தேவையான பொருட்கள்: செலஃபன் டேப், க்விக்ஃபிக்ஸ் கம், ஸ்கேல், CD பாக்ஸ், கட்டர், ஸ்மார்ட்போன்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1. சிடி (பாக்ஸ்) கவரை 3.5 செ.மீ, 1 செ.மீ அகலம் மேல் பாகம், 6 செ.மீ கீழ் பாகம் கொண்ட முக்கோணமாக அளந்து, (பெரியவர்களின் உதவியுடன்) வெட்டிக் கொள்ளவும்.

2. நான்கு முக்கோணத் துண்டுகளையும் தனித்தனியே பிரித்து எடுத்துக்கொள்ளவும்.

3. பிரமிடு இணைப்பை க்விக் ஃபிக்ஸ் மூலம் ஒட்டவும். பிரமிடு நன்றாக ஒட்டிக்கொண்டதும் செலஃபன் டேப்பைப் பிரித்துவிடவும்.

4. நான்கு துண்டுகளையும் செலஃபன் டேப்பால் இணைத்து, ஒரு பிரமிடு செய்யவும்.

5. இந்தப் பக்கத்தில் பிரின்ட் ஆகி இருக்கும் படத்துக்கு நடுவில், பிரமிடு செட்-அப்பைத் தலைகீழாகத் திருப்பிவைக்கவும். வண்ணத்துப் பூச்சியின் படம், அந்தரத்தில் 3D படமாகத் தெரியும்.


6. உங்கள் ஸ்மார்ட்போனை படுக்கை வசத்தில் வைக்கவும். போன் மூலம் இன்டர்நெட்டில் https://i.ytimg.com/vi/T4AG0Tave3o/maxresdefault.jpg என்று பிரௌஸ் செய்தால், வீடியோக்கள் வரும். இப்போது, ஸ்மார்ட்போனின் மத்தியில், படத்தில் காட்டியபடி பிரமிடைத் தலைகீழாகவைத்தால், 3D படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
ஓவியம்: ராம்கி
அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில்

முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால்தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.