Published:Updated:

குட்டிப் பானை க்யூட் கூடை!

கு.நெல்சன் மேத்யுஸ் மதுரம், அ.பார்த்திபன்

குட்டிப் பானை க்யூட் கூடை!

கு.நெல்சன் மேத்யுஸ் மதுரம், அ.பார்த்திபன்

Published:Updated:

கிராமத்து மண் மணமும் நகரத்து ஆச்சர்யங்களுமாக வரவேற்றது சென்னை, கோட்டூர்புரத்தில் இருக்கும் கே.சி. ஹைஸ்கூலின் 'நம்ம சென்னை திருவிழா’. திரும்பிய பக்கம் எல்லாம் பட்டாம்பூச்சிகளாக சுட்டிகள்.

''இன்றைய குழந்தைகளிடம், சென்னையின் அருமை பெருமைகளைச் சொல்வதும், பெருநகரம் ஆன பிறகு, அது இழந்துவிட்ட விஷயங்களை உணர்த்துவதுமே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்' என்று வரவேற்றார், பள்ளியின் ஆசிரியர் அர்ச்சனா.

குட்டிப் பானை க்யூட் கூடை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாதஸ்வரம், மேள தாளத்துடன் வரவேற்பு. ஆங்காங்கே மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் எனப் பட்டையைக் கிளப்ப, மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தார்கள் சுட்டிகள்.

'யாருக்கெல்லாம் பானை செய்ய ஆசை?' என்ற ஆசிரியரின் குரலுக்கு, துள்ளிச் சென்றார்கள்.   முதல் ஆளாக ஓடி இடம்பிடித்த ஒரு சிறுவனுக்கு,  க்யூட்டாகவும் குட்டியாகவும் ஒரு பானையைச் செய்துகாட்டியவர், ''இப்போ நீ செய். விரல்களை இப்படிப் பிடி' என்கிறார்.

சற்று நேரத்தில் இன்னொரு பானை ரெடி. ''வீட்ல, தரையில கையைவெச்சாலே, அம்மா பதறுவாங்க. இங்கே, ஈரமான களிமண் உள்ளங்கையில் படும்போது... அந்த ஃபீலிங்கை எப்படிச் சொல்றதுனே தெரியலை' எனக் களிமண் கையோடு சிலிர்க்கிறார்.

குட்டிப் பானை க்யூட் கூடை!

அடுத்து ஒரு சிறுமி ஆரம்பிக்க, ''நம்ம முறை வர்றதுக்கு லேட்டாகும். வா நிஷா, நாம கூடை பின்னலாம்' என்றபடி  இரண்டு தோழிகள் விலகிச் சென்றார்கள்.

பச்சை, சிவப்பு போன்ற வண்ணங்களில் இருந்த மூங்கில் குச்சிகளில், கூடை பின்னிக்கொண்டிருந்தார்கள் இரண்டு பெண்கள். அவர்களின் கைகள் சுழலும் வேகத்தை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். பூ கட்டும் இடத்தில், 'நாங்களும் கட்டுவோம்ல...’ எனச் சிறுவர்களும் இருந்தார்கள்.

குட்டிப் பானை க்யூட் கூடை!

தக்காளி, மிளகாய், கற்றாழை, பல வகைப் பூக்கள் எனப் பசுமையான செடிகள் ஒரு பக்கம் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தன. ''நிகழ்ச்சிக்காகக் கொண்டுவந்து செட்டப் செய்தது இல்லை. இயற்கை விவசாயத்தின் அவசியத்தைச் சொல்லி, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் எதையும் பயன்படுத்தாமல், எங்கள் மாணவர்களே  உருவாக்கியவை. நாம் உண்ணும் உணவு எப்படி உருவாகுது? காய்கறி மற்றும் பழங்களில் இருக்கும் சத்துகள் பற்றி நன்றாகத் தெரியும்' என்கிறார் ஒருங்கிணைப்பாளர் சிந்து.

குட்டிப் பானை க்யூட் கூடை!

அந்தத் தோட்டத்துச் செடிகளை நட்டவர்களில் ஒருவரான வைஷ்ணவி, ''இதை உருவாக்கிய டீமில் நானும் ஒருத்தி.  பூச்சிகள் தாக்காமல் பாதுகாப்பது எப்படி? இயற்கை உரங்களாக எதையெல்லாம் பயன்படுத்தலாம்னு புக்ஸைப் படிச்சும், மிஸ் சொல்லிக்கொடுத்தும் தெரிஞ்சுக்கிட்டப்போ, ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. 'எனக்கு இந்தக் காய் பிடிக்காது. அந்தப் பழம் வேணாம்’னு ஈஸியா ஒதுக்கிடுறோம். ஸ்கூலுக்கு எடுத்துவந்து, சைலன்ட்டா குப்பையில் கொட்டிடுறோம். அது விளைஞ்சு வர்றதுக்காக எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்கனு புரிஞ்சதும், எதையும் வேஸ்ட் பண்றதே இல்லை' என்று ஒட்டுமொத்த சுட்டிகளின் மனதாக எதிரொலித்தார்.

குட்டிப் பானை க்யூட் கூடை!

நம்ம சென்னை திருவிழா, கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தாக அமைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism