Published:Updated:

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

-சீர்காழி சிவசிதம்பரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சைக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. கர்னாடக இசையில் பல்வேறு சாதனைகள், விருதுகள் குவித்தவர், மருத்துவரான சீர்காழி சிவசிதம்பரம். அவருக்கு மற்றொரு மகுடமாக, இப்போது பெரம்பலூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவரைச் சந்தித்தோம், சந்தோஷ இசையில் நனைந்தோம்.

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

‘‘சங்கீதமும் பயின்று டாக்டர் தொழிலுக்கும் வந்தது எப்படி?’’

‘‘என் அப்பா சீர்காழி கோவிந்தராஜன், சங்கீத மாமேதை. எனவே, சிறு வயதிலேயே எனக்கும் சங்கீதத்தில் ஆர்வம் உண்டானது. இசை, நல்லொழுக்கத்தோடு கல்வியின் முக்கியத்துவத்தையும் அப்பா உணர்த்திக்கொண்டே இருந்தார். அதனால், படிப்பிலும் பாராட்டுகள் பெற்றேன். மருத்துவர் ஆனேன்.’’

‘‘இசையில் உங்கள் குருநாதர் யார்?’’

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

‘‘இசைச் சக்கரவர்த்தி கிருஷ்ணமூர்த்தி. எங்கள் அப்பாவும் குருநாதரும் ஒரே இசைப் பள்ளியில் பயின்றவர்கள். அவரால்தான் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளேன்.’’

‘‘நீங்கள் முதன்முதலில் பாடிப் பரிசு வாங்கியது எப்போது?’’

‘‘ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பெற்றோர் தின விழாவில் பாட வைத்தார்கள். அங்கே வாங்கிய பரிசை அப்பாவிடம் காட்டினேன். ‘இதை வாங்க ஏன்பா இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கணும்? ஒரு முறையாவது அதிக மார்க் வாங்கி, பரிசு வாங்கிட்டு வா. என்னைப் படிக்க வைக்க ஆள் இல்லை. நீயாவது படி’னு சொன்னார். படிப்பில் இருந்து எனது நோக்கம் மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.’’

‘‘பெரம்பலூர் மருத்துவக் கல்லூரியின் தலைவராகப் பொறுப்பேற்றுஉள்ளீர்கள். இந்த மாவட்டத்தை முன்னேற்ற நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?’’

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

‘‘ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலை, கல்வி அறிவு, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கிய மாவட்டம் எனப் பெயர் எடுத்திருந்தது பெரம்பலூர் மாவட்டம். இப்போது, சுகாதாரத் துறையில் சிறப்பாகவும், தாய் சேய் நலத் திட்டத்தில் முதன்மை மாவட்டமாகவும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது. அவரும் ஒரு மருத்துவர். அவரோடு சேர்ந்து, இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்தி சுகாதாரத் துறையில் தலை சிறந்த மாவட்டமாக மாற்றுவேன்.’’

‘‘உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது எப்படி இருந்தது?’’

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

‘‘மிகவும் நெகிழ்ச்சியான தருணம் அது. என் அப்பாவும் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.’’

‘‘மருத்துவத் துறை, இசைத் துறை இந்த இரண்டில் எந்தத் துறை உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது?’’

‘‘ இரு கண்களில் எது வேண்டும் எனக் கேட்டால் என்ன சொல்வது?  மருத்துவத் துறையும் இசைத் துறையும் எனது இரண்டு கண்கள். இரண்டுமே மக்களுக்காக அர்பணிக்கப்பட்டவை.’’

‘‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, ‘எனதருமை ராணுவ வீரர்களே’ என்னும் பாடலைப் பாடிய அனுபவம் எப்படி இருந்தது?’’

"இசையும் மருத்துவமும் இரண்டு கண்கள்!"

‘‘அந்தப் பாடலை நான் பாடியதும், கண் கலங்கி என்னைப் பாராட்டினார் கலாம் ஐயா. மறக்க முடியாத அனுபவம் அது.’’

ஒரு செல்ஃபியுடன் இசை மேதையிடம் விடைபெற்றோம்.

- ஆஃப்ரின், விபாகர், தனுஷா, பத்ரிநாத், விஷால், நிஷிதா, ப்ரீத்தி, அபர்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு