வாசகிகள் பக்கம்

பிரபல நிறுவனம் ஒன்றின் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக, மகாராஷ்ட்ரா மாநிலம், புனே நகருக்கு என் கணவர் சென்றிருந்தார். அவரது தகுதி அறிந்து வேலையும் கொடுத்தார்கள். கை நிறைய சம்பளம் கிடைத்தது. ஆனால், கொஞ்ச நாட்களிலேயே அந்த நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண்ணால் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் கணவரை இன்டர்வியூ செய்தபோதே, அவரைப் பற்றிய முழுவிவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்ட அந்தப் பெண், நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கணவரிடம் பழக ஆரம்பித்திருக்கிறாள். அப்படியே, தன் வலையில் வீழ்த்தியதோடு, கொஞ்சம் கொஞ்சமாக பணமும் கறந்திருக்கிறாள்.

கை நிறைய சம்பளம் வந்த போதும், என் கணவர் பொருளாதார ரீதியாக தடுமாறுவது தெரிந்தது. சமயங்களில் அவருடைய நடவடிக்கைகளிலும் ஏக மாற்றம். சுதாரித்துக் கொண்ட நான், மெள்ள விவரம் கேட்க, பல

லட்சங்களை அவளிடம் இழந்த விஷயத்தைச் சொல்லி அழுதார். அதிர்ந்து போன நான், உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு சென்னைக்கே வந்துவிட்டேன். அதன்பிறகும் விடாத அந்தப் பணப்பேய், என் கணவரை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினாள். ஒரு கட்டத்தில் அவளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகாரையும் கொடுத்தவள், '5 லட்ச ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறேன்' என்று கூறி பணத்தைப் பறித்துக்கொண்டு, புகாரை வாபஸ் வாங்கினாள்.

இந்த விஷயம் எங்கள் உறவுகளுக்கு தெரிந்துவிடவே, பணத்தை இழந்தது மட்டுமல்லாமல், மானத்தையும் இழந்துவிட்டோம். உச்சகட்ட விளைவாக, உறவுகள் ஒதுங்கிக் கொண்டு விட, தனி மனிதர்களாக வாழ்ந்து வருகிறோம்.கணவனை எதற்கு எடுத்தாலும் சந்தேகப்படுவது தவறுதான். அதற்காக கண்டு கொள்ளாமலேயே விடுவது, அதைவிட பெரும் தவறு. இந்த உண்மையை பேரிழப்புக்குப் பிறகே நான் உணர்ந்தேன். உஷார் தோழிகளே!

- வாடும் ஓர் இல்லத்தரசி

இப்படி உங்களுக்கும் ஏதாவது அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதை எல்லாம் இங்கே இறக்கி வையுங்கள். அது, உங்கள் மனபாரத்தை இறக்கி வைப்பதோடு, மற்ற தோழிகளுக்கு எச்சரிக்கையாகவும் அமையப் போகிறது! உங்கள் அடையாளங்கள் எதை யுமே நீங்கள் தரத் தேவை யில்லை. ரகசியத்துக்கு நாங்கள் 100% கியாரன்டி! உடனே, உங்கள் செல்போனிலிருந்து 04442890003 என்ற எண்ணை அழுத் துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்கள். நினை விருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.

வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.