தினம் தினம் மாறும் இந்த உலகில், பழையன அறிந்துவைத்திருப்பதும், புதியன தெரிந்துவைத்திருப்பதும் நம்மை உயர்த்தும். இந்த ‘ஒரு தேதி... ஒரு சேதி’ அதற்கான வழிகாட்டியாக இருக்கும்.

பெரியார் என அனைவராலும் பெருமிதமாக அழைக்கப்பட்டவர், ஈ.வெ.ராமசாமி. ‘கடவுள் மறுப்பாளர்’

என்ற ஒரு விஷயத்தில் மட்டுமே இவரை அடக்கிவிட முடியாது. தன்னைச் சுற்றியுள்ள மக்கள் மீதும், அவர்களின் முன்னேற்றத்தின் மீதும் அக்கறைகொண்டு, அவர்களின் அறியாமையை நீக்க வேண்டும் என்கிற தீராத போராட்டத்தில் ஈடுபட்டவர். மது ஒழிப்புப் போராட்டத்தின்போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அவரது தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவர், ஊர் ஊராகச் சென்று கதர் விற்றவர், பெண்களை அரசியலுக்குக் கொண்டுவந்தவர் என, பல சமூகச் சீர்திருத்தங்களை உருவாக்கியவர். அவரைப்

பற்றி மேலும் பல விஷயங்களை அறிவோமா?

டைனோசர் என்கிற சொல்லை, உலகின் மூலை முடுக்குகளில் இருக்கும் பாமரர்களையும் அறியச்செய்தவர், ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். “ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மேஜிக். பள்ளிக் காலத்திலேயே குட்டிக்குட்டிப் படங்களை எடுத்து, வீட்டில் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காண்பிப்பார். அதற்குக் கட்டணமாக சிறிய தொகை வசூலிப்பது, தங்கை தயாரித்த பாப்கார்னை விற்பது என ஆரம்பமே ஜாலியான பிரமாண்டம்தான். ஈடி, ஜுராசிக் பார்க், டின்டின் சாகசங்கள் போன்ற திரைப்படங்கள் மூலம் வியப்பின் உச்சிக்குக் கொண்டுசென்ற ஸ்பீல்பெர்க் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் அறிவோமா?

அண்ணல் அம்பேத்கர், ஜோதிராவ் புலே என ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள் வரிசையில் உச்சரிக்கப்படவேண்டிய பெயர், ரெட்டைமலை சீனிவாசன். பறையர் சமூகம் காலப்போக்கில் எப்படி ஒடுக்கப்பட்டது என்பதை அவர் கல்வெட்டுகள், அரசாங்கக் குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தினார். அவர் நடத்திய பறையர் மகாஜன சபையின் மூலம் விவசாயம் செய்ய நிலங்கள், கல்வி நிலையங்களில் இடம் ஆகியவற்றைச் சாதித்தார். காந்தியடிகளுக்கு தமிழ் சொல்லித் தந்த பெருமை இவருக்கு உண்டு. இவரைப் பற்றி இன்னும் பல அற்புதமான விஷயங்களை அறிந்துகொள்வோமா?