பெரம்பலூரின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்க, இயற்கை எழிலோடு உள்ளது, எங்கள் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வித்யாஷ்ரம் CBSE. எங்கள் பள்ளியில் 73 ஆசிரியர்களும் 1,283 மாணவர்களும் உள்ளனர். 2000-ம் ஆண்டு, 14 மாணவர்களுடன் தொடங்கிய பள்ளி இது.

எங்கள் பள்ளி!
எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளியின் தாளாளர், ஆர்.ரவிச்சந்திரன். பள்ளி முதல்வர், ஆர்.அங்கயற்கண்ணி. தனது 22-வது  வயதிலேயே, ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எங்கள் தாளாளரின் தங்கக் கனவே எங்கள் ‘கோல்டன் கேட்ஸ்’ பள்ளி. ‘முதலில் ஒழுக்கம், பின்பு கல்வி, அறிவு, விளையாட்டு’ என்பதே எங்கள் பள்ளியின் தாரக மந்திரம்.

எங்கள் பள்ளி!
எங்கள் பள்ளி!

எங்களைத் தங்கள் குழந்தைகளாகவே நினைக்கும் ஆசிரியர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எங்கள் பள்ளி, உடற்கல்விக்கு முக்கியத்துவம் தந்து, விளையாட்டுத் துறையில் ஜொலிக்க எங்களை ஊக்கப்படுத்துகிறது. கூடைப்பந்து, டென்னிஸ், பேட்மிட்டன் என அனைத்து விளையாட்டுகளிலும் நாளைய உலக சாதனையாளர்களை உருவாக்குவதில் எங்கள் பள்ளி முனைப்புடன் இருக்கிறது.

எங்கள் பள்ளி!

படிப்பு என்றால் பயம் எனும் பொதுவான அருஞ்சொற்பொருள்  எங்கள் பள்ளியில் கிடையாது. ஆசிரியர்களும் நாங்களும் நண்பர்கள் போல கலகலப்புடன் கலந்துரையாடி, எளிமையாகப் பாடங்களைக் கற்கிறோம்.

-  நி.செளமியா, ஜெ.வாசுகி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு