சுற்றுலா செல்வதில் பல வகைகள் இருந்தாலும், டிரெக்கிங் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் சிறப்பான வழியாகும். அதிலும் இமயமலைப் பகுதியில் டிரெக்கிங் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு உற்சாகப் பயணத்தை முடித்து விட்டு வந்த தருமபுரியைச் சேர்ந்த அ.பாலமுருகன் அவர்களை சந்தித்துப் பேசினோம்...

''மலையேறுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 'யூத் ஹாஸ்டல் அசோசியேஷன்ஸ் ஆப் இந்தியா’ (YHAI) என்ற அமைப்பு 'ட்ரக்கிங் எக்ஸ்பிடிஷன்’ எனும் மலையேற்றப் பயணங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்த அமைப்பு சமீபத்தில், உத்ராஞ்சலின் கார்வால் இமயமலைப் பகுதியில் மலையேறும் பயணத்தை நடத்தியது. ஜோஸ்வால் ஷர்மா தலைமையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேர் பயணக் குழுவில் இணைந்தோம். கோவிந்த்காட் என்ற இடத்தில் இருந்து மலையேற்றப் பயணம் தொடங்கியது. மேலே நீலநிற வானம். கீழே வெண்மை நிறத்தில் பனி மூடிய சிகரங்கள். இடை இடையே நீர் உருகி வழியும் சிற்றருவிகள் என இமயமலைத்தொடரின் இயற்கை எழிலை ரசித்தபடியே மலையேறினோம்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3110 மீட்டர் உயரத்தில் இருக்கும், 'ககாரியா காட்’டின் Vally of Flowers எனப்படும் மலர் பள்ளத்தாக்கினை அடைந்தோம். 9 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உலக பாரம்பரியச் சின்னமாகத் திகழும் இந்த இயற்கை தேசியப் பூங்காவை 1931-ல் மேஜர் ப்ரான்க் ஸ்மித் என்பவர் தற்செயலாக இதே போன்ற ஒரு மலையேற்றப் பயணத்தின் போதுதான் கண்டுபிடித்தாராம்.

அப் பள்ளத்தாக்கு முழுவதும் ஜெரேனியம், மார்ஸ் மாரிகோல்ட் போன்ற அரியவகை காட்டுப் பூக்கள், மூலிகைத் தாவரங்கள் காணப்படுகின்றன. இப்பூங்காவில் பார்வையாளர்கள் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மொத்தத்தில்... 'இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்தால், இமயத்தையும் தொட்டுவிடலாம்’ என்பதை உணர்ந்தோம்'' என்று முடித்தார் பாலமுருகன்.

ஃப்ரண்ட்ஸ்... YHAI நிறுவனத்தினர் இந்த மாதிரி ஒரு பயணத்தைச் சுட்டிகளுக்காகவே ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இமயமலைப் பகுதியில் நடத்துகிறார்களாம். வரும் கோடை விடுமுறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோமே!