Published:Updated:

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

-கலெக்டருடன் ஒரு சந்திப்பு

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

-கலெக்டருடன் ஒரு சந்திப்பு

Published:Updated:

வெள்ளைக் கட்டடம், சுற்றிலும் பூத்துக் குலுங்கும் வண்ணப் பூச்செடிகள், பசுமையான மரங்கள் என

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

ரம்மியமாகக் காட்சி அளித்தது, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இதற்கு முன்பு, எங்களில் சிலர் இந்த வழியாகச் சென்றிருக்கிறோம். சிலர், வாசல் வரை வந்தது உண்டு. இப்போதுதான் முதல் முறையாக உள்ளே வருகிறோம். கடலூர் மாவட்ட ஆட்சியரான சுரேஷ்குமார், புன்னகையுடன் எங்களை வரவேற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

‘‘கலெக்டராக நான் நிறையப் பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும்விட இந்தப் பேட்டி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், உங்களுக்கு பேட்டி கொடுப்பதைப் பார்க்க, உங்களைப் போலவே மாணவனாகிய என் மகனும் வந்திருக்கிறார்’’ என்றார்.

‘‘பல துறைகள் இருக்க, நீங்கள் ஏன் ஆட்சியர் ஆக விரும்பினீர்கள்?’’

‘‘ஒவ்வொருவரும் தான் பிறந்ததற்கு அர்த்தமாக, நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். அன்றாட வாழ்வில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை யாரால் சரிசெய்ய முடியும் என்றால், அது மாவட்ட ஆட்சியரால்தான் முடியும். அதனாலேயே இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன்.’’

‘‘கடலூர் மாவட்ட வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?’’

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

‘‘சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இது, அரசின் வேலை என நினைக்காமல், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதோடு, நம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அதற்காக, ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்திவருகிறோம்.’’

‘‘கலெக்டரின் பணிகள் நிறைய இருக்கும். இதற்கு நடுவில்     பிஹெச்.டி முடித்ததாக அறிந்தோம். அது எப்படி?’’

‘‘நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்வேன். இ-புக்ஸ் டவுண்லோடு செய்து, காரில் செல்லும் நேரத்திலும் படிப்பேன். படிப்புக்கு நான் அடிமை என்றே சொல்வேன். பொதுவாக, நீண்ட நேரம் படித்தால் டயர்டு ஆகிவிடும்தானே? ஆனால், நான் படிக்கப் படிக்க ப்ரெஷ் ஆவேன். அதுதான் பிஹெச்.டி முடிக்க உதவியது.’’

‘‘உங்களைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் நல்லதா... கெட்டதா?’’

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

‘‘சமூக வலைத்தளங்கள் என்பது ஒரு டெக்னாலஜிக்கல் டெவலப்மென்ட். அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. பாசிட்டிவ் பக்கம், நெகட்டிவ் பக்கம். அது ஒரு கத்தியைப் போன்றது. அதைப் பயன்படுத்த நேர்மையான அணுகுமுறை வேண்டும்.’’

‘‘பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை டி.வி பார்க்கவிடாமல் படிக்கச் சொல்கிறார்கள். மாணவர்களால் இரண்டையும் பேலன்ஸ் பண்ண முடியாதா?’’

‘‘இன்றைய குழந்தைகளிடம் செல்ஃப் கன்ட்ரோல் குறைவாக உள்ளது. இனிப்பு சாப்பிட நமக்குப் பிடிக்கும். அதற்காக நிறையச் சாப்பிடக் கூடாது. அதேபோல்தான் டி.வி பார்ப்பதும். தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்.’’

படிக்கப் படிக்க ப்ரெஷ்!

‘‘அரசு அலுவலகங்களில் மாற்றுமுறையில் மின்சாரம் பயன்படுத்தலாமே?’’

‘‘கடலூரில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Solar Roof Top போடப்பட்டுள்ளது. இதில் குறைகள் எனப் பார்த்தால், ஆரம்பகால முதலீடு மிக அதிகம். அதற்கான Availability குறைவு. கடலூர் முழுவதும் ‘பசுமை வீடுகள் அனைத்திலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.’’

‘‘கலெக்டராக ஒரு மாவட்டத்துக்குச் செய்யவேண்டிய பணிகளைச் செய்கிறீர்கள். வீட்டில் உங்க பையனுக்கு ஹோம்வொர்க் செய்ய உதவி செய்வீர்களா?’’

(சிரித்தபடி) ‘‘ம்... செய்வேன். அவனுடன் செலவிட எனக்கு சிறிது நேரமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் சிறுசிறு உதவிகள் செய்வேன்.’’

- கீர்த்திவாசன், சீனிவாசன், ஜெய் ராகுல், ஆகாஷ், த்ரிஷா கமலி, மிருதுளா, அஃரோஸ் அஃப்ரின், மரியா ஸ்வாதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism