேயே நடத்திக் காட்டுவேன்’ எனச் சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் அதைச் செய்யுங் கள். அரசின் நல்ல திட்டங்களால் வறுமை நீங்கி, அனைவரும் சுயமரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ விரும்பும் சுட்டியின் வணக்கம்.!

தங்கள் உண்மையுள்ள,
சு.வெ.சஞ்சீவி-(VIII),
இராஜாஜி வித்யாலயா, திருச்சி-17.