Published:Updated:

சிடி ஹோவர் கிராஃப்ட்

சிடி ஹோவர் கிராஃப்ட்

ண்ணீரிலும் தவழும், தரையிலும் நகரும் ஒரு சூப்பர் வண்டியைச் செய்யலாமா?

சிடி ஹோவர் கிராஃப்ட்

தேவையான பொருட்கள்: பலூன், சி டி, சிப்பர் வாட்டர் பாட்டில் மூடி, ஃபெவிக்விக்.

செய்முறை:

• சிப்பர் பாட்டில் மூடியின் விளிம்பில் ஃபெவிக்விக் தடவுங்கள்.

• சி டி-யின் நடுப் பக்கத்தில் அதனை ஒட்டி, சிறிது நேரம் காயவிடுங்கள்.

சிடி ஹோவர் கிராஃப்ட்

• பலூனை ஊதி, சிப்பர் பாட்டிலின் மேலே மாட்டுங்கள்.மூடியின் உறிஞ்சும் பகுதியான மேல் பாகத்தைத் தூக்குங்கள். ‘விர்ர்ர்ர்’ என்ற சத்தத்தோடு ‘சி டி ஹோவர் கிராஃப்ட்’ நகருவது ஜாலியாக இருக்கும்.

எப்படி இப்படி?

சிடி ஹோவர் கிராஃப்ட்

பலூனில் இருந்து வெளிவரும் காற்று, மூடியின் உறிஞ்சு துளை வழியாகச் சென்று, சி டி-யின் ஓட்டை வழியே வெளியேற முயற்சிக்கிறது. அப்போது, மொத்த அமைப்பும் நகர்கிறது.

- மா.மோதிஷ் லக்‌ஷ்மன்-(VII)

அடுத்த கட்டுரைக்கு