யூடியூப் வீடியோவில் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்த, சுட்டிகளுக்கான வைரல் ஹிட்ஸ் இவை. படிங்க... பார்த்து ரசிங்க...

ஸ்மெல் & ஸ்மைல்!

வைரல் ஹிட்ஸ்!

அம்மாவைவிட பெரிய விஷயம் உலகில் உண்டா? குழந்தைக்கும் அம்மாவுக்குமான பந்தம் ஆச்சர்யமானது. அதை அழகாகச் சொல்கிறது <https://www.youtube.com/watch?v=DRoqk_z2Lgg> என்கிற வீடியோ. ஆறு அம்மாக்கள் வரிசையில் நிற்க, அவர்களது குழந்தைகள் கண்களைக் கட்டிக்கொண்டு தன் அம்மாவை சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். வாசனை மட்டுமே வழிகாட்டி. ஆறு பேருமே சரியாகக் கண்டுபிடித்து, தங்கள் அம்மாவை அணைப்பது அவ்வளவு அழகு.

ஹாட்ஸ் அப்!

வைரல் ஹிட்ஸ்!

திடீரென விபத்தில் கையையோ, காலையோ இழப்பவர்கள் அனுபவிக்கும்  கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதுவும் குழந்தைகளாக இருந்தால்?

அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு செயற்கைக் கைகள் செய்து தருகிறார்கள் e-NABLE எனும் அமைப்பினர். 3D பிரின்டிங் முறையில் குழந்தைகள் விரும்பும் டிசைனில் இவர்கள் செய்து கொடுப்பது விசேஷம். இது வரை 1,500 கைகளைத் தயாரித்து இருக்கிறார்கள். ஒரு விளையாட்டுப் பொருளைப் போல இருக்கும் இந்தச் செயற்கைக் கைகளை அணியும்போது, அந்தக் குழந்தைகளின் முகத்தில் சிரிப்பையும் நம் மனங்களில் நெகிழ்வையும் உணரலாம்... <https://www.youtube.com/watch?v=I3cf49c_WjE>

சூப்பர் ட்ரீட்!

வைரல் ஹிட்ஸ்!

குழந்தைகளைச் சாப்பிடவைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அதிலும், பழக்கம் இல்லாத இன்னொரு  நாட்டு உணவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னால்? <https://www.youtube.com/watch?t=65&v=qsyhtzKLxkw>  வீடியோவில் பாருங்கள் அந்த ஜாலியை. அமெரிக்கக் குழந்தைகள் சிலரிடம், உலகின் பல நாட்டு உணவுகளைக் கொடுத்து சாப்பிடச் சொல்கிறார்கள். (நம்ம இந்திய  உணவான சோறும், சாம்பாரும் உண்டு). அவற்றைச் சுவைக்கும் போது, அவர்கள் முகம் போகும் போக்கும், அந்த உணவுகள் பற்றி அவர்கள் பேசுவதும் செம கலகலப்பு. ஆப்கானிஸ்தான் நாட்டுக் குழந்தைகள் உண்ணும் ஓர் உணவைக் கொடுக்கிறார்கள். அதை டேஸ்ட் செய்து அதற்கு அவர்கள் கொடுக்கும் நச் கமென்ட்ஸ்... வாவ்!

க்ளோயீ ஷாட்!

வைரல் ஹிட்ஸ்!

க்ளோயீ வயது 11. கோல்ஃப் விளையாட்டும், நாய்க்குட்டிகளும் அவளுக்குப் பிடித்தவை. ஒரு விடுமுறை நாளில், ‘320 அடிக்கு அப்பால் இருக்கும் குழியில் முதல் ஷாட்டிலேயே  பந்தை அடித்தால், ஒரு நாய்க்குட்டி பரிசு’ என்கிறார் அப்பா.  இதை, ‘ஹோல் இன் ஒன்’ என்பார்கள். சவாலை ஏற்கும் க்ளோயீ,  வெற்றியும் பெறுகிறாள். அந்தக் குடும்பத்தின் கொண்டாட்டத்தையும், அவள் கோல்ஃப் ஆடும் அழகையும் வீடியோவாக எடுத்திருக்கிறார், க்ளோயீயின் தந்தை. சொன்ன வாக்கைக் காப்பாற்றி, நாய்க்குட்டி ஒன்றைப் பரிசாக அளிக்கிறார். அதிரி புதிரி ஹிட் அடித்திருக்கிறது அந்த வீடியோ. <https://youtu.be/WncV3caDr8s>

 - கார்க்கி பவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு