Published:Updated:

வைரல் ஹிட்ஸ்!

வைரல் ஹிட்ஸ்!

வைரல் ஹிட்ஸ்!

வைரல் ஹிட்ஸ்!

Published:Updated:

ஜோஜோக்கு வயது நான்கு. ஆனால், 60 வயது பாட்டி போல அவ்வளவு பேச்சு. சில மாதங்களுக்கு முன்பு, ‘கவுன் போட்டால் நான் இளவரசி ஆகிடுவேனா?’  என அவள் அப்பாவிடம் பேசிய வீடியோ வைரல். அப்போதே, ஏராளமான ரசிகர்கள் ஜோஜோவுக்கு. இப்போது, ஒரு திருமணத்தில் ‘ஃப்ளவர் கேர்ள்’ நம்ம ஜோஜோ. மேற்கத்தியத் திருமணங்களில் மணமக்கள் நடந்துவரும்போது, பாதையின் இருபுறமும் நின்று பூக்களைத் தூவும் குழந்தைகள்தான் ஃப்ளவர் கேர்ள்ஸ். ஜோஜோ, ஃப்ளவர் கேர்ள் பற்றியும், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றியும் பேசுவதைக் கேளுங்கள். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கேட்டு, வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

வைரல் ஹிட்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லகப் புகழ்பெற்றவர், ‘பெஸ்’ என்னும் ஸ்டாப் மோஷன் ஆர்ட்டிஸ்ட். வித்தியாசமான குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுப்பதில் கில்லாடி. அது என்ன ஸ்டாப் மோஷன்? இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும். ஹோண்டா நிறுவனத்தின் விளம்பரத்துக்காக, ஆயிரக்கணக்கான படங்களை வரைந்தார் பெஸ். அதைவைத்தே, இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறார். ஹோண்டாவின் வரலாற்றைச் சில நிமிடங்களில் காட்டும் இந்தப் படங்களுக்காக நான்கு மாதங்கள் உழைத்திருக்கிறார். வைரல் ஹிட் அடித்து, அதற்கான பலனைத் தந்திருக்கிறது.

வைரல் ஹிட்ஸ்!

குழந்தைகளைவிட சந்தோஷமான விஷயம் என்ன இருக்கிறது? குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எனக் குடும்பமே குதூகலிக்கும். ஆனால், அந்தக் குழந்தைக்கு அப்போது எதுவும் தெரியாது. அவர்கள் உணர்ந்து அனுபவிக்கும் சந்தோஷம், இரண்டாவது பிறந்தநாளில்தான் இருக்கிறது. இந்த வீடியோவில், வில்லியம்சன் தம்பதிகளின் மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வருகிறது. கப் கேக்கில் மெழுகுவத்தி ஏற்றி, குழந்தையை ஊதச் சொன்னார்கள். என்ன என்னவோ செய்கிறது குழந்தை. ம்ஹூம். மெழுகுவத்தி அணையவில்லை. நம்ம அப்பா என்றால், அவரே ஊதி இருப்பார். ஆனால், இவர் ஸ்பெஷல் அப்பா. என்ன செய்கிறார் என்பது க்யூட் சஸ்பென்ஸ். பார்த்து முடித்ததும் கைகளைத் தட்டுவீர்கள்.

வைரல் ஹிட்ஸ்!

தாவது வித்தியாசமாக செய்துகொண்டிருப்பது கூகுளின் வழக்கம். சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் பல விஷயங்களை வெளியிடும் கூகுளின் லேட்டஸ்ட் கலாட்டா ‘டீப் ட்ரீம்’ என்னும் புராஜெக்ட்.  டீப் ட்ரீம் என்ன செய்யும்? நீங்கள் எடுக்கும் படங்கள், வீடியோவை அப்படியே மாற்றிவிடும். நதியை படமெடுத்தால், அது பாலைவனமாக மாறிவிடும். பக்கத்து வீட்டு அங்கிளை வீடியோ எடுத்தால், அவரை டைனோசராக மாற்றிவிடும்.  இந்த வீடியோவை பாருங்கள். சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று படம் எடுத்திருக்கிறார்கள். அதை, டீப் ட்ரீம் சாஃப்ட்வேர், நாய்களின் உலகமாக மாற்றிவிட்டது. பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து, தள்ளுவண்டி வரை எல்லா இடங்களிலும் நாய்கள்தான்.

வைரல் ஹிட்ஸ்!

- கார்க்கிபவா