Published:Updated:

பலே பலே பந்துகள் !

பலே பலே பந்துகள் !

பலே பலே பந்துகள் !

பலே பலே பந்துகள் !

Published:Updated:
பலே பலே பந்துகள் !
##~##

ஹாய் சுட்டீஸ்... ''கிரிக்கெட் பந்து, கால்பந்து, கூடைப் பந்து... இப்படி விளையாட்டில் மட்டும் தான் பந்து இருக்கணுமா? நாங்களும் 'விளையாட்டா’ பந்துகள் செய்வோமே'' அப்படின்னு சிலர் சொல்றாங்க.  அவங்க செய்த வித்தியாசமான பந்துகளை 'உலக உலா’ வந்து ரசிப்போமா...      

சினிமாவுக்குப் போனா சாப்பிடும் நொறுக்ஸ் சமாச்சாரங்களில் பாப்கார்ன் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்தில் சராசரியா 17 பில்லியன் குவார்ட்ஸ் பாப்கார்ன் விற்பனை ஆகுதாம் (ஒரு குவார்ட் என்பது 946 மில்லி லிட்டர்). சும்மா இருப்பாங்களா பாப்கார்ன் கம்பெனிக்காரங்க, 'தேசிய பாப்கார்ன் மாதம்’ என்று கொண்டாடுறாங்க. அப்படி 2006 அக்டோபர் மாதம் கொண்டாடியபோது... உலகின் பெரிய பாப்கார்ன் பந்தை உருவாக்கினாங்க. சிகாகோவுக்கு வடகிழக்கே உள்ள இல்லினாய்ஸ் நகரில், பிரபலமான பாப்கார்ன் கம்பெனியில்... 8 அடி உயரம், 1700 கிலோ எடையில் உருவாக்கி அசத்திட்டாங்க! (பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே பாப்கார்ன் பார்க்கிறது புது அனுபவம்தான்!)

பலே பலே பந்துகள் !

ஜமைக்காவில் பிறந்தவர் முப்பது வயது ஜோயல் வாவுல்(ழீஷீமீறீ ஷ்ணீuறீ). சுட்டியா இருக்கிறப்பவே ரொம்ப துறுதுறு. டிவியில் வருகிற வித்யாசமான உலக சாதனை களைப் பார்ப்பார். தானும் எதையாவது செய்ய நினைச்சார். ரப்பர் பேண்ட்களைப் பந்து மாதிரி செய்ய ஆரம்பிச்சார். நாட்கள் மாதங்களாச்சு... மாதங்கள் வருஷங்களாச்சு. 50 கிராம், 100 கிராம், 200 கிராம் என ஜோயலோட பந்தின் எடையும், அளவும் பெருசாயிட்டே போச்சு. பந்து பெருசாகப் பெருசாக சாதாரண ரப்பர் பேண்டைப் பயன்படுத்த முடியலை. பல பெரிய கேபிள் கம்பெனிகளிடம் போய் உதவி கேட்டார். அங்கே வீணாகிற ரப்பரை எல்லாம் கொண்டு வந்து இணைச்சார். இப்படியே ஆறு வருஷம் ஆச்சு. 2008-ல், உலகின் மிகப் பெரிய ரப்பர் பேண்ட் பந்தை உருவாக்கிட்டார். இதோட எடை 4700 கிலோ. இதுக்காக 7 லட்சத்து 20 ஆயிரம் ரப்பர் பேண்ட்களைப் பயன்படுத்தி இருக்கார் ஜோயல். (அப்பாடி... ரப்பரா இழுக்காம  இதோடு நிறுத்தினாரே!)

பலே பலே பந்துகள் !

உலகில் பல இடங்களில் உள்ள ஒரு பிரபலமான சிறுவர் அமைப்பு, 'பாய்ஸ் டவுன்’. ஐக்கிய அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்திலும் கிளை இருக்கு. இவர்களின் பல்வேறு பொழுதுபோக்குகளில் தபால்தலை சேகரிப்பதும் ஒன்று. இதில் வித்தியாசமா செய்யணும்னு தோணிச்சோ என்னவோ... இங்கே உறுப்பினர்களாக இருக்கிறவங்க ஒண்ணு சேர்ந்து, உலகின் பெரிய தபால்தலைப் பந்தை உருவாக்கி இருக்காங்க. 46,55,000 தபால்தலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக பந்து வடிவில் ஒட்டி, இதைச் செய்து இருக்காங்க. எடை 300 கிலோ! (உலகம் சுற்றும் தபால்தலையே உலக வடிவில்!)

பலே பலே பந்துகள் !

இண்டியானா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்ட்ரா நகரில் வசிப்பவர், மைக்கேல் கார்மைக்கேல். ஒருமுறை வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஓரம் கட்டிட்டு, பெயின்ட் அடிச்சுட்டு இருந்தார். அப்ப அங்கே இருந்த பேஸ்பால் ஒண்ணை எடுத்து, அது மேலே பெயின்ட் அடிச்சு உலர வெச்சார். காய்ந்ததும் மறுபடியும் அடிச்சார். இப்படி ஒரு வருஷம் இல்லே... ரெண்டு வருஷம் இல்லே... 25 வருஷங்கள். கிட்டத்தட்ட 20,000 முறை அடிச்சு, பெரிய பந்தையே உருவாக்கிட்டார். இதன் எடை 650 கிலோ. 'உலகின் பெரிய வண்ணப்பூச்சு பந்து’ என்று கின்னஸ் புத்தகத்திலும் பெயர் வந்துடுச்சு. (பலே பலே பெயின்டர்!)

பலே பலே பந்துகள் !

இது தவிர, சில நிறுவனங்கள் விளம் பரத்துக்காக கிறிஸ்துமஸ் போன்ற சமயங் களில் பெரிய பெரிய பந்துகளை உருவாக்கி காட்சிக்கு வைப்பாங்க. குளிர்ப்பிரதேச நாடுகளில் கடுமையான பனிப் பொழிவின்போது... பல கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் ஒண்ணு சேர்ந்து, 'உங்க பந்துக்கும் எங்க பந்துக்கும் போட்டி வெச்சுக்குவோமா போட்டி?’ என்றபடி பெரிய பெரிய பனிப் பந்துகளை உருவாக்குவாங்க. அதை நண்பர்களோடு சேர்ந்து தங்களோட கல்லூரிக்கோ, வீட்டுக்கோ 'ஏய் தள்ளு...தள்ளு தள்ளே...!’ என்று தள்ளிட்டுப் போவாங்க!(சரியான தள்ளு ராஜாக்கள் தான்!)