‘‘பென்சில், கிரையான்ஸ் இல்லாமல் ஓவியம் வரைய ரெடியா?’’ என எங்கள் பள்ளியின் சுட்டி ஓவிய பிரம்மாக்களுக்கு சவால் விட்டோம்.

ஒட்டிக்கோ ஓவியம்!

‘‘அது எப்படி அக்கா வரையறது?’’ எனக் கேட்டவர்களிடம் சார்ட்டைக் கொடுத்தோம்.

‘‘இந்த சார்ட் முழுக்க பசை தடவிக் கொடுத்திடுவோம். பசை காயறதுக்குள்ளே, இந்த மைதானத்தில் கிடைக்கும் இலை, பூ, மண் என எதை வேண்டுமானாலும் ஒட்டலாம்’’ என்றதும் குஷியும் சுறுசுறுப்புமாகத் தயாரானாங்க.

ஒட்டிக்கோ ஓவியம்!

வாங்க... அவங்க பின்னாடியே போய் என்ன செய்றாங்கனு பார்ப்போம்.

நான்காம் வகுப்பு ஆதித்யாவுக்கு வேப்ப மரத்தின் இலைகள் தேவை. ஆனால், நான் கையில் சிக்குவேனானு அது உயரத்தில் இருந்துக்கிட்டு, காற்றில் டான்ஸ் ஆடியது. ‘நான் விட்டுடுவேனா’னு ஆதித்யா, அந்தப் பக்கமாக வந்த பெரிய கிளாஸ் மாணவியிடம், ‘‘அக்கா, அந்த இலையைப் பறிச்சிக் கொடேன்’’ எனக் கேட்டு வாங்கினான்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் சூர்யா, கொஞ்சமும் அலட்டிக்காமல் கீழே கிடக்கும் புற்களைப் பிடுங்கினான். அருகில் இருந்த ரோஸி, ‘‘அதை ஏன் எடுக்கிறே?’’ எனக் கேட்டாள். ‘‘வல்லவனுக்கு புல்லும் ஓவியம்’’னு சொல்லிட்டு, கெத்தா நடந்துபோனான்.

ஒட்டிக்கோ ஓவியம்!

கலர் கலரா பூக்களைப் பறிச்சுட்டு வந்த நந்திதா, காய்ந்த இலைகளாகப் பார்த்து எடுத்து வந்த வினோதன் என கொஞ்ச நேரத்தில், எல்லோரும் சொன்ன இடத்தில் ஆஜர் ஆனாங்க.

இரண்டு இலைகளை மடக்கி ஒட்டி, ‘‘வண்ணத்துப்பூச்சி வந்தாச்சு” எனக் குஷியாகக் கத்தினாள் பிரதீபா. பென்சில் சீவலைத் தலையாக வைத்து, இலையை உடலாக மாற்றி, புற்களைக் கை, கால்களாக மாற்றிம் மனித உருவத்தைக் கொண்டுவந்தாள் ரோஸி.

ஒட்டிக்கோ ஓவியம்!

‘பனை மரத்துல வெளவாலா எங்களுக்கே சவாலா’னு கொஞ்ச நேரத்தில் விதவிதமான இலை ஓவியங்கள் ரெடி.

ஒட்டிக்கோ ஓவியம்!

அவர்கள் உருவாக்கிய ஓவியங்களோடு வரிசையாக நின்று சூப்பரா சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுத்தாங்க. அதைத்தான் நீங்க அடுத்தப் பக்கத்தில் பார்க்கிறீங்க.

எப்படி இருக்கு இந்த ஒட்டிக்கோ ஓவியங்கள்?  

- ரிஷிகா, இளமதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு