Published:Updated:

சுட்டி க்ளிக்கர்ஸ்!

சுட்டி க்ளிக்கர்ஸ்!

சுட்டி க்ளிக்கர்ஸ்!

சுட்டி க்ளிக்கர்ஸ்!

Published:Updated:

டபட பட்டாம்பூச்சிகளும் சின்னச்சின்ன வண்ணப் பூக்களும் அந்த ஞாயிற்றுக்கிழமையின் பொன்மாலைப் பொழுதில் சிறைப் பிடிக்கப்பட்டன.

சுட்டி க்ளிக்கர்ஸ்!

சேலம், கன்னங்குறிச்சி பகுதியில் இருக்கிறது மூக்கனேரி ஏரி. மாலை நேரத்தில் அங்கே கூடிய சுட்டிகள் ஒவ்வொருவரின் கையிலும் கேமரா இருந்தது. ‘சேலம் கிளிக்கர்ஸ் கிளப்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ள சுட்டிகளின் கேமராவுக்குள் அந்த ஏரிப் பகுதியின் பசுமை, நீலம், வெண்மை, ஊதா, மஞ்சள் எனப் பலவித வண்ணங்களும் ஃப்ளாஷில் சிக்கி, ஷட்டரில் நுழைந்து, மெமரியில் லோட் ஆகின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுட்டி க்ளிக்கர்ஸ்!

பிறகு, தங்கள் கேமரா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். வர்ஷினியும், நாகஸ்ரீ ஹரிணியும் சகோதரிகள். இரண்டு ஆண்டுகளாக கேமராவுடன் ஃப்ரெண்ட்ஷிப். "எங்களுக்கு மலர்களைப் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம். வீட்டு மொட்டைமாடியில் இருக்கும் ரோஜா முதல், ஊட்டி மலர் கண்காட்சி மலர்கள் வரை எங்கள் கேமராவில் வாசம் வீசுகின்றன" என அழகாகப் புன்னகைத்தார்கள்.

சுட்டி க்ளிக்கர்ஸ்!

10-ம் வகுப்பு படிக்கும் நாகவிஷ்வம், உயிரற்ற பொருட்களின் உயிர்ப்பு உள்ள தருணங்களைப் படம் பிடிப்பதில் கில்லி. "எட்டாத தொலைவில் இருக்கும் வானத்தையும் மேகங்களையும் தொட்டுவிட வேண்டும் என்பது என் ஆசை. அதை என் கேமரா மூலம் செய்கிறேன்'' என்றார்.

முதல்முறையாக, தனது அக்கா மேடையில் நடனம் ஆடியதைப் புகைப்படங்கள் எடுத்த ஸ்ரீனிவாசன், அதற்குக் கிடைத்த லைக்குகளால், மனிதர்களின் உற்சாகத் தருணங்களைச் சிறைப்பிடிக்கிறார்.

சுட்டி க்ளிக்கர்ஸ்!

அஸ்வத், ஷிமோனா, கரூரைச் சேர்ந்த நாகஹரி ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தவாறு ஜாலியாக க்ளிக்ஸ் வேட்டையாடினர்.

சுட்டி க்ளிக்கர்ஸ்!

சேலம் கிளிக்கர்ஸ் கிளப்பைத் தோற்றுவித்த  புகைப்படக் கலைஞர் கௌரிசங்கர், அவர்களுக்கு நிறைய டிப்ஸ் அளித்தார். ‘‘ஆயிரம் வரிகளால் கட்டுரையில் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை, ஒரு புகைப்படம் மூலமாகச் சொல்லி அதிர்வை உண்டாக்கலாம். 100 வரிக் கவிதையின் அழகை, ஒரு புகைப்படம் மூலம் உணரவைக்கலாம். இந்தச் சின்ன வயதிலேயே போட்டோகிராஃபி மேல் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் உங்களைப் பார்க்க பெருமையா இருக்கு. இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்.  ஓகே ஃப்ரெண்ட்ஸ்... உங்க வெப்பன்ஸை தூக்கிட்டு வாங்க. மறுபடியும் சுட்டுத் தள்ளுவோம்" என்றதும் உற்சாகமாகக் கிளம்பினர்.
 

சுட்டி க்ளிக்கர்ஸ்!