Published:Updated:

'மூக்குக்கொம்பன்' என்கிற காண்டாமிருகம்!

'மூக்குக்கொம்பன்' என்கிற காண்டாமிருகம்!

'மூக்குக்கொம்பன்' என்கிற காண்டாமிருகம்!

'மூக்குக்கொம்பன்' என்கிற காண்டாமிருகம்!

Published:Updated:

 பூமியில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக, அதிக மாற்றம் அடையாமல் வாழும் உயிரினம், காண்டாமிருகம்.

 சராசரி ஆயுட்காலம் – 35 முதல் 50 ஆண்டுகள்.

'மூக்குக்கொம்பன்' என்கிற காண்டாமிருகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மூக்குக்கொம்பன், கொந்தளம் என்றும் அழைக்கப்படுகிறது. புல், இலைகள், பழங்களை மட்டுமே சாப்பிடும் தாவர உண்ணி.

 காண்டாமிருகத்தின் தோல் தடித்துக் காணப்பட்டாலும், மிகவும் மென்மையானது. வெயிலின் தாக்கத்தில் இருந்தும் பூச்சிகளின் தொல்லையில் இருந்தும் தோலைப் பாதுகாத்துக்கொள்ள சேற்றைப் பூசிக்கொள்ளும்.

 சராசரியாக, மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.

 ஜாவா, சுமத்ரா மற்றும் கறுப்பு இனக் காண்டாமிருகங்கள், அழிந்துவரும் உயிரினங்களாக அறியப்பட்டுள்ளன.

 தற்போது, ஜாவா காண்டாமிருகம் 50-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன.

 காண்டாமிருகத்தின் கொம்பு, சராசரியாக 20 இஞ்ச் வளரும். இது, நமது நகங்கள் மற்றும் தலைமுடியைப் போல கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது.

 கொம்புகளுக்காகவே அதிகம் வேட்டையாடப்படும் மிருகம்.

 குட்டிக் காண்டாமிருகம், மூன்று ஆண்டுகள் வரை தாயின் அரவணைப்பில் வளரும்.

 காண்டாமிருக இனங்களைப் பாதுகாக்க, உலகக் காண்டாமிருக தினத்தை ஒட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் பல நாடுகளிலும் நடத்தப்படுகின்றன.

 இதற்கென இயங்கும் www.worldrhinoday.org <http://www.worldrhinoday.org> என்ற இணைய தளங்களில், இந்த நிகழ்வுகள் குறித்த விவரங்களை அறியலாம்.

- கார்த்திகா முகுந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism