‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள்.மொழியின் துணையின்றியே பல உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகம் குறித்த சில ‘முக’வரிகள்...

சில துளி 'முக'வரி!

•  மனித உடலில் முகத்தின் தசை அமைப்பு, மற்ற பாகங்களில் இருந்து வேறுபட்டது. மனித முகம் 10,000 வகை பாவனைகளை வெளிப்படுத்தும்.

•  நாம் உண்மையாக சிரிக்கையில் உதடுகள் மேல்நோக்கி வளையும். கண்களின் ஓரங்கள் சுருங்கும். பொய்யாக சிரிக்க முயற்சித்தால், உதடுகளை வளைக்கலாம். ஆனால், கண்கள் சுருங்காது.

சில துளி 'முக'வரி!

•  மனித முகத்தைச் சுற்றி 14 எலும்புகள் உள்ளன. மனித மண்டையோட்டு எலும்புகளில் அசையும் தன்மைகொண்டது, தாடைப் பகுதி எலும்பு மட்டுமே.

•  நமது உதடுகள் மட்டும் ஏன் சிவப்பாக இருக்கின்றன? உதட்டுப் பகுதியில், தோலுக்கு அடியில் நுண்ணிய கேப்பில்லரி ரத்தக் குழாய்கள் உள்ளன. அதிக அளவு ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தம் இங்கே பாய்வதால், உதடுகள் சிவப்பு நிறமாகத் தோன்றுகின்றன.

சில துளி 'முக'வரி!

•  உணவை அசைபோட உதவும் தசைப் பகுதி, மனித உடலின் வலிமையான தசைகளில் ஒன்று. தனது எடையைப் போல் 80 மடங்கு எடையை இழுக்கும் திறன்கொண்டது.

•  மனித மூக்கு 50,000 வகை வாசனைகளைப் பிரித்து அறியும் திறன்கொண்டது.

சில துளி 'முக'வரி!

•  மனித முகம் கடந்த 6 மில்லியன் ஆண்டுகளில் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்துள்ளது என்பதைக் காட்டும் சுவாரஸ்யமான ஒரு நிமிட வீடியோவை, இந்த இணைப்பில் காணலாம்.

- கார்த்திகா முகுந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு