புது வண்ணம்... புது எண்ணம்!
‘நமது மனநிலையை மாற்றி, ஆக்கபூர்வமான செயலைச் செய்யவைக்கும் சக்தி, வண்ணங்களுக்கு உண்டு’ எனச் சொல்லி, ஓர் ஊருக்கே வண்ணம் அடித்திருக்கிறது மெக்ஸிகோ அரசு.



அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள மலையடிவார கிராமம், பல்மிடாஸ். வசதிக் குறைவான மக்கள் வாழும் பகுதி. அந்த ஊர் இளைஞர்களிடம் நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்க, தெருக்களில் ஓவியம் வரையும் ‘ஜெர்மென் க்ரூ’ (Germen Crew) எனும் ஓவியக் குழுவின் உதவியோடு, 209 வீடுகள் வண்ணமயமாக்கப்பட்டன. இதற்காக, 20,000 லிட்டர் பெயின்ட் பயன்படுத்தப்பட்டது.
மலையிலிருந்து வண்ண அருவி கொட்டுவது போலிருக்கும் இந்தக் காட்சி உற்சாகத்தை அளிக்கிறது பல்மிடாஸ்.
- கார்த்திகா முகுந்த்