மிகப்பெரிய நட்சத்திரம்!

இதுவரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய நட்சத்திரம், VY கேனிஸ் மேஜரிஸ் (VY Canis Majoris). இதனை, ரெட் ஹைப்பர் ஜெயன்ட் (Red hypergiant) என்றும் கூறுவர். தொலைநோக்கி வழியாகக் காணும்போது, சிவப்பு நிறப் பந்து போல காட்சி அளிப்பதால், இந்த செல்லப் பெயர். இதன் விட்டம், சுமார் 280 கோடி கிலோமீட்டர். நம்முடைய சூரியனை இதன் அருகில் வைத்துப் பார்த்தால், ஒரு சிறிய புள்ளி போலத்தான் தெரியுமாம். சூரியனின் அளவே அவ்வளவு சிறியதாகக் காட்சி அளிக்கும் என்றால், பூமியின் அளவை சற்று யோசித்துப் பாருங்கள்.

தெ.ருஷிகேஷ்

பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி,

கஸ்தம்பாடி, போளூர்.

பெரிய ஜக்!

லண்டனில் 1902-ம் ஆண்டு, ஏழாம் எட்வர்ட் அரசராகப் பதவி ஏற்றார். அதற்கு, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவுக்கு வரும் அரசர் மற்றும் விருந்தினர்கள் நீர் பருக வசதியாக, பிரமாண்டமான இரண்டு எவர்சில்வர் ஜாடிகள் உருவாக்கப்பட்டன. அந்த ஜாடிகள் ஒவ்வொன்றும் 16 மீட்டர் உயரம்கொண்டது. அதில், 8,182 லிட்டர் தண்ணீரை நிரப்பலாம். ஜாடிகளைத் தனது நினைவுப் பரிசாக, ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு ஏழாம் எட்வர்ட் அளித்தார். இப்போதும் ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த ஜாடிகள் மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

ஆர்.வி.சிவஸ்ரீ

மேரி மாதா சி.எம்.ஐ.

பப்ளிக் ஸ்கூல், தேனி.

தடுப்பு அரண்!

அலையாத்தித் தாவரங்கள் (Mangrove) கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளர்பவை. இவை வளரும் இடங்களில், உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இந்தப் பெயர். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்துக்கு நீர் நிறைந்தும் இருக்கும். இவற்றில், 80 வேறுபட்ட இனங்கள் உள்ளன. ஆக்சிஜன் குறைவான மண்ணில் வளரும் தன்மைகொண்டது. மிகவும் கடினமான, சூழலையும் தாங்கும். கடற்கரை ஓரங்களில், கடல் அலையினால் ஏற்படக்கூடிய மண் அரிப்பைத் தடுப்பதிலும், சுனாமி போன்ற பேரழிவின்போது தடுப்பு அரணாகவும் இருக்கின்றன.

மு.பவித்ரா

லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மே.நி.பள்ளி,

டி.கல்லுப்பட்டி, மதுரை.

பிளாஸ்டிக் தின்னும் காளான்!

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அமேசான் காடுகளில் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியில், அதிக மழை பெய்யும் பகுதியில் வித்தியாசமான காளான் ஒன்றைக் கண்டார்கள். அது, பிளாஸ்டிக்கை தின்று வளரக்கூடிய சக்தி வாய்ந்தது என்பதைக் கண்டறிந்தனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, அந்தக் காளான் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதைப் பெரிய அளவில் பயிர் செய்வதற்கான ஏற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்.

கு.விஷால் ராம்

நாஹர் பப்ளிக் பள்ளி, அய்யூர் அகரம்,

விழுப்புரம்.

கொம்பு முளைத்த பாம்பு!

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள தான்சானியா நாட்டின் காட்டுப் பகுதியில், கொம்பு முளைத்த பல வண்ணப் பாம்பு ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளார்கள். அதன் கண்களுக்கு மேற்புறம், இரண்டடி நீளத்தில் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இந்தக் கொம்புகள் உள்ளன. கொடிய விஷம்கொண்ட இந்தப் பாம்பை, வனவிலங்கு பாதுகாப்பு அலுவலரின் மகளான ஏழு வயது சிறுமிதான் முதலில் கண்டு பிடித்தாராம். அதனால், அந்தப் பாம்புக்கு ‘மதில்டா’ என்று சிறுமியின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.

கு.விஷால் ராம்

நாஹர் பப்ளிக் பள்ளி,

அய்யூர் அகரம், விழுப்புரம்.

பாலைவனத்தில் பூக்கும் பூக்கள்!

பாலைவனம் என்றாலே, வறண்ட நிலமும் மணலும்தான் மனதில் தோன்றும். ஆனால், சிலி நாட்டில் உள்ள அடகாமா (Atacama) பாலைவனத்தில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை 200 வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வறண்ட நிலமான பாலைவனத்தில், திரும்பிய திசை எங்கும் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பார்த்து இயற்கையின் ரகசிய அதிசயத்தை வியக்கிறார்கள்.

ச.பா.தீபலக்ஷ்மி

சோ.சு.க.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

காஞ்சிபுரம்.