Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

சுட்டி ஸ்டார் நியூஸ்

Published:Updated:

வாசனைப் பொருள் வேண்டாம்!

வன உயிரினங்களை ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் காடுகளில் கேமராக்கள் பொருத்தப்படும். ஆனால், கேமராவுக்கு அருகே விலங்குகளை வரவைத்து, பதிவுசெய்வது அத்தனை எளிதான விஷயம் இல்லை. ஆராய்ச்சியாளர்களின் 10 ஆண்டு முயற்சிக்குப் பின், இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ், நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியத்தில் 

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(National history museum of Los Angeles) உள்ள கேமராவில், ஒரு வாசனைப் பொருளைத் தடவிவைத்தனர். பெரும்பாலும் கேமராக்களில் சிக்காத ஜாகுவார், அந்த வாசனையால் ஈர்க்கப்பட்டு, கேமராவை நோக்கி வந்தது. அதிக நேரம் அங்கேயே நின்றது. காடுகளுக்குள்  செல்லும்போது,  தயவுசெய்து வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தாதீர்கள். அதனால், எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

க.ஆனந்தி

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காந்திஜி சாலை, ஈரோடு.

மிகப் பெரிய செயற்கை நீரூற்று!

சுட்டி ஸ்டார் நியூஸ்

உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று, ரோமில் உள்ள ட்ரேவீ நீரூற்று (Trevi Fountain). இந்த நீரூற்றுக்குத் தேவையான நீர், 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. கி.மு.19-ல், இதை உருவாக்கத் திட்டமிடப்பட்டதாம். இப்போது இருக்கும் நீரூற்று, நிகோலா என்பவரால் 1732-ல் ஆரம்பிக்கப்பட்டு 1762 முடிக்கப்பட்டது. இதன் நடுவில், கடலின் அரசனாகக் கருதப்படும் நெப்டியூனின் சிலை, ரதத்தில் இருப்பது போல காட்சி அளிக்கிறது.

தா.அரவிந்த கணேஷ்

பிரான்சிஸ் சேவியர் பள்ளி,  திருநெல்வேலி.

ஒரே தேசியப் பறவை!

சுட்டி ஸ்டார் நியூஸ்

ஒரு பறவை, ஒரு நாட்டுக்கு மட்டும்தான் தேசியப் பறவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆஃப்கானிஸ்தான், ஜெர்மனி, மெக்சிகோ ஆகிய நாடுகளின் தேசியப் பறவையாக, கோல்டன் ஈகிள் (Golden Eagle) உள்ளது. ஜாம்பியா, ஜிம்பாப்வே, நமீபியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் தேசியப் பறவையாக, ஆஃப்ரிகன் ஃபிஷ் ஈகிள் (African Fish Eagle) உள்ளது. பெலாரூஸ் (Belanus) மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் தேசியப் பறவையாக செங்கால் நாரை உள்ளது.

செ.சுபஸ்ரீ

பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிங்கம்புணரி, சிவகங்கை.

ரோபி  100

சுட்டி ஸ்டார் நியூஸ்

சமீபத்தில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 100 ரோபோக்கள் அழகாக நடனமாடி, காண்போரைக் கவர்ந்தன. குழந்தையைப் போன்று குட்டியூண்டாக இருக்கும் இந்த ரோபோவின் பெயர், ரோபி. 75 பாகங்களால் வடிவமைக்கப்பட்டது. ஒன்றின் விலை, 1,200 டாலர். 60,000 ரோபிக்களைத் தயார்செய்திருக்கிறார்கள். தன்னை வாங்கிச் செல்பவருக்கு நடனமாடி மகிழ்விக்கக் காத்திருக்கின்றன இந்த ரோபி ரோபோக்கள்.

பா.பவன் சுப்பு

பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி ஸ்கூல், திருவான்மியூர்,

சென்னை-41.

இன்றைய இந்தியா!

சுட்டி ஸ்டார் நியூஸ்

குடியரசு நாடுகளின் வரிசையில்  முதல் இடம்

மக்கள் தொகையில்  இரண்டாம் இடம்

ராணுவ பலத்தில்  மூன்றாம் இடம்

அணுசக்தியில்  நான்காம் இடம்

விண்வெளி ஆய்வில்  ஐந்தாம் இடம்

அறிவியல் தொழில்நுட்பத்தில்  ஆறாம் இடம்

பரப்பளவில்  ஏழாம் இடம்.

சிசு.நந்தகிஷோர்

ஸம்ஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி, புதுக்கோட்டை.

ஹலோ!

சுட்டி ஸ்டார் நியூஸ்

'ஹலோ’ என்ற வார்த்தையை ஆரம்ப காலத்தில், வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் பயன்படுத்திவந்தனர். தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, எதிர்முனையில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க இயலாது என்பதால், ஒரு நல்ல வார்த்தையைக் கூறி, உரையாடலைத் தொடர நினைத்தார் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். அந்த வார்த்தைதான் 'ஹலோ’. அவர் கூறியதையே  இன்றும் பின்பற்றுகிறோம்.

ஆர்.அபிஷேக்

வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துடியலூர், கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism