Published:Updated:

”வெளிப்படையா இருங்க அப்பா!”

பின்னி எடுத்த சுட்டி ஸ்டார்ஸ்சி.மீனாக்‌ஷி சுந்தரம், சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன்

”வெளிப்படையா இருங்க அப்பா!”

பின்னி எடுத்த சுட்டி ஸ்டார்ஸ்சி.மீனாக்‌ஷி சுந்தரம், சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன்

Published:Updated:

வெடிச்சிரிப்பும் அறிவுத்தேடலுமாக, ஒருநாள் முழுதும் சுட்டி ஸ்டார்களைக் கட்டிப்போட்டது, 'பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சி. தங்கள் நண்பர்களை மறுபடியும் சந்தித்த உற்சாகம் ஒவ்வொருவரின் முகத்திலும் மத்தாப்பூவாக ஒளிர்ந்தது.

2008-ல் சுட்டி ஸ்டாராக ஜொலித்து, விகடன் மாணவப் பத்திரிகையாளராக உயர்ந்து, விகடனின் நிருபர்கள் என்ற உயரத்தை எட்டியிருக்கும் சுட்டி ஸ்டார் சீனியர்ஸ் அபிநயா மற்றும் ஆஷிகா தங்கள் பேனா அனுபவங்களை கலகலப்பாகப் பகிர்ந்துகொண்டனர்.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் பேசிய சீனியர் ஆஷிகா, ''ஸ்கூல் நாளில் இருந்தே மேடையேறிப் பேசுறதுனா நடுங்கும். தப்பா பேசிடுவோமோனு பயப்படுவேன். ஆனா, சுட்டி ஸ்டாராக செலெக்ட் ஆனதும் பல விஷயங்கள் பாசிட்டிவ்வா நடக்க ஆரம்பிச்சது. நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பிச்சேன். பலரோடு பேசப் பேச என்கூடவே ஒட்டியிருந்த கூச்சம், பயம் எல்லாம் 'இனி இவகிட்டே வேலைக்கு ஆகாது’னு ஓடிப்போயிடுச்சு. பேனா பிடிக்கலாம் தந்த தன்னம்பிக்கையில், கல்லூரிக்குப் போனதும், விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்தேன். அதுக்கு முன்னாடி வரைக்கும், 'படிச்சு முடிச்சு இந்த வேலையைச் செய்யணும், அந்த வேலைக்குப் போகணும்’னு எதை எதையோ நினைச்சு, நானும் குழம்பி, வீட்டில் உள்ளவர்களையும் குழப்பிட்டு இருந்தேன். பிறகு, எல்லாவற்றிலும் சிறந்தது பத்திரிகையாளர் ஆவதுதான்னு தெளிவா முடிவு எடுத்தேன். இதோ, இப்போ உங்க முன்னாடி நிற்கிறேன். சுட்டி ஸ்டார் என்கிற இந்த ஆரம்பம், உங்க எல்லாருக்கும் ஒரு சுயமுன்னேற்றத்தைக் கொடுக்கும்'' என்றார்.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

அடுத்து வந்த அபிநயா, ''சுட்டி ஸ்டாரா ஆனபோது, எல்லார்கிட்டேயும் ரொம்ப சீன் போட்டேன். ஆனா, ரெண்டு மாதம் வரை நான் எழுதி அனுப்பின எதுவும் பப்ளிஷ் ஆகலை. அவ்ளோ அழுகை, சமாதானப்படுத்திக்க முடியலை. பிறகு, என்னோட கோஆர்டினேட்டர் நிறைய டிப்ஸ் கொடுத்தார். நமக்குப் பிடிச்சதை எழுதக் கூடாது. படிக்கிறவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதணும்னு புரிஞ்சது. பிறகுதான், எழுதினது வெளிவர ஆரம்பிச்சது. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும். கவலையேபடாதீங்க. நிறையப் படிங்க. அதுக்குள்ளே, உங்க கற்பனையைச் சேர்த்துப் பாருங்க. பிறகு, சொந்தமா எழுதுங்க. இங்கே இருக்கிற பெற்றோருக்கு ஒரு விஷயம்... உங்க குழந்தைகளின் கற்பனைக்கு முதல் ரசிகரா நீங்க இருங்க. அவங்களுக்காக நேரம் ஒதுக்கி, என்கரேஜ் பண்ணுங்க. ஏன்னா, ஒருத்தரின் முன்னேற்றத்தைப் பார்த்து, ஒரு துளிப் பொறாமையும் இல்லாமல் பூரிப்பது நிச்சயம் பெற்றோர் மட்டுமே' என்றதும் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

அடுத்த பாய்ச்சலாக, 'உன்னை அறிந்தால்’ எனும் நிகழ்ச்சி. ஹெலிக்ஸ் மனிதவள மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார், மைக் பிடித்தார். அவர் நடத்திய கலகல உரையாடலும், அவரது ஹேர் ஸ்டைலை சுட்டிகள் கலாய்த்ததும் செம கலாட்டா. பிறகு, அறிவுத்தேடலுக்குள் இழுத்துச் சென்றார்.

நம் ஒவ்வொருவரிடமும் புதைந்திருக்கும் 10 விதமான செயல்திறன்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார். ஒரு பறவையைப் பார்க்கும்போது, எப்படி எல்லாம் பார்க்க வேண்டும்? 'ஓரிகாமி’ எனும் காகித வடிவமைப்புக் கலையின் மூலம் யோகாவுக்கு இணையான ஒரு புதிய ஆற்றலை எப்படிப் பெறலாம்? நேர நிர்வாகம், எனப் பல விஷயங்களைப் பற்றி சொல்லச் சொல்ல, சுட்டிகள் கண்களில் வியப்பு.

''ஆறாம் வகுப்பில், இயற்பியலில் படிக்கும் அதே மின்னாற்றலை, 10ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கிறோம். இப்படி, கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஒரே திசையில் செல்வதுதான் நமது கல்வி முறையின் பெரிய குறை. இதிலிருந்து மாறுபட, டைவர்ட் திங்கிங்் எனப்படும் மாறுபட்ட முறைக்கு நாம் மாற வேண்டும்' என்றார் செந்தில்குமார்.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

பிறகு, சுட்டி ஸ்டார்களுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''இப்போ, உங்க பெயர், உங்கள் பலம், பலவீனம், உங்கள் வருங்காலக் கனவு போன்ற விஷயங்களை எழுத்துகளாகவோ, எண்களாகவோ இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். படங்களை வெட்டி ஒட்டியும், ஓவியமாக வரைந்தும் சொல்ல வேண்டும். யோசிப்பதைப் பொருத்தமட்டில் சரி, தவறு என எதுவும் இல்லை. இப்படித்தான் யோசிக்க வேண்டும் என்று தீர்மானிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, 'நீங்கள் அனைவரும் உங்கள் சிந்தனையை ஓவியமாகவும் காட்சியாகவும் வரையுங்கள். பிறகு அதைப் பற்றி விவாதிப்போம்' என்றார்.

சுட்டி ஸ்டார்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் களம் இறங்கினார்கள். தங்கள் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறந்துகொண்டிருக்கும் சமயத்தில், பெற்றோர்களுடன் தனியாக ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்தார் செந்தில்குமார்.

''குழந்தைகளை, நம்முடைய கருத்துகளை நிறைவேற்றும் பொம்மைகளாகப் பார்ப்பதும், மார்க் எடுக்கும் மெஷின்களாக மாற்றுவதும் நாம்தான்'' எனத் தொடங்கி, ஒரு மணி நேரம் விவாதம் நடந்தது.

பேக் டு சுட்டி ஸ்டார்ஸ்.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

ஒவ்வொரு சுட்டியும் தன் கற்பனையை உருட்டி, திரட்டி, செதுக்கிய சார்ட்டுகள் அந்த அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. சுட்டிகளையே, தங்களுக்குப் பிடித்த பிற ஓவியங்களைப் பார்த்து, பெயர்கள் மற்றும் அது சொல்லவரும் விஷயங்களைக் கண்டுபிடிக்கச் சொல்லி ஆர்வமூட்டினார் செந்தில்குமார்.

ஒவ்வொருவரும் கண்டுபிடித்த விதம், சரிதானா என அந்த ஓவியங்களுக்குச் சொந்தக்கார சுட்டி ஸ்டார்கள் சொன்ன விளக்கமும் கலகலப்பூட்டியது.

''இந்த ஸ்கூல், புக்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு, தள்ளிப்போய் இயற்கைக்குப் பக்கத்துல வாழ ஆசை.'

''என் அப்பாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனா, அந்தப் பாசத்தை வெளிப்படுத்த மாட்டேங்கிறார். அது ஏன்? அதனால், என்ன சாதிக்கப்போறீங்க? வெளிப்படையா இருங்கப்பா.'

”வெளிப்படையா இருங்க அப்பா!”

''எங்க குடும்பம் ரொம்பக் கஞ்சம். எதையும் முழுக் கொண்டாட்டமா செய்றது இல்லை. அதனால், எதையும் முழுமையா அனுபவிக்க முடியலை. அதைத்தான் நான் இங்கே ஓவியம் ஆக்கி இருக்கேன்' எனப் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

தங்கள் குழந்தைகளின் எண்ண வெளிப்பாடுகளைப் பெற்றோர்கள் சிரிப்பும் ரசிப்புமாகக் கவனித்ததும், உண்மையை ஒப்புக்கொண்டு மாற்றிக்கொள்வதாகச் சொன்னதும் நிகழ்ச்சியின் வெற்றி.

அடுத்த கட்டமாக, நம் தலைமுறைக் குழந்தைகளிடம் முற்றிலும் அந்நியப்பட்டு நிற்கும் ஒரு கலையான வீதி நாடகம். ஆழி.வெங்கடேசன் குழுவினரின் 'ஆயிரத்து ஓர் அரேபியன் இரவுக் கதைகள்’ நாடகம் தொடங்கியது.

அரசவைக் கோமாளி விருந்து சாப்பிடும்போது, தொண்டையில் மீன் முள் மாட்டி இறந்துவிடுகிறார்.  கோமாளியின் உடலைவைத்து பயில்வான், மருத்துவர், நாவிதர் எனப் பலரும்  பயந்துகொண்டே அடிக்கும் கூத்து, சுட்டி ஸ்டார்களைத் தொடர்ந்து சிரிக்க வைத்தது. கோமாளியாக நமது சுட்டி ஸ்டார் ஒருவரை நடிக்கவைத்து, கைத்தட்டலை அள்ளினார்கள். கடைசியில், கோமாளி சாகவில்லை... உயிரோடுதான் இருக்கிறார் எனக் கதை மாறியபோது, ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் கலந்து நாடகம் முடிந்தது.

நாடகம் முடிந்தும், ஆழி குழுவினருக்கு கதை சொல்ல ஒரு சுட்டி ஸ்டார் ஓடிவந்ததும் அந்தக் குழுவினருக்குக் கிடைத்த பெரும் வெற்றி.

அடுத்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சேதுராமன், மந்திரம் போட வந்தார்.

''அறிவியலுக்கும் மந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? நான் அறிவியல் ஆய்வாளனா... மந்திரவாதியா எனக் குழப்பமா இருக்கும். முதலில், சில மேஜிக்கை சேர்ந்தே செய்வோம். எல்லாத்தையும் பாருங்க. அப்புறமா, ஒரு முடிவுக்கு வருவோம்' என்று நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

”வெளிப்படையா இருங்க அப்பா!”

சுண்ணாம்பை வைத்து ஜோசியம் பார்க்கும் கண்ணாமூச்சி தந்திரத்தில், அப்பாவியாக பல பெற்றோர்கள் சிக்கினார்கள். ஒரு சுட்டியின் தலையில் இருந்து திருநீறு வர வைத்தார். முட்டையிலிருந்து 500 ரூபாய் பொரிந்தது. கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த பந்து காணாமல் போனது. கற்பூரத்தை சுட்டிகளின் நாக்குகளில் வைத்து பக்திப் பரவசத்தை அளித்தார்.

பிறகு, இந்த மந்திர நிகழ்ச்சிக்குப் பின்னால்  இருக்கும் தந்திரங்களையும் அறிவியல் உண்மையையும்   புரியவைத்தது நிகழ்வின் உச்சம்.

இறுதியாக, சுட்டி ஸ்டார்கள் அனைவருக்கும் ஆச்சர்யங்கள் அடங்கிய க்யூட் பரிசுகள் அளிக்கப்பட்டன.ஒவ்வொரு சுட்டியும் குதூகலத்துடன் கிளம்பியபோது, வண்ண பலூன்களால் விடைகொடுத்தது, நிகழ்ச்சி அரங்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism