Published:Updated:

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

மை டியர் ஜீபா !

Published:Updated:

மை டியர் ஜீபா நீ வெஜ்ஜா இல்லை நான் வெஜ்ஜா?

 -பா.ஐஸ்வர்யா, திருச்சி.

நான் வெஜ். நீ வெஜ்ஜான்னு எனக்கு எப்படித் தெரியும்?

மை டியர் ஜீபா !
##~##

டியர் ஜீபா, என்னோட ஃப்ரண்ட்ஸ் அவங்களோட கையெழுத்தை (sign) ரொம்ப டிசைன் டிசைனா போடறாங்க. என் பெயருக்கு டிசைனா அழகா அறிவுப்பூர்வமா ஒரு 'சைன்’ போட்டுக் கொடேன். ப்ளீஸ்..

-க.சரவணன், பழநி.

ஒருத்தரோட கையெழுத்தை இன்னொருத்தர் போடக் கூடாது. உன் கையெழுத்தை நான் போட முடியாது. போட்டுக் காமிச்சு... அதை நீ போட்டா, அது எப்படி உன் கையெழுத்தா ஆகும்? என் கையெழுத்தை நீ போடுறதா தானே அர்த்தம்? அந்தக் கையெழுத்தை நானும் போட முடியுமே ரொம்ப யோசிக்க வேணாம் சரவணா. அழகான பேரு. அது தெரியற மாதிரி பளிச்சுன்னு எழுதினாலே கையெழுத்துதான்

ஹாய் ஜீபா எனக்கு ஒரு பயங்கர ஆச்சரியம்... சுவரில் பல்லி எப்படி கீழே விழாமல் தலைகீழாக நடக்கிறது?

-ம.அக்ஷயா, அரூர்.

அதோட கால்கள்லே காற்றுப் பை மாதிரி ஒரு சவ்வு இருக்கும். காலில் இருக்கும் விசேஷத் தசைகளின் உதவியோடு, காலுக்கும் சுவருக்கும் இடையில் வெற்றிடத்தை உண்டாக்கும். இந்த வெற்றிடத்தை நிரப்ப வெளிப்புறக் காற்று, பாதத்தை சுவரோடு அழுத்தும். பல்லியின் கால், சுவரை இறுகப் பிடித்துக்கொள்ளும். நடப்பதற்காக காலை எடுக்க பல்லி நினைக்கும் போது திரும்பத் தசைகளை ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள... சுவரைக் கால் விட்டுவிடுகிறது. ''எல்லா இடத்துலயுமே நாம எல்லாரும் நேராதானே நடக்கறோம்... அதைப் போயி 'தலைகீழா’ நடக்கறதா சொல்லுதே இந்த அக்ஷயா பொண்ணு?''ன்னு நக்கலா சிரிக்குது குட்டிப் பல்லி ஒண்ணு.

விண்மீனை பொரித்துத் தின்ன ஆசையாக உள்ளது. எத்தனை கிலோ கிடைத்தாலும் வாங்கிக் கொள்கிறேன். எனக்காக வாங்கி அனுப்பி வைக்க முடியுமா ஜீபா?

-ஆர்.ஜனனி, தேவனாங்குறிச்சி.

ஒரு ஃப்ரண்டுக்காக இதுகூட செய்யலைனா எப்படி ஜனனி... உனக்காக வானத்துல இருக்கிற மொத்த விண்மீனையும் வாங்கிட்டேன். அவ்வளவையும் லாரி லாரியா அனுப்பறது கஷ்டம்னு, வான் வழியாவே உன் வீட்டுப் பக்கம் அனுப்பி வெச்சிருக்கேன். மொட்டை மாடிக்குப் போயி, பொரிச்சு பட்டைய கிளப்பு. முடிஞ்சா... ரெண்டு மீனை பொன் நிறமா பொரிச்சு, ஒரு தட்டுல வெச்சுக் கொடுத்தனுப்பு. எப்பூடி?

  மை டியர் ஜீபா நமக்கெல்லாம் ஏன் நகம் வளர்கிறது?

-சு.சதீஸ்குமார், அவிநாசி.

மை டியர் ஜீபா !

அய்யய்யோ நகம் வளர்லேன்னா என்னலாம் ஆகும் தெரியுமா? சொறிஞ்சுக்க முடியாது. பக்கத்துல இருக்கிறவனைக் கிள்ள முடியாது. 'நகம் வெட்டி’ தயாரிக்கிற கம்பெனிகளை மூடிட வேண்டியதுதான்.

முக்கியமா, நீ....ஈஈ....ஈ...ளமா நகம் வளர்த்து, கின்னஸ் ரெக்கார்ட் பண்றதும் கஷ்டமாயிடும்.

  ஒரு காட்சியைக் கண் சிமிட்டாமல் முழுசா பார்க்க விடாம இமைகள் டிஸ்டர்ப் பண்ணுதே... ஏன் ஜீபா?

-ஏ.திவ்யா, தேவனாங்குறிச்சி.

இமைகள் டிஸ்டர்ப் பண்ணுதா நீதான் அதை டிஸ்டர்ப் பண்றே திவ்யா. நம்ம கண்கள் திறந்திருக்கும் போது தூசும், கிருமிகளும் அதில் பட்டுப் படியும். இமைகள் சிமிட்டுறது மூலமா இந்தத் தும்பு, தூசு எல்லாம் க்ளீன் ஆயிடுது. நம்ம இமையில் இருக்கிற ரெண்டு முக்கியமான தசைகள்தான் (Orbicularis Oculi மற்றும் Levator Parpebrae Superioris Muscle) இந்த வேலை நடக்க முக்கியக் காரணமா இருக்கு.

இன்னொரு விஷயம் தெரியுமா திவ்யா... சராசரியா நம்மளோட கண் சிமிட்டல் 300-400 மில்லி செகண்ட்ஸ்ல நடக்குதாம். அதேமாதிரி, கண்ணை அதிகப்படியா சிமிட்டிக்கறதும் குறைச்சலா சிமிட்டிக்கறதும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டா ஆகுமாம். முக்கியமா, 'பார்க்கின்சன் டிஸீஸ்’ இருக்கிறவங்களுக்கு கண் சிமிட்டல் எப்பவாவதுதான் நடக்குமாம்

  ஜீபா உனக்கு டிரைவிங் தெரியுமா? எந்த வண்டி உனக்கு ஓட்டப் பிடிக்கும்?

-எல்.எஸ்.மோகன், ஆரணி.

ஓ... தெரியுமே பிடிச்சது மாட்டு வண்டிதான்... இதுலதானே டிரைவிங் ரொம்ப ஈஸி... மாட்டை ஓட்டினாலே வண்டியை ஓட்டின மாதிரி ஹி...ஹி...