Published:Updated:

வெல்கம் 2016

வெல்கம் 2016

வெல்கம் 2016

வெல்கம் 2016

Published:Updated:

பிறந்தாச்சு 2016. புது வருஷம், புது டிரெஸ் எனக் கலக்கியிருப்பீங்க. உங்களை இன்னும் குஷிப்படுத்த, என்டர்டெயின் பண்ண இந்தப் புது வருஷத்தில் என்னவெல்லாம் வரப்போகுது...ஒரு குயிக் ரிப்போர்ட் இதோ.

வெல்கம் 2016

ஹாரி பாட்டர், அப்பா ஆகிட்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெல்கம் 2016

ஆமாம் ஃப்ரெண்ட்ஸ்... ஹாரி பாட்டர் புது சீரியல். ‘ஹாரி பாட்டர் அண்ட் தி க்ரஷ்டு் சைல்டு’, இரண்டு பாகங்களாக வரப்போகுது. இதுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியா இருக்காங்க நம்ம ஜே.கே.ரௌலிங். ஹாரி பாட்டரும் அவரது நண்பர்களும்  பெரியவங்களா இருப்பாங்க. அவங்க பசங்கதான், ஹீரோக்கள். இதை இந்த வருடம் மேடை நாடகமா நடத்த பிளான். அப்புறம், திரைப்படமாத் தயாரிப்பாங்க. சூப்பர்ல!

அட்டகாச அனிமேஷன்ஸ்!

வெல்கம் 2016

அனிமேஷன் கொண்டாட்டங்களுக்கு இந்த வருஷமும் குறைச்சல் இல்லை. ‘ஆங்ரி பேர்ட்ஸ்,’ ‘ஐஸ் ஏஜ்,’ ‘கொலிஷன் கோர்ஸ்,’ ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்,’ ‘ஃபைண்டிங் டோரி,’ ‘குங்ஃபூ பாண்டா பார்ட் - 3,’ ‘அனிமல் கிராக்கர்ஸ்’ என டஜன் கணக்கில், செம ஜாலியான அனிமேஷன் படங்கள் வரிசை கட்டி வரப்போகுது!

மினியன்ஸ் கலாட்டா!

வெல்கம் 2016

மொ்பைல் கவர், ஸ்கூல் பேக், மிட்டாய் என எல்லாவற்றிலும் அதகளம்செய்யும் மினியன்ஸ் கேரக்டரின் இந்த வருஷ தீம், மினியன்ஸ் கேன்வாஸ் ஷூ.  அமெரிக்கா,  இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரபரப்புக் கிளப்பும் இந்த கேன்வாஸ், கூடிய சீக்கிரமே இந்தியாவுக்கும் என்ட்ரி கொடுக்கப் போகுது. இந்திய மதிப்புக்கு 1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை இருக்கும். க்யூட் மினியன்ஸ், உங்கள் கால்களை அலங்கரிக்கப் போகுது!

- ஷாலினி நியூட்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism