பிரீமியம் ஸ்டோரி

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கிட்ஸ் கிச்சன்

நான்தான் உங்க ரித்திகா! ஒவ்வொரு இதழிலும் உங்களுக்குப் புதுசா ஒரு ரெசிப்பி செய்யக் கத்துத் தரப்போறேன்.

முதலில் ஒரு ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாமா?

திருவையாறு, தஞ்சாவூர் பகுதிகள்ல, அசோகா அல்வா ரொம்ப ஃபேமஸ். அதை சிம்பிளா செய்யலாம்.

அசோகா அல்வா!

தேவையானவை: கோதுமை மாவு  ஒரு கப், சர்க்கரை  ஒரு கப், நெய்  அரை கப், சுடுதண்ணீர்  ஒரு கப், ஏலக்காய்த் தூள்  ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு  5, கிஸ்மிஸ் பழம் (உலர்ந்த திராட்சை)  5.

செய்முறை:

• அடுப்பில் கனமான கடாயை வெச்சு, நெய்யை ஊத்தி, அது சூடானதும் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு, பொன் நிறமாக வறுத்துத் தனியாக எடுத்துவெச்சிடுங்க.

• மிதமான தீயில் கோதுமை மாவைக் கடாயில் கொட்டி, நெய் சேர்த்துக் கிளறுங்க.

• 10 நிமிஷம் கழிச்சு, ஒரு கப் சூடான தண்ணீர் சேர்த்துக் கிளறணும்.

• ஏலக்காய்த் தூள் சேர்த்துக்கணும்.

• நல்லா, கெட்டியாக வந்ததும், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறுங்க. (எல்லாத்தையும் பொறுமையா, ஜாக்கிரதையா செய்யணும்).  

• சர்க்கரை கரைஞ்சு, 5  10 நிமிஷங்கள்ல அல்வா நல்லா வெந்துவிடும்.

• ஒரு ஸ்பூன் நெய்யை ஒரு தட்டில் தடவி வெச்சுக்குங்க. அம்மா உதவியோடு, அல்வாவை இறக்கி, தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸை மேலே தூவி அலங்கரிச்சிடுங்க.

ஆஹா... அசோகா!

- மித்ரா

படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு