Published:Updated:

உலகக் கோப்பை யாருக்கு?

சுப.தமிழினியன்

உலகக் கோப்பை யாருக்கு?

சுப.தமிழினியன்

Published:Updated:

கோடிக்கணக்கான ரசிகர்களின் கொண்டாட்டத் திருவிழா தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் உங்களுக்காக...

 A, B என இரண்டு பிரிவுகள். தலா 7 அணிகள். இந்தியா B பிரிவில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் மற்ற ஆறு அணிகளுடன் விளையாட வேண்டும். இதில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள், கால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

உலகக் கோப்பை யாருக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இந்தியா: லீக் சுற்றில், இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியுடன் மோதுவதால், 'ஆரம்பமே அதிருதடா’ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி, சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் உலகக் கோப்பைப் போட்டிகளை எதிர்கொள்கிறது. தொடக்க வீரராகக் களம் இறங்கி அதிரடியைக் கிளப்பும்

உலகக் கோப்பை யாருக்கு?

சேவாக், இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் யுவராஜ் சிங் உள்ளிட்ட

உலகக் கோப்பை யாருக்கு?

அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது பெரிய குறை. 'இது வரையிலான இந்திய அணிகளிலேயே மிகவும் இளமையான அணி இதுதான். அனுபவம் இல்லை. ஆனால், போராட்டக் குணம் உள்ளது. இது வெற்றியைத் தரும்'' என்கிறார் இந்தியாவுக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கபில்தேவ்.

 பாகிஸ்தான்: 'இந்த முறை உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவை வெல்வதோடு, உலகக் கோப்பையையும் நாங்கள்தான் வெல்வோம்’ என்பது பாகிஸ்தானின் சூளுரை. அதிரடி ஆட்டக்காரரான ஷாஹித் அஃப்ரிடி, 'மிகக் குறைந்த பந்துகளில் (31 பந்துகள்) சதம் அடித்த, டி வில்லியர்ஸின் சாதனையை இந்தப் போட்டித் தொடரில் நிச்சயம் நான் முறியடிப்பேன்’ என்று அறிவித்திருக்கிறார்.

உலகக் கோப்பை யாருக்கு?

 தென்னாப்பிரிக்கா: பலம் வாய்ந்த அணி, திறமை வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருந்தாலும், இது வரை உலகக் கோப்பையை வென்றது இல்லை. இந்த முறை, ஏபி டி வில்லியர்ஸ், ஆஷிம் ஆம்லா, ஸ்டெயின், டுமினி, டூப்ளெஸி என்று அதிரடி மன்னர்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இங்கிலாந்து: கடந்த ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளிலும் ஒரு முறைகூட கால் இறுதிப் போட்டிகளைக் கடக்க முடியாத பரிதாபத்துக்கு உரிய அணியாகவே இங்கிலாந்து இருந்து வருகிறது. மோர்கன் தலைமையிலான அணி என்ன சாதிக்கும் என்பதைப் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

உலகக் கோப்பை யாருக்கு?

இலங்கை: கடந்த இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளிலும், இறுதிப் போட்டியில் விளையாடித் தோற்றிருக்கும் இலங்கை அணி, இந்த முறை இறுதி வாய்ப்புக் கிடைத்தால், நிச்சயம் தவறவிடாது என்ற நம்பிக்கையும் உற்சாகமும் இலங்கை வீரர்கள், ரசிகர்களிடம் இருக்கிறது. குமார் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே, லசித் மலிங்கா என்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் முனைப்போடு இருக்கிறார்கள்.

 ஆஸ்திரேலியா: இந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், ''நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் ஸ்மித் தலைமையில் விளையாடத் தயாராக இருக்கிறேன்'' என்று அறிவித்திருக்கிறார். இது, ஆஸ்திரேலிய அணிக்குக் கூடுதல் பலம். ஒரு நாள் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை அடைந்திருக்கும் மகிழ்ச்சியோடு, சொந்த மண்ணில் இன்னும் உத்வேகமாக ஆடும்.

உலகக் கோப்பை யாருக்கு?

நியூசிலாந்து: ''ப்ரெண்டன் மெக்குல்லம், டைலர், வில்லியம்சன் என்று மிக வலுவான மட்டை வீச்சாளர்களும், ஆட்டத்தின் இறுதி ஓவர்களை மிகவும் கட்டுப்பாட்டுடன் வீசி நெருக்கடி அளிக்கும் சௌத்தி, பௌல்டு போன்ற பந்துவீச்சாளர்களும் நியூஸிலாந்தின் பலம்'' எனப் புகழ்கிறார், நமது இந்திய முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism