Published:Updated:

13 வயதினிலே...

-டீன் ஏஜ் ஹெல்த் டிப்ஸ்பிரேமா நாராயணன், எம்.உசேன்

13 வயதினிலே...

-டீன் ஏஜ் ஹெல்த் டிப்ஸ்பிரேமா நாராயணன், எம்.உசேன்

Published:Updated:

ஹாய் குட்டி ஃப்ரெண்ட்ஸ்...

13 வயதினிலே...

நான், டாக்டர் ரெமா சந்திரமோகன். சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகவும் குழந்தைகள் நல மருத்துவராகவும் இருக்கேன். சுகாதாரம், ஆரோக்கியம் பற்றி உங்க பெற்றோரும் ஆசிரியர்களும் நிறைய சொல்லியிருப்பாங்க. இப்போ, நான் சொல்லப்போவது அதுக்கும் மேலே... அவசியம் தெரிஞ்சுக்க வேண்டியவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வயசுக்கு வந்தால்தான் நீங்க நார்மல்!

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் இருவருமே 13 வயதில் பருவம் அடைவாங்க. குறிப்பாக, சிறுமிகள் 12 வயதில் 'பருவமடைதல்’ (Puberty) பற்றித் தெரிஞ்சுக்கிறது அவசியம். இது, பயப்படவோ, கூச்சப்படவோ வேண்டிய விஷயம் இல்லை. 'நீங்க, ஆரோக்கியமான பெண்ணாக வளர்ந்துட்டு இருக்கீங்க’ என்பதை உணர்த்தும் உயிரியல் நிகழ்வுதான் 'வயசுக்கு வர்றது’, 'பெரியவளாதல்’ எனப்படும் பருவம் அடைதல்.

பருவ வயதாகும்போது, நிகழும் ஹார்மோன் மாறுதல்களால், பெண்களின் அடிவயிற்றில் இருக்கும் கர்ப்பப்பையின் உள்சுவரை ஒட்டியிருக்கும் உட்புறச் சவ்வு (Endometrium) பிரிந்து வரும். அந்தச் சமயத்தில், மூன்று நாட்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். மீண்டும் அந்தச் சவ்வு வளரும்போது, ரத்தப்போக்கு நின்றுவிடும்.

13 வயதினிலே...

நான் வளர்கிறேனே மம்மி!

இந்த வயதில்தான் இரு பாலருக்குமே அதிகபட்ச உடல் வளர்ச்சி, உறுப்புகள் வளர்ச்சி, ரோம வளர்ச்சி மற்றும் உயரம் போன்ற மாற்றங்கள் ஏற்படும். சிறுமிகள், அம்மாக்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்துதலோடு, பொருத்தமான பருத்தி உள்ளாடைகளை (Teen age inners) வாங்கி அணிய வேண்டும். நம் நாட்டின் வெப்ப நிலைக்கு, பருத்தி உள்ளாடைகள் மற்றும் ஆடைகளே நல்லது. உங்கள் உள்ளாடைகளை நன்கு துவைத்து, வெயிலில் காயப்போட வேண்டும். அப்போதுதான் எந்தவிதமான நோய்த் தொற்றும் அணுகாது.

தடுப்பூசி முக்கியம்!

12 வயதில், பெண் குழந்தைகளுக்கு பிறிக்ஷிஎன்ற தடுப்பூசி ரொம்ப அவசியம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஊசி அது.

இரும்புச்சத்து அவசியம்!

13 வயதினிலே...

பருவமடையும் 12, 13 வயதில் இருந்தே இரும்புச்சத்து கட்டாயம் தேவை. நீங்கள் தினசரி சாப்பிடும் உணவிலேயே, வெல்லம், கேழ்வரகு, கீரை வகைகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.  இரும்புச்சத்து குறையும்போது, கவனக்குறைபாடு, பதின் வயது ரத்தசோகை, சோர்வு ஏற்படும்.

அந்தரங்க சுத்தம் அவசியம்!

அந்தரங்க சுகாதாரம் (Personal Hygiene), மிகவும் அத்தியாவசியம். பாத்ரூம் போய்வந்ததும் கைகளை  சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். வெளியே சென்று வந்ததும்... கால்கள், கைகள், முகத்தைக்  கழுவுங்கள். பருவ வயதில், ஹார்மோன்களின் விளைவால், உடல் அதிகமாக வியர்த்து, துர்நாற்றம் வீசும். தினமும் இரண்டு வேளை குளிக்கலாம். தேவை இல்லாத ரோமங்களை முறையாக நீக்கி, துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.

13 வயதினிலே...

முடி கொட்டினால் கவலை வேண்டாம்!

13, 14 வயதில் சிலருக்கு முடி கொட்டுவது இயல்பு.  கவலைப்பட்டால், இன்னும் அதிகமாகக் கொட்டும்.  ஸ்பெஷல்  எண்ணெய், கிரீம், வைட்டமின் சப்ளிமென்ட்  எதுவும் தேவை இல்லை. சரிவிகித உணவு மூலமே சரி செய்யலாம். பருப்பு வகைகள், தானியங்கள், முட்டை, மீன், பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள்.

பிரேக்ஃபஸ்ட் மஸ்ட்!

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பலர் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவதே கிடையாது. இது ரொம்பத் தப்பு. ஸ்கூல்விட்டதும், கூல்டிரிங்ஸ், சிப்ஸ், கேக் சாப்பிடுறீங்க. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிக உடல் பருமன், டயாபடீஸ், கேன்சர் எனப் பல நோய்கள் வரலாம். ஸ்வீட்ஸ், ஐஸ்கிரீம், கேக் போன்ற உணவுகளை எப்போதாவது எடுத்துக்குங்க. தொடர்ந்து வேண்டாம். நான்வெஜ் உணவுகளை அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கணும். மீன், இறால், முட்டை ஆகியவற்றை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். பொறித்த அசைவ உணவைவிட, வேகவைத்ததே சிறந்தது.

13 வயதினிலே...

எடை கூடும், ஜாக்கிரதை!

உயர் வகுப்புகளுக்குப் போகப்போக, படிப்பதற்கு நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருக்கும். உடல் உழைப்பு, விளையாட்டு குறைஞ்சிடும். அதனால், உடல் எடை அதிகரிக்கலாம். தினமும் காலை அல்லது மாலையில் 30 நிமிடங்கள் எக்ஸர்சைஸ் பண்ணியே ஆகணும். ஸ்விம்மிங், சைக்கிளிங், ஜாகிங், யோகா... இப்படி ஏதாவது ஒன்று.

பி.எம்.ஐ. பார்த்துக்குங்க!

இப்போதுள்ள குழந்தைகள் உயரமாக வளர்வதால், முன்பு மாதிரி, 16 வயசுக் குழந்தை 50 கிலோ எடை இருக்கும் எனச் சொல்ல முடியாது. உங்க ஃபேமிலி டாக்டரை அணுகி, பி.எம்.ஐ. (Body mass index) அளவைத் தெரிஞ்சுக்குங்க.

பல் பாதுகாப்பு

தினமும் இரண்டு தடவை பல் துலக்குங்க. ஒவ்வோர் உணவுக்குப் பிறகும், ஒரு பழம் சாப்பிட்டால், அதுவே உங்கள் பற்களைச் சுத்தம் செய்துவிடும். வருடத்துக்கு ஒரு முறை பல் பரிசோதனை பண்ணிக்கிறது நல்லது. இப்போ, பலர் 'க்ளிப்’ போட்டுக்கிறாங்க. அதை, டாக்டர் சொல்றபடி, சுத்தமாகப் பராமரிக்கணும்.

கண் பாதுகாப்பு

கண்களில் ஏதாவது பிரச்னை இருந்தால், பெரிய வகுப்புகளுக்குப் போறதுக்கு முன்னாலேயே

13 வயதினிலே...

பார்த்துடணும். 'சோஷியல் நெட்வொர்க்கிங்’ எனப்படும்  ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்களே பயன்படுத்த வேண்டும். நீங்கள் முற்றிலும் தவிருங்கள்.

நீங்கதான் ஆரோக்கியமான இந்தியா!

தினமும் சமச்சீரான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு, 7 மணி நேரத் தூக்கம், 30 நிமிடம் உடற்பயிற்சி, 3 முதல் 4 மணி நேரப் படிப்பு, நல்ல நண்பர்கள் வட்டம், ஏதேனும் ஓர் ஆரோக்கியமான பொழுதுபோக்கு (தோட்டக்கலை, புத்தகம் வாசித்தல், இசை, நடனம் போன்றவை)  இவை இருந்தால் போதும், நீங்கள் தான் வருங்கால ஆரோக்கிய இந்தியா!

மாடல்: ஆர்.ஆதித்யஸ்ரீ, கே.ஹரீஸ், ஆர்.ஆத்ரேயா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism