Published:Updated:

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

Published:Updated:

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே சுத்தாமல், வீட்டில் இருந்தபடி உங்கள் க்யூட் கைகளுக்கும் கற்பனைத் திறனுக்கும் வேலை கொடுக்க ரெடியா? சொல்லித் தர்றாங்க, க்ராஃப்ட் டீச்சர், தமிழரசி.

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

தேவையானவை: லாலி பாப் ஸ்டிரா அல்லது மெலிதான குச்சி, பசை, பிடிச்ச நிறங்களில் கலர் பேப்பர். (A4 கலர் பிரின்ட் பேப்பரை வாங்கி, 4X4 என்று கத்தரிச்சுக்கலாம்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:

1. சதுர வடிவ காகிதத்தை, முக்கோணமாக மடிச்சு, அதன் ஒரு (வலப்) பகுதியின் நுனி, முக்கோணத்தின் நடு முனையைத் தொடுற மாதிரி மடிச்சுக்குங்க. அதே மாதிரி, இடது பாதியையும் மடிக்கணும்.

2. இப்போ, நடுவே சதுர வடிவமும், அதன் இரண்டு பக்கங்களில் முக்கோண வடிவங்களும் கிடைச்சு இருக்கும்.

3. வலது பக்க முக்கோணத்துக்கு உள்ளே ஆள்காட்டி விரலை வைத்துத் தூக்கினால், கோன் வடிவம் வரும். அதை, அழுத்தி மடிச்சுவிடுங்க.

4. அதேபோல இடது பக்கமும் மடிங்க.

5. இப்போ, மடிச்ச ரெண்டு முக்கோணங்களிலும் நுனிப் பகுதியை வெளிப் பக்கமா மடிச்சுவிடுங்க.

6. அடுத்து, முக்கோணத்தின் பாதியை உள்புறமாக இடது, வலது என ரெண்டு பக்கமும் மடிக்கணும்.

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

7. ரெண்டு பக்கமும் மடிக்கப்பட்ட சதுரம் கிடைக்கும்.

8. அந்தச் சதுரத்தின் ரெண்டு பக்கமும் இருக்கும் முக்கோணப் பகுதிகளை இணைச்சு ஒட்டணும்.

9. காகிதப் பூவின் ஒரு இதழ் (கோன் வடிவில்) கிடைக்கும்.

10. இதைப் போலவே, ஐந்து இதழ்களை செய்துக்குங்க.

11. ஒவ்வொரு பூ இதழின் பக்கவாட்டிலும் பசை தடவி ஒட்டிடுங்க.

12. நான்கு இதழ்களை ஒட்டியதும், மெலிதான குச்சியில் பசை தடவி, பூ இதழ்களுக்கு நடுவே வைத்து, ஐந்தாவது இதழை ஒட்டணும்.

உங்க கையில், வண்ணக் காகிதப் பூ மலர்ந்து சிரிக்கும். இதுபோல பிடிச்ச நிறங்களில் செய்து, நண்பர்களுக்குப் பரிசா கொடுத்து அசத்துங்க!

ஒளிரும் விளக்கு மேடை!

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

செய்முறை:

1. சிடி-யின் வெளி வட்டத்தின் ஓரத்தில் பசை தடவி, ஒளிரும் பச்சை நிற குந்தன் கற்களைப் பூ இதழ்கள் போல வட்டமாக ஒட்டுங்க. இது, கொஞ்ச நேரம் காயட்டும்.

2. அந்த வட்டத்தின் உள்ளே, திரும்பவும் வட்ட வடிவத்தில் பசை தடவி, பிங்க் கலர் குந்தன் கற்களை ஒட்டிக் காயவிடுங்க.

3. அடுத்த வரிசையில், பிங்க் கலரிலேயே சின்ன சைஸ் குந்தன்களை ஒட்டி,  காயவிடுங்க.

4. கடைசியா பசை தடவி, பச்சை நிற குந்தன் கற்களை வட்டமாக ஒட்டி முடிக்கணும்.

5. நடுவே இருக்கும் இடத்தில் பசை தடவி, வட்டக்  கண்ணாடியை ஒட்டுங்க. அதைச் சுற்றிலும் பசை தடவி, சின்னச்சின்ன மெஜந்தா நிற குந்தன்களை ஒட்டி, காயவெச்சுடுங்க. அரை மணி நேரம் காய்ந்தால் போதும். இந்த ஸ்டாண்டின் நடுவே மெழுகுவத்தியை ஏத்தி வெச்சா, அதன் தீப ஒளி பட்டு, குந்தன் கற்கள் ஜொலிப்பது அவ்வளவு அழகாக இருக்கும்.

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

திருக்கார்த்திகை மற்றும் வேறு பண்டிகை சமயங்களில், வீட்டு முன்னால ரங்கோலி போட்டு, நடுவுல இந்த கேண்டில் ஸ்டாண்டை வெச்சீங்கன்னா... வீடே ஜொலிக்கும்!

பலே பேனா ஸ்டாண்டு!

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

செய்முறை:

1. மர க்ளிப்களின் நடுவே இருக்கும் கம்பியைப் பிரிச்சு எடுங்க. க்ளிப் பிரிஞ்சு, ரெண்டு மரத் துண்டுகள் கிடைக்கும்.

2. ஒரு மரத் துண்டின் அகலமான முனையை,  இன்னொரு மரத் துண்டின் குறுகலான முனையோடு சேர்த்துப்  பசை தடவி ஒட்டணும். இப்படியே நாலு துண்டுகளை ஒட்டினால், ஒரு சதுர ஃப்ரேம் கிடைக்கும்.

3. அடியில் ஒரு ஃப்ரேமை வெச்சு, அதோட நாலு பக்கங்களிலும் பசையைத் தடவி, அதுக்கு மேலே இன்னொரு ஃப்ரேமை குறுக்காக வெச்சு ஒட்டணும்.

4. இப்படியே ஏழு ஃப்ரேமையும், ஒண்ணு மேல ஒண்ணு குறுக்காக வெச்சு ஒட்டி, காயவிடுங்க

5. காய்ஞ்சதும், அடிப் பாகத்துக்காக அளவான சதுர அட்டையின் நான்கு ஓரங்களிலும் பசை தடவி, ஃப்ரேம் ஸ்டாண்டின் அடியில் ஒட்டுங்க.

6. இந்த அமைப்பைக் கொஞ்ச நேரம் காயவிடுங்க.

சிரிக்கும் காகிதப் பூக்கள்!

இந்த ஸ்டாண்டில் பேனா, பென்சில், செல்போன் எல்லாம் போட்டு வைக்கலாம். ஸ்பூன்கள், ஃபோர்க் போடுறதுக்கும் அம்மாகிட்ட கொடுக்கலாம். 
 

 பிரேமா நாராயணன்

எம்.உேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism