Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அமோல் ஆக்ஹிஆயிஷா இரா.நடராசன், கண்ணா

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அமோல் ஆக்ஹிஆயிஷா இரா.நடராசன், கண்ணா

Published:Updated:

ன்புள்ள அமோல் ஆக்ஹி (Amol Aghi),

வீரவணக்கம்.

உங்களைப் பற்றி நினைக்கும்போது, உடம்பு சிலிர்க்கிறது. உங்கள் வீரமும் சமயோஜித அறிவும் போற்றத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அப்போது நீங்கள் 9-ம் வகுப்பு முடித்து, விடுமுறையில் இருந்தீர்கள். உங்கள் ஊர், ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட். எங்களுக்கு, பானிபட் என்றதும் யுத்த பூமி என்றுதான் ஞாபகத்துக்கு வரும். பாபர்இப்ராஹிம் லோடி இடையே நடந்த முதல் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போரில் வென்று, மகா அக்பர் ஆட்சிக்கு வந்தார் எனப் படித்திருக்கிறோம். ஆனால், இதை எல்லாம் மிஞ்சிய வீர யுத்தம் ஒன்று, 2006 நவம்பர் 14 அன்று நடந்தது. தனி ஒரு ஆளாக அதை நடத்திய வீரர் நீங்கள்தான் அமோல்.

அன்றைய நள்ளிரவு. ஊரே உறங்கிக்கொண்டிருந்தது. சலசல சத்தமும் உங்களை உறக்கத்தில் இருந்து எழுப்பின. ஜன்னல் வழியே வெளியே பார்த்தீர்கள். நீங்கள் வசித்த கீதா காலனி, இரவுப் பூச்சிகளின் சலனத்தில் கிடந்தது. சற்று தொலைவில் மறுபடியும் சலசல சத்தம். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த அப்பா, அம்மா, தம்பியைக் கடந்து, வாசல் கதவை லேசாகத் திறந்து பார்க்கிறீர்கள். சற்று தொலைவில், ஏழு பேர் இருட்டில் பதுங்கிப் பதுங்கி வந்தார்கள்.

சமீபமாக, பானிபட் நகரத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்டன.பல இடங்களில் கைவரிசை காட்டி, போலீஸுக்கு 'தண்ணி காட்டி’ வந்தார்கள். நேற்றுகூட  பானிபட்டின் பிரபலமான வங்கி ஒன்றில், துப்பாக்கி முனையில் பல லட்சம் கொள்ளை அடித்துத் தப்பியிருந்தார்கள்.

அத்தகைய கொள்ளையர்கள்தான் இவர்கள் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு கயிறு போட்டு ஏறத்தொடங்கி இருந்தார்கள்.

அமோல், நமக்கேன் வம்பு என நீங்கள் வீட்டுக்குள் சென்று கதவை மூடியிருக்கலாம். அல்லது அப்பாவிடம் சொல்லலாம் எனச் சென்றிருக்கலாம். ஆனால், அதற்குள் அவர்கள் தப்பிவிடக் கூடாது என முடிவு செய்தீர்கள்.

பக்கத்தில் கட்டட வேலைக்காக ஜல்லிகள் குவிக்கப்பட்டிருந்தன. சட்டென கைகளில் கற்களை அள்ளி, கால்சராய் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அவர்களை நோக்கி ஓடினீர்கள். கற்களால் தைரியமாகத் தாக்கினீர்கள்.

அவர்கள் சுதாரிப்பதற்குள், இரண்டு பேரின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது. சுவர் ஓரம், படிக்கட்டு அடியில் ஒளிந்துகொண்டு, மீண்டும் மீண்டும் நிகழ்த்திய யுத்தம் அது.  வலி தாங்காமல் அவர்கள் திருடுவதைக் கைவிட்டுவிட்டு, உங்களைத் துரத்தினார்கள்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

அப்போதும் நீங்கள் பயப்படவில்லை. மிகத் தந்திரமாக ஒரு வேலை செய்தீர்கள். வீடுகள் அதிகம் இருந்த ஒரு மையப் பகுதிக்குப் போக்குகாட்டி, அவர்களைப் பின் தொடர வைத்தீர்கள். சரியான இடத்தில் நின்று, 'எல்லாரும் வாங்க. ச்சோர்... ச்சோர் (திருடர்கள்)’ என்று கூச்சல் போட்டீர்கள். வீடுகளில் படபடவென விளக்குகள் எரிந்தன.

கோபம்கொண்ட அந்தக் கயவர்கள், உங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டார்கள். நீங்கள் துடிதுடித்துத் தரையில் விழுந்தீர்கள். அந்தக் கொள்ளையர்களை ஒரு குழு பிடித்தது. ஒரு கூட்டம் உங்களிடம் ஓடிவந்தது. எவ்வளவோ விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் உங்களை காப்பாற்ற முடியவில்லையே அமோல்.

15 வயது மாவீரனே... வெறும் கற்களால் கொள்ளையர்களை வீழ்த்திய சூரனே... உங்கள் வீரத்தைப் பாராட்டி, 2007-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், வீரதீரக் குழந்தைகளுக்கான 'பாபு கெய்தானி விருது’ உங்கள் பெற்றோரிடம் வழங்கி, நாடே வணங்கி நின்றது.

மாவீரனே அமோல், உங்கள் வீரத்துக்கு எங்கள் சல்யூட்.

இப்படிக்கு,

சுட்டி இந்தியா.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism