Published:Updated:

மனம் உறுதிகொள்!

மனம் உறுதிகொள்!

மனம் உறுதிகொள்!

மனம் உறுதிகொள்!

Published:Updated:

‘பெரு மழையால், பள்ளிகளுக்கு நாளை விடுமுறை’ ‘இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை’... என அறிவிப்புகள் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. வீட்டில் டி.வி பார்த்துப் பொழுதைக் கழித்து, ஜாலியாக விளையாடிவிட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்வது கொஞ்சம் தடுமாற்றமாகவே இருக்கும்.

மனம் உறுதிகொள்!

சில நாட்கள் சைக்கிள் ஓட்டாமல் இருந்துவிட்டு, மீண்டும் ஓட்டும்போது, கொஞ்சம் திணறுவோம். ஆனால் தெருமுனையைத் தாண்டுவதற்குள், சைக்கிள் உங்கள் வசமாகிவிடும். அதுபோலத்தான் பள்ளிக்குச் செல்வதும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிக்குச் சென்றதும், ‘அடடா ஹோம்வொர்க் நோட் எடுத்துவர மறந்துட்டேனே, எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேனே’ எனப் பயப்படாதீர்கள். இது பழக்கம்தான். முதல் நாள் இரவே, அடுத்த நாளுக்கான விஷயங்களைச் சரிபாருங்கள். காலை நேரத்தில் தேவையில்லாமல் பதற்றப்படுவதை இது தடுக்கும். அம்மாவிடம் திட்டுவாங்குவதைக் குறைக்கும்.

ஒரு மாதம் முறையாக எதையும் படிக்கவில்லை... ஆனால், தேர்வுக்குப் படிப்பதற்கான நாட்கள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்படாதீர்கள். படிக்கும் நாட்களின் எண்ணிக்கை, என்னவெல்லாம் படிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணை போட்டுக்கொள்ளுங்கள். அதை ஆசிரியரிடம் காட்டிச் சரிபார்த்து, பின்பற்றுங்கள்.

எல்லா நாளும் படிக்கவேண்டியிருக்குமே என வருத்தப்பட வேண்டாம். படிப்பு, பொழுதுபோக்கு இரண்டையுமே தராசுபோல சமநிலைப்படுத்தினால், வாழ்வு இனிக்கும். படிப்பில் இலக்கு நிர்ணயித்து அதை அடையும்போது, உங்களுக்குப் பிடித்ததை நீ செய்துகொள்ளலாம். பாட்டு கேட்கப் பிடிக்கும் என்றால், எல்லா நேரமும் அதில் செலவிடாமல், இலக்கை அடைந்தபின் ஐந்து நிமிடங்கள் மட்டும் கேட்டால், ஒரு விஷயத்தைச் சாதித்த தன்னம்பிக்கையை ஏற்படும்.

எதிர்மறை எண்ணம் வரும்போதெல்லாம் ‘என்னால் முடியும்’ என நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது அவசியம்.

‘எல்லாம் போச்சே... எப்படி முதலில் இருந்து ஆரம்பிப்பது என ஸ்தம்பித்துப் போக வேண்டாம். ஏற்கெனவே, வருஷக் கடைசி வந்தாச்சு. இன்னும், இரண்டு மாதங்களே  உள்ளன. விளையாட்டுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே ஒதுக்கி, படிப்பில் கவனம் செலுத்தினாலே, விட்டதைப் பிடித்துவிடலாம்.

சரியான நேரத்தில் சத்துள்ள உணவை உட்கொள்ளுங்கள்.   கண்டிப்பாக 8 மணி நேரத் தூக்கம் முக்கியம். இரவு அதிக நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். இதை இப்போதிருந்தே பழக்கப்படுத்திக்கொண்டால், மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கும்.

மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. அப்படிப்பட்ட திடீர் மாற்றங்களைச் சந்திக்க நாம் நிறையப் பழகிக்கொள்ள வேண்டும். கற்றுக்கொடுத்த பாடங்களை மட்டும் நினைவில்வைத்து, சம்பவத்தை மறந்துவிடுவது நல்லது. எதையும் எதிர்நோக்கும் மனவலிமையை இந்தச் சம்பவம் உங்களுக்கு தந்துள்ளது. எல்லா ஆண்டையும்போல இந்த ஆண்டுத் தேர்விலும் சிறப்பான வெற்றியைப் பெறலாம்!

- டாக்டர் சித்ரா அரவிந்த், மனநல ஆலோசகர்

 படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism