Published:Updated:

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

தினம் தினம் ஓவியம்!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்கூல் ஸ்பெஷல்!

எங்கள் பள்ளியில் மற்ற பாடங்களைப் போல ஓவியப் பயிற்சிக்கும் தினசரி வகுப்பு உண்டு. கொலாஜ், வாட்டர் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங் என எல்லா வகை ஓவியங்களையும் கற்றுத்தருகிறார்கள். இங்கே ஓவியம் கற்ற பலர், பல்வேறு ஓவியப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். இப்போது, ‘தினம் ஓர் ஓவியம்’ என்ற பெயரில், வருடம் முழுவதும் வரைந்து, சாதனை படைக்கும் முயற்சியில் இருக்கிறோம்.      

புத்துணர்ச்சி தரும் நடனம்!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

நடனம் ஒரு கலை மட்டுமல்ல. மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளித்து, நம்மை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கும். இதை உணர்ந்துதான் எங்கள் பள்ளியில், சிறப்பு நடன வகுப்புகள் நடைபெறுகின்றன. கிளாஸிக், வெஸ்டர்ன் என அனைத்து வகை நடனங்களும் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தரப்படுகிறது. பள்ளியில் நடைபெறும் விழாக்கள் மட்டுமின்றி, போட்டிகளுக்கும் சென்று பரிசுகளைப் பெற்றுவருகிறோம். 

உயிர்பெறும் சிற்பங்கள்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஒரு துண்டுக் காகிதமாக இருந்தாலும் சரி, குண்டூசியாக இருந்தாலும் சரி, எங்கள் கைகளில் கிடைத்தால், புதிய வடிவம் பெற்றுவிடும். பேப்பர் கிராஃப்ட், களிமண்ணில் உருவங்கள் செய்வது, சாக்பீஸில் சிற்பங்கள் வடிப்பது, சோப்பில் சிலைகள்  செய்வது என எங்கள் பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.    

நூலகமும் ஆரோக்கியமும்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

நல்ல நல்ல புத்தகங்கள் படிப்பது மனதுக்கு  ஆரோக்கியம் தரும். இதைக் கருத்தில்கொண்டு, எங்கள் பள்ளி நூலகம் செயல்படுகிறது. கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு என எல்லா வகை நூல்களும் இங்கே உள்ளன. பொது நூலகம் போலவே, உறுப்பினர் அட்டையைத் தயாரித்து மாணவர்களுக்கு அளித்திருக்கிறார்கள். நாங்கள் தேவையான புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துசென்று படித்துவிட்டுத் தருவோம்.

உடல் ஆரோக்கியத்துக்காக எங்கள் பள்ளியில் ஹெல்த் சென்டர் செயல்படுகிறது. ஒரு டாக்டர், தினமும் அங்கே இருப்பார். எந்த சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் உடனே சென்று பார்ப்போம். தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவோம்.

அதிரடி டிரம்ஸ்!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!


எங்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஹிரஜித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பழைய பிளாஸ்டிக் குடம், பெயின்ட் கேன், வாட்டர் கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒரு டிரம் செட் உருவாக்கி, ஒரு இசைக் கச்சேரியையே நடத்தி அசத்தி இருக்கிறார்கள்.

ஸ்கூல் ஸ்பெஷல்!

‘‘எந்தப் பொருளையும் வீண் என்று தூக்கிப்போடாமல், அதற்கு எப்படி மறு உருவம் கொடுப்பது என யோசிக்க வேண்டும். இதுபோன்ற பழைய பொருட்கள் மூலம் புக் ஷெல்ஃப், டேபிள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார் ஹிரஜித்.    

கலைகள் பல... கோப்பைகள் பல!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

‘சி்சு உத்சவ்’ எனப்படும் செட்டிநாடு  வித்யாலயா நடத்தும் ஐந்து வயதுக்கு உற்பட்ட குழந்தைகளுக்கான கலை விழாப் போட்டியில், எங்கள் பள்ளியின் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்கள் தொடர்ந்து மூன்று வருடங்களாக வெற்றிபெற்று வருகின்றனர்.

ஸ்கூல் ஸ்பெஷல்!

பள்ளி மாணவர்களுக்கான ‘ஆச்சி சிங் தி சீசன்’ போட்டிகளில் வருடா வருடம் பங்கேற்று, எங்கள் பள்ளி மாணவர்கள் வெற்றிகளை குவித்துவருகின்றனர். இந்தப் பள்ளியின் இசை ஆசிரியர், சிறந்த இசையமைப்பாளருக்கான பரிசைப் பெற்றுள்ளார்.

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பாடங்களை, எங்கள் பள்ளியில் கற்பிப்பதால், தேசிய ஒலிம்பியாட் போட்டிகளில் எங்கள் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெறுகின்றனர்.

ஸ்கூல் ஸ்பெஷல்!

சதுரங்கத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, அதிகக் கோப்பைகளுடன் வருவது எங்கள் பள்ளி மாணவர்களே!