Published:Updated:

பென்டிரைவ்

பென்டிரைவ்

பென்டிரைவ்

பென்டிரைவ்

Published:Updated:
பென்டிரைவ்

ண்ண வண்ண பலூன்கள் பொள்ளாச்சியின் வானை அலங்கரிக்க, ஜனவரி 28 முதல் 31 வரை நடந்தது, சர்வதேச பலூன் திருவிழா. இந்தத் திருவிழாவில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து பலூன் ஓட்டிகள் வந்திருந்தனர். விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, 17ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெப்பக் காற்று பலூன்கள் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. சரணாலயம் என்ற அமைப்பைச் சேர்ந்த மாற்றுத்திறன் மற்றும் ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள்,

பென்டிரைவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெப்பக் காற்று பலூன்களில் 100 அடி உயரம் பறந்ததைப் பார்த்து, உற்சாகக் கூச்சலிட்டார்கள். தமிழ்நாடு சுற்றுலாத் துறை, க்ளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம் மற்றும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, இந்த பலூன் திருவிழாவை நடத்தினர்.

 - அ.சியாமளா கௌரி

படம்: த.ஸ்ரீநிவாசன்

 ப்பானில் உள்ள Mitsubishi Financial Group, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்க, ஏப்ரல் முதல் ரோபோவைப் பயன்படுத்தப்போகிறது. அந்த ரோபோவின் பெயர் Nao. 2006-ல், ஃப்ரான்ஸ் ரோபோட்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த அல்டேப்ரான் ரோபோட்டிக்ஸ் (Aldebaran Robotics) உருவாக்கியது. இதில், நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி இருக்கிறார்கள். 16 மொழிகளைப் பேசும் இந்த ரோபோட், வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படும்.

பென்டிரைவ்

 மீபத்தில், லண்டன் நகரத்தின்  சாலைகள், ரயில் நிலையம், ஷாப்பிங் மால், பப்ளிக் பார்க் என்று சுற்றித்திரிந்த துருவக் கரடி ஒன்றைப் பார்த்து, ஜர்க் ஆனார்கள் லண்டன்வாசிகள். பிறகுதான் அது, இயந்திரத்தில் இயங்கும் துருவக் கரடி  என்று தெரிந்தது. அப்புறம் என்ன?  அதனுடன் சேர்ந்து கொண்டு விளையாட்டு, செல்ஃபி என ஜாலியாக கொஞ்சி இருக்கிறார்கள். 'ஃபோர்டிடியூட்’ (Fortitude) என்ற புதிய சீரியலை மக்களிடம் பிரபலப்படுத்தச் செய்த ஐடியாவாம் இது.

பென்டிரைவ்

''ப்ளீஸ் அங்கிள்... ஹெல்மெட் போட்டுக்கிட்டு வண்டியை ஓட்டுங்க' என்று மழலைக் குரலில் சொல்லியபடி, துண்டுப் பிரசுரத்தை அளிக்கும் ஆகாஷை, சென்னை சாலைகளில் பார்த்திருக்கலாம். சிறுசேரி, பத்மாசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் ஆகாஷ், கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, இது வரை ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை அளித்து, மாபெரும் விழிப்புஉணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். ''ஒரு முறை என் அப்பாவோடு வண்டியில்

பென்டிரைவ்

போகும்போது, ஒரு அங்கிள் ஆக்ஸிடென்ட்டில் இறந்துட்டார். 'ஹெல்மெட் போட்டிருந்தால், அவர் பிழைச்சிருப்பார்’னு பேசிக்கிட்டாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சது. சனி, ஞாயிறுகளில் பகலிலும், வார நாட்களில் ஸ்கூல் முடிஞ்சு மாலை நேரத்திலும் இதைச் செய்துட்டு இருக்கேன்'' என்கிறார் ஆகாஷ்.                            

கு.முத்துராஜா  

படங்கள்: அ.பார்த்திபன்

 சூரியனை மிக அருகில் இருந்து பார்க்க ஆசையா? அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (Solar Dynamics Observatory) மூலம், சூரியனை ஆயிரக்கணக்கான காட்சிகளாக எடுத்து ஒன்று சேர்த்து, வீடியோவாகத் தயாரித்துள்ளது. அதை, மேரிலாந்தில் உள்ள நாசாவுக்குச் சொந்தமான Goddard Space Flight center's-ல், பார்வையாளர் பகுதியில் காட்சிப்படுத்துகிறது.  அங்கே சென்றால், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் உணர்வுடன், சூரியன் எப்படி இயங்குகிறது என்பதையும் பார்த்து ரசிக்கலாம். 

பென்டிரைவ்
பென்டிரைவ்

ரு கிரிக்கெட் மட்டையின் அளவு, 10 மாடி கட்டட உயரத்திலும் 950 கிலோ எடையிலும் இருந்தால்? 'அம்மாடியோவ்... அதைவெச்சு எப்படி விளையாடுறது?’ எனக் கேள்வி எழும். இது, விளையாடுவதற்கு அல்ல. 2015 ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிகளைப் பிரபலப்படுத்த, சர்வதேசக் கிரிக்கெட் வாரியம்  உருவாக்கிய, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மட்டை. 32 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம்கொண்ட இந்த மட்டை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில், உலகக் கோப்பை முடியும் வரை மக்கள் பார்வைக்காக இந்த மெகா கிரிக்கெட் மட்டை வைக்கப்பட்டு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism