Published:Updated:

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

Published:Updated:

னக்குப் பிடிச்ச 10 விஷயங்களைச் சொல்லச் சொன்னா, கொஞ்சமும் யோசிக்காமல் செஸ், செஸ், செஸ்னு 10 முறை சொல்வேன்” என அழகாக சிரிக்கிறார் செந்தமிழ் யாழினி.

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

குடியாத்தம், நெல்லூர்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் செந்தமிழ் யாழினி, சுட்டி விகடனின் இந்த ஆண்டு சுட்டி ஸ்டார்களில் ஒருவர். படைப்புகளால் கலக்கும் செந்தமிழ் யாழினி, சதுரங்க விளையாட்டிலும் தங்கத் தாரகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘சதுரங்கத்தை நான் கத்துக்கிட்டதே ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம். அந்த விஷயத்தை கதை மாதிரி சொல்றேன்.வருஷம் 2010. ஒரு ஊர்ல யாழினி யாழினு ஒரு பொண்ணு. அவங்க அப்பா ரோட்டரி கிளப் மெம்பர். அங்கே மெம்பரா இருக்கிறவங்களோட பசங்களுக்காக ஒவ்வொரு வருஷமும் பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. அப்படித்தான், யாழினியும் மேடை நாடகத்தில் வீரபாண்டியன் வேஷம் போட்டு, ஜாக்‌சன் துரையோடு மோதும் வசனம் பேசினா.

‘தமிழ்நாட்டுல எல்லோரும் பேசி பேர் வாங்கும் வசனம்தானே இது’னு நீங்க நினைக்கலாம். ஆனா, எல்லோரும் கை தட்டிப் பாராட்டினாங்க. அதைப் பார்த்து யாருக்கும் தோணாத ஒரு விஷயம், யாழினியின் அப்பாவுக்குத் தோணிச்சு.  தடுமாறாமல் இவ்வளவு நீளமா வசனம் பேசுறதுக்கு நினைவாற்றல் முக்கியம். செஸ் போட்டிக்கும் முக்கியமானது நினைவாற்றல். இந்த நினைவாற்றல் திறனை சதுரங்க விளையாட்டில் செலுத்தலாமேனு யாழினிகிட்டே சொன்னார். அப்படி விளையாட ஆரம்பிச்சு,  தேசிய அளவிலான போட்டியில் ஜெயிக்கிறாள். இந்த நிஜக் கதை போதுமா?’’ எனச் சிரிக்கிறார் செந்தமிழ் யாழினி.

சதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முதல் இடம் பெற்றுவருகிறார் செந்தமிழ் யாழினி.

தமிழ்நாடு மாநில சதுரங்கச் சங்கம் நடத்திய 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து, அகில இந்திய சதுரங்கச் சங்கம்  நடத்தும்  தேசியப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறார்.

‘‘இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (School Games Federation of India - SGFI) நடத்தும் தேசிய சதுரங்கப் போட்டிகளில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை சார்பாக தேர்வுபெற்றேன். 2013-2014 கல்வியாண்டில் தேசிய வெள்ளிப் பதக்கத்தையும், 2014-2015 கல்வியாண்டில் தேசிய தங்கப் பதக்கத்தையும் வென்றேன். 2015-2016 கல்வியாண்டில் அக்டோபர் மாதம் நடைபெறும் 60-வது தேசிய சதுரங்கப் போட்டியிலும் தங்கத்தோடு வருவேன். அதுக்காக பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். இன்னும் சில வருஷத்தில், ‘கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சீனியர்  சுட்டி ஸ்டார் ஆவேன்’’ என்கிற, செந்தமிழ் யாழினி குரலில் 100 மடங்கு நம்பிக்கை.

கட்டுரை, படங்கள்: ம.சுமன்