Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிரீமியம் ஸ்டோரி

ஸ்பைடர் நண்டு!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

கடலுக்குள் பல அதிசய உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றுள், ஜப்பானின் ஹன்ஷு (Honshu) கடல் பகுதியில் உள்ள ஸ்பைடர் நண்டுகள் வியப்பூட்டுபவை. இந்த நண்டின் கால்கள் 12 அடி நீளம் இருக்கும். உடல் 1.5 அடி பருமன் எடை 19 கிலோ இருக்கும். நீளமான கால்கள், பார்ப்பதற்கு சிலந்தி போல இருப்பதால், ‘ஸ்பைடர் நண்டு’ எனப்படுகிறது.

எஸ்.அபிநயா

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஆர்.ஆர்.மேல்நிலைப் பள்ளி,

தோக்கவாடி.

தண்ணீர் பைக்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பிரேஸில் நாட்டின் சாவ் பாலோ (Sao Paulo) நகரைச் சேர்ந்த ரிக்கார்டோ ஆஸெவெடோ(Ricardo azevedo) என்பவர், தண்ணீரால் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துள்ளார். ‘டி பவர் H 20’ எனப் பெயரிட்டுள்ள இந்த மோட்டார் பைக், பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப் போல கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்ளை வெளியேற்றுவது இல்லை. நீராவியை மட்டுமே வெளியேற்றும். ‘தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் இருந்து, ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் சிஸ்டத்தின் மூலம் பைக் ஓடுவதற்கான சக்தியை உருவாக்கலாம்’ என்கிறார் ரிக்கார்டோ.

வே.காயத்ரி

சுட்டி ஸ்டார் நியூஸ்!

மேரி மாதா சி.எம்.ஐ.பப்ளிக்  பள்ளி,

தேனி.

செல்ஃபி வித் காபி!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

உலகம் முழுவதும் செல்ஃபி எடுப்பதற்கான புதிய புதிய கருவிகள்    அறிமுகமாகின்றன. அந்த வகையில், நாம் எடுக்கும் செல்ஃபி படங்களை, பருகும் காபியில் வரையும் புதிய கருவி (Ripple Maker), லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3D பிரின்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு காபி இயந்திரம், நம் செல்ஃபி புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளும். அடுத்த 10 நிமிடங்களில், நம் டேபிளுக்கு வரும் சூடான காபியில் நம் உருவம்  மிதக்கும்.

ச.மதுரவாணி

சுட்டி ஸ்டார் நியூஸ்!

ஜேப்பியார் பள்ளி,

செம்மஞ்சேரி, சென்னை.

நியூ ஹாரிசன்ஸ்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

நியூ ஹாரிசன்ஸ்(New Horizons), நம்மால் கற்பனை செய்துபார்க்க முடியாத தூரத்தில் உள்ள புளூட்டோவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம். இது, 9 ஆண்டு காலத்தில், மணிக்கு 50 ஆயிரம் கி.மீ வேகத்தில் பயணம் செய்து, ஜூலை 14-ம் தேதி வெற்றிகரமாக புளூட்டோவை நெருங்கியது. அங்கிருந்து புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. புளூட்டோவில், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான 11 ஆயிரம் அடி உயர பனிமலைத் தொடர்கள் இருப்பது தெரிந்துள்ளது. சூரியனிலிருந்து வெகு தூரம் இருப்பதால், பனிமலைகள் உருவாகியிருக்கலாம் என்று  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கி.உபேந்திர தீர்த்தன்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

விக்னேஷ் ஸ்ரீரங்கா மெட்ரிக்

மே.நி.பள்ளி, ஸ்ரீரங்கம்.

சபாஷ் சங்கீதா!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

எளிய சோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை, அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சங்கீதா பாட்டீயா (Sangeetha N.Bhatia) என்பவர் கண்டுபிடித்துள்ளார். இவர், ஹார்வர்டு ஹீக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளராக உள்ளார். சிறுநீர்ச் சோதனை மூலம் கர்ப்பப் பை நோயைக் கண்டறிவது போல புற்றுநோயைக் கண்டறியலாம் என்கிறார். இது, மருத்துவத் துறைக்குக் கிடைத்த அரிய கண்டுபிடிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள்.  

மு.தனலெட்சுமி

சுட்டி ஸ்டார் நியூஸ்!

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

முயலுக்கு செலவு ஒரு லட்சம்!

சுட்டி ஸ்டார் நியூஸ்!

இங்கிலாந்தில் உள்ள யார்க்‌ஷயர் (Yorkshire) பகுதியில், அன்னெட் எட்வர்டு  ஒரு முயலைச் செல்லமாக வளர்த்து வருகிறார். டேரியஸ் (Darius) எனும் பெயர்கொண்ட இந்த முயல், உலகிலேயே மிகப் பெரியது. சுமார் 4 அடி 4 அங்குலம் நீளம்கொண்டது.

‘‘என் செல்ல டேரியஸ், வருடத்துக்கு சுமார் 4,000 கேரட்டுகளைச் சாப்பிடுகிறது. இதற்கு, சாப்பாடு மற்றும் பராமரிப்புச் செலவு, வருடத்துக்கு லட்ச ரூபாய்க்கு மேல்’’ என்கிறார் இதன் உரிமையாளர் அன்னெட்.

கொ.த.தருண்

சுட்டி ஸ்டார் நியூஸ்!

பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன்,

சத்யமங்கலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு