Published:Updated:

நோபல் வின்னர்ஸ்!

நோபல் வின்னர்ஸ்!

நோபல் வின்னர்ஸ்!

நோபல் வின்னர்ஸ்!

Published:Updated:

வ்வோர் ஆண்டும் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் விருதுகளில் முக்கியமானது, நோபல். இந்த ஆண்டு நோபல் விருது பெற்றவர்கள் பற்றிய ‘நறுக்... சுருக்’ வரிகள்...

பொருளாதாரம்  

நோபல் வின்னர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆங்கஸ் டீட்டன் (Angus Deaton), ஸ்காட்லாந்தில் பிறந்தவர்.  மக்கள் நலத் திட்டங்களை வடிவமைப்பதிலும் வறுமையை ஒழிப்பதிலும் பொருட்களை வாங்கும் மக்களின் தன்மை தொடர்புடையதாக இருக்கிறது, என்ற இவரது ஆய்வின் முடிவு, வளர்ச்சியை நோக்கிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் நுண் பொருளாதாரவியல் துறைகளில் பெரும்  மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

இலக்கியம்

நோபல் வின்னர்ஸ்!

அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, புனைவு அல்லாத (Non fiction) எழுத்துக்காக, ‌பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் (Svetlana Alexievich) விருது பெற்றிருக்கிறார். போர்க்களங் களில் பெண்கள் மீதான வன்முறை, செர்னோபில் அணு உலை விபத்து, ஆப்கானிஸ்தானில் பழைய சோவியத் யூனியனின் போர் ஆகியன பற்றி இவர் எழுதியிருக்கிறார். நோபல் பரிசு அறிக்கையில், “நம் காலத்தின் துயரங்கள் மற்றும் அவற்றை எதிர்த்த துணிச்சலின் நினைவுச் சின்னமாக ஸ்வெட்லானாவின் எழுத்துகள் உள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம்

நோபல் வின்னர்ஸ்!

ஒட்டுயிரிகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  தாவரங்கள், விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒட்டுயிரிகளால் ஏற்படும் நோய்களில் யானைக்கால் நோய், மலேரியா போன்றவை, பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்தன. சீனாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி, யுயூ டு (Youyou Tu), சித்த வைத்தியம் போன்ற சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவ முறையில் ‘அர்டமைசினின்’ (Artemisinin) என்ற மருந்தைக் கண்டறிந்தார். மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததற்கு இந்த மருந்து முக்கியக் காரணம். மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 12 - வது பெண் யுயூ டு. இவரோடு யானைக்கால் நோய் மற்றும் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் உருளைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்தைக் கண்டறிந்த ஜப்பானைச் சேர்ந்த சடோஷி ஓமுரா (Satoshi omura) மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் கேம்பெல் (William Campbell) ஆகியோரும் நோபல் பரிசைப் பெறுகின்றனர்.

நோபல் வின்னர்ஸ்!

வேதியியல்

நோபல் வின்னர்ஸ்!

நம் உடலின் அடிப்படைக் கூறான செல்களைப் பற்றிய முக்கியமான ஆய்வுக்கு, இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சுகள், நோய்கள், புற்றுநோய் போன்றவற்றாலும் சில சமயங்களில் மரபணுக்களின் டி.என்.ஏக்கள் இயல்பாகவே பழுதடைந்துவிடும். நம் உடலின் செல்கள், அவற்றை எவ்வாறு சரிசெய்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுக்காக ஸ்வீடனைச் சேர்ந்த, தாமஸ் லிண்டால் (Tomas Lindahl), அமெரிக்காவைச் சேர்ந்த, பால் மாட்ரிச் (Paul Modrich) மற்றும் அஸிஸ் சன்கர் (Aziz Sancar) ஆகியோர் பெறுகின்றனர். இந்த ஆய்வுகள், ஒட்டுமொத்தமாக டி.என்.ஏ பழுதுகளைப் பற்றிய தெளிவான பார்வையை வழங்கியுள்ளன.இதன் மூலம், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

நோபல் வின்னர்ஸ்!

இயற்பியல்

நோபல் வின்னர்ஸ்!

அடிப்படை அணுத்துகளான நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளுக்காக, ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி டகாகி கஜிடா (Takaaki Kajita) மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆர்தர் பி.மெக்டொனால்டு (Arthur B. McDonald) ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். பிற அடிப்படை அணுத்துகள்களைப் போல அல்லாமல், நியூட்ரினோ துகள்களை ஆய்வுச்சூழலில் பிடித்துவைத்து ஆய்வுகளைச் செய்ய முடியாது. பிரபஞ்சத்தில் பயணம் செய்யும் நியூட்ரினோத் துகள்களும், சூரியனில் இருந்து வெளிப்படும் நியூட்ரினோ துகள்களும் பூமியைத் துளைத்துச் செல்லக்கூடியவை. எனவே, அதனுடைய பயணத்திலேயே ஆய்வுசெய்ய வேண்டும். இதற்காக, பல ஆய்வுக் கூடங்கள் உலகின் பல இடங்களில் உள்ளன. ஜப்பான் ஆய்வகத்தை மையமாகக்கொண்டு டகாகி கஜிடாவும், கனடா ஆய்வகத்தை மையமாகக்கொண்டு ஆர்தர் மெக்டொனால்டும் மேற்கொண்ட ஆய்வுகளில் நியூட்ரினோ துகள்கள் அடிப்படைப் பண்புகளில் மாற்றம் பெற்று வேறு வகையான அடையாளங்களைப் பெறுகின்றன என்பதனைக் கண்டறிந்துள்ளனர்.

அமைதி

நோபல் வின்னர்ஸ்!

2011-ம் ஆண்டு, துனிசியா மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சியின் (Jasmine revolution) முடிவில், துனிசியா நாடே வன்முறைக் காடாக மாறியது. இனி,  துனிசியாவில் ராணுவ ஆட்சிதான் நடைபெறும் எனப் பலரும் பயந்தார்கள். இந்த நிலையில் துனிசியா நாட்டின் தொழிலாளர் சங்கம், தொழில்துறைக் கூட்டமைப்பு, மனித உரிமைகள் கழகம் மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஆகிய நான்கு அமைப்புகளும் ஒருங்கிணைந்து, ‘துனிசியா தேசிய ஆலோசனைக் குழு’வை அமைத்தது. ஆரோக்கியமான ஜனநாயகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றது. துனிசியா தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தச் செயல்பாட்டுக்காக, இந்த அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.

- இனியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism