Published:Updated:

அன்பால் வென்ற வின்டர் !

அன்பால் வென்ற வின்டர் !

அன்பால் வென்ற வின்டர் !

அன்பால் வென்ற வின்டர் !

Published:Updated:

ஜிம் என்கிற சுட்டி, தன் வலையுடன் ஃப்ளோரிடா கடலோரம் நடக்க ஆரம்பித்தான். வானில் மின்னும் நட்சத்திரம் போன்ற ஸ்டார் ஃபிஷ், கையில் பட்டால் எரிச்சல் தரும் ஜெல்லி ஃபிஷ், கலர் கலரான நத்தை எல்லாமே அவன் வலையில் சிக்கும். கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு கடலில் எறிந்துவிடுவான்.

அன்பால் வென்ற வின்டர் !
##~##

ஜிம், மெதுவாக அந்தப் பவழக் குளத்தை நெருங்கினான். அலைகள் சுழன்று பின்னே போவதைக் கவனித்தான். அங்கே ரோஸ் நிறத்தில், ஐஸ்க்ரீம் குச்சி போன்ற மூக்குடைய குட்டி டால்பின் ஒன்று துடிப்பதைக் கண்டான். யாரோ விரித்த வலையில் சிக்கி, வால் வெட்டுப்பட்டு இருந்தது. உடலில் தழும்புகள். அதை அன்போடு அணைத்த ஜிம், தனக்குக் கிடைத்த நண்பனாக நினைத்து, 'வின்டர்’ எனப் பெயரிட்டான்.

சில படகோட்டிகள் உதவியுடன் வின்டரைக் கரையேற்றினான். அதன் கண்கள் சோர்வடைந்து கிடந்தன.  மீன் மற்றும் சுறா காப்பு நிறுவனத்துக்கு வின்டர் கொண்டு செல்லப்பட்டது. வால் இல்லாமல் டால்பின் நீந்துவது கடினம். ஆகவே, ஒரு மிதவைப் பாயிலேயே பல மாதம் மிதக்கவிடப் பட்டது. வின்டர் பிழைப்பது கஷ்டம் என டாக்டர்கள் சொன்னபோது, ஜிம் அழுதான். மாக்கர்டி எனும் மருத்துவர் உதவ முன்வந்தார். அவர் மனிதர்களுக்கு செயற்கைக் கால்களைச்  செய்வதில் வல்லவர். பிளாஸ்டிக் மற்றும் சிலிகானால் உருவாக்கிய வாலைக் கச்சிதமாகச் செய்து, வின்டருக்குப் பொருத்தினார். வின்டர் மீண்டும் தண்ணீரில் சர்ரென நீச்சலடிக்க, ஜிம் 'ஹோ’ வெனக் கூச்சலிட்டான்.

அன்பால் வென்ற வின்டர் !

அந்த மீன் மையத்தில் வின்டரைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. அவர்களில் 9 வயது கத்ரீனா மற்றும் பத்து வயது கோட்டி... ரெண்டு பேரும் உடல் உறுப்பை இழந்த சுட்டீஸ். இவர்களின் வாழ்க்கை வின்டரால் வசந்தமானது. விபத்தில் காலிழந்த 20 வயது ஆன்ட்ரூ ஹால், 61 வயதில் கண்ணி வெடியில் காலிழந்த ரூடி தாத்தா, இருவரையும் தனது சாகஸங்களால் சிரிக்க வைத்தே... வலியை மறக்கச் செய்தான் வின்டர். அதிலும் 15 வயதில் யூகோஸ்லேவியா போரில் கால் இழந்துவிட்ட மிஜா எனும் இளைஞன், வின்டரின் ஊக்கத்தால், 32 வயதில் நீந்த ஆரம்பித்து, சிறந்த நீச்சல் வீரர் ஆனார். இன்றும் வின்டரின் பெயரால் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி திரட்டப்படுகிறது.

இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, ஹாலிவுட்டில் ஒரு படமும் ரெடி! 'டால்பின் டேல்’ என்ற பெயரில் 3ஞியில் சுட்டிகளைக் கவர வருகிறது!

பூ.கொ.சரவணன்