கே.ஆர்.ராஜமாணிக்கம்

''நான் எல்.கே.ஜி., படிக்கறப்ப ஸ்கூல்ல ஒரு செடியைக் கொடுத்தாங்க. வீட்டுக்குக் கொண்டு வந்தேன். 'ஏம்மா இந்தச் செடிய என்கிட்டே தந்தாங்க?’ன்னு அம்மாகிட்ட கேட்டேன். 'செடி நட்டுவச்சா, மரமா வளர்ந்தவுடனே மழை பெய்யும்; மழை பெய்தா பூமி சந்தோஷப்படும். பூமி சந்தோஷப் பட்டாதான் நாம சந்தோஷமா இருக்கமுடியும்’னு சொன்னாங்க. அம்மா சொல்லித்தந்த முதல் பாடம்தான் என்னோட இந்தப் பணிக்கு தூண்டுகோலா இருந்துச்சு. இதுவரை 5000 செடிகளை மற்றவர்களுக்குச் கொடுத்து இருக்கேன்'' என்று சொல்லி வியக்க வைக்கிறான் குரு விஷ்ணு.

சிதம்பரத்தில் உள்ள, எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறான் குரு விஷ்ணு. இவனது சாதனையைப் பாராட்டி, சான் ஃப்ரான்சிஸ் கோவில் உள்ள 'ஆக்ஷன் ஃபார் நேச்சர்’ என்கிற அமைப்பு, 2011-ஆம் ஆண்டுக்கான 'யங் எக்கோ-ஹீரோ’ என்ற விருதை வழங்கி உள்ளது.

குரு விஷ்ணுவுக்கு இந்த விருது சுலபமாகக் கிடைக்க வில்லை. சுற்றி உள்ள பல ஊர் களுக்கும் சென்று... 30 பள்ளிகள், 5 கல்லூரிகளில் மரம் நடுவதன் நன்மைகளை விளக்கிப் பேசி இருக்கிறான். இதற்காக சுமார் 25,000 மக்களைச் சந்தித்து இருக்கிறான். கடந்த 3 ஆண்டுகளில், மாணவர்களிட மும் பொதுமக்களிடமும் 5,000 செடிகளைக் கொடுத்து, அவர் களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி உள்ளான்.

''ஒருமுறை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த அறிவியல் மாநாட்டுக்குப் போனேன். அங்கே காண்பிச்ச குறும்படத்தில், பூமி அழுவது போலவும், விளையாடும் குழந்தைகளின் கையில் விழுவது

போலவும் பார்த்தேன். மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அந்தச் சம்பவமும் என்னை இந்தச் சேவையில் தீவிரமா இயங்கக் காரணமா இருந்துச்சு'' என்கிறான் நெகிழ்ச்சியுடன்.

அதன் பிறகு, முதல் வகுப்பு படிக்கும் போது, சுனாமியால் பாதிக்கப்பட்ட முடசல்ஓடை பகுதி மக்களுக்கு ஈஷா யோகா குழுவுடன் செடிகள் வழங்கித் தன் பங்களிப்பைச் செய்து இருக்கிறான்.

யங் எக்கோ-ஹீரோ விருதைத் தவிர, 'இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்’, 'சுற்றுச்சூழல் காவலர்’ போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளான்.

'சரி, 5,000 செடிகளைக் கொடுக்க பணம் ஏது?’ என்று கேட்டால்...

''நான் நல்லா கீ போர்டு வாசிப்பேன். கோயில் விழாக்களில் கீ போர்டு வாசித்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் செடிகள் வாங்குவேன்.'' என்கிற குரு விஷ்ணு, தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், பள்ளியில் ஒரு மரக் கன்று நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளான்.

''நான் எல்லோரிடமும் கேட்டுக் கொள்வது... அட்லீஸ்ட் உங்க பிறந்த நாளுக்காவது ஒரு மரம் நடுங்க, மரங்களை வெட்டாதீங்க. ஒரு மரத்தை வெட்டினால், 10 மரம் நடுங்கள். ப்ளாஸ்டிக் பொருள் களைப் பயன்படுத்தாதீங்க. துணிப் பை களையே பயன்படுத்துங்க. பட்டாசு கொளுத்தி வீணாக்கறதைவிட அந்தப் பணத்தை 'ட்ரீ ப்ளான்டேஷ’னுக்குக் கொடுங்க'' என்று சொல்கிறான்.

இந்தச் சுட்டி வயதிலேயே அவனது, சமூக சிந்தனையைக் கண்டு நமக்கு பிரமிப்பு! ஆனால், குரு விஷ்ணுவோ... மிகச் சாதாரணமாக இருக்கிறான்.

''உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் 'பில்லியன் ட்ரீ’ நடவேண்டும் என்ற இலக்கில்... என்னோட பங்களிப்பா லட்சம் மரம் நடும் முயற்சியில் இறங்கி இருக்கேன். அதைச் செய்வேன்'' என்றும் சொல்லி அசர வைக்கிறான்.

அட்டை, படங்கள்: ஜெ.முருகன்