Published:Updated:

ஒப்பற்ற வழிகாட்டி!

ஒப்பற்ற வழிகாட்டி!

ருவரை சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. ஆனால், கோடியில் ஒருவரைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட அற்புதமான மனிதர், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவரைப் பற்றித்  தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு செய்தியும் நமக்கு தன்னம்பிக்கை அளிக்கும். படிக்கப் படிக்க சலிக்காது.

ஒப்பற்ற வழிகாட்டி!

விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் ‘கலாம் கனவு நாயகன்’ புத்தகம், அப்துல் கலாம் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளைப் பல வடிவங்களில், புதுமையான முறையில் தொகுத்து அளித்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவரே சொல்வதுபோல, சுட்டிகளுக்குப் பிடித்த  காமிக்ஸ் வடிவில் இருக்கிறது. அதில், அப்துல் கலாம் பள்ளியில் படிக்கும்போது, தவறுதலாக வேறொரு வகுப்பில் நுழைந்துவிடுகிறார். அங்கே பாடம் நடத்திக்கொண்டிருந்த கணக்கு ஆசிரியர், கலாமின் காதைத் திருகி, திருப்பி அனுப்புகிறார். சில நாட்களிலேயே கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி, அவரிடமே பாராட்டைப் பெறுகிறார் கலாம். அந்த நிகழ்வு, நம் கண்முன் நடப்பதுபோல தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

வாசகர்களின் கேள்விகளுக்கு கலாம் அளித்திருக்கும் பதில்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கும் கவிதை, நெகிழ்ச்சியின் உச்சம். அப்துல் கலாம் மாணவர்களுக்குக் கூறிய பொன்மொழிகள் புத்தகத்தின் மணிமகுடம்.

ஒப்பற்ற வழிகாட்டி!

விஞ்ஞானியாகச் செய்த பணிகள், ஜனாதிபதியாக ஆற்றிய சேவைகள் என வெவ்வேறு காலகட்டங்களில் கலாமைப் பற்றி விகடன் குழும இதழ்களில் வெளியான செய்திகள், அபூர்வப் புகைப்படங்களோடு இருக்கின்றன.

இந்த நாட்டை நேசித்ததற்கு இணையாக, குழந்தைகளையும் நேசித்த அப்துல் கலாம் என்கிற ஒப்பற்ற வழிகாட்டியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் புத்தகம்!    

வெளியீடு:  விகடன் பிரசுரம்

757, அண்ணா சாலை,சென்னை- 600 002 விலை: `185

- வி.எஸ்.சரவணன்