Published:Updated:

மணக்கும் மருங்கூர் முந்திரி!

மணக்கும் மருங்கூர் முந்திரி!

மணக்கும் மருங்கூர் முந்திரி!

மணக்கும் மருங்கூர் முந்திரி!

மணக்கும் மருங்கூர் முந்திரி!

Published:Updated:
மணக்கும் மருங்கூர் முந்திரி!

பொங்கல் பண்டிகையை ஜாலியா கொண்டாடினீங்களா? சக்கரைப் பொங்கலில் முந்திரி பருப்பைத் தேடித் தேடி சாப்பிட்டீங்களா? நீங்கள் சாப்பிட்ட அந்த முந்திரி எங்கள் ஊரில் இருந்தும்  வந்திருக்கலாம். நெய்வேலியின் அடையாளங்களில் முந்திரியும் ஒன்று.  முந்திரிப் பழத்தில் இருந்து பேக்கிங் வரை எப்படித் தயார்செய்கிறார்கள் எனப் பார்ப்போமா?

மணக்கும் மருங்கூர் முந்திரி!

நெய்வேலி, மருங்கூரில் இறங்கியதும் முந்திரி வாசம் எங்களை இழுத்துச் சென்றது. உதயகுமார் என்பவரின் சூர்யா முந்திரி கம்பெனிக்குள் நுழைந்தோம். முந்திரியை உடைக்கும் சத்தமும், வேலை செய்பவர்களின் பேச்சும் இணைந்து வரவேற்றது.

முந்திரிப் பழத்தில் இருந்து எடுக்கும் கொட்டைகள், 6 மணி நேரம் ஆவி மூலம் வெப்பப் படுத்தப்படும். பிறகு, 12 மணி நேரம் ஆறவைக்கப்பட்டு, மெஷின் மூலம் தோலை உடைத்து, பருப்பைத் தனியே எடுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணக்கும் மருங்கூர் முந்திரி!

அந்தப் பருப்பு, போர்மா மெஷின் மூலம் 6 மணி நேரம் வெப்பப்படுத்தப்பட்டு, 10 மணி நேரம் ஆறவைக்கப்படும். அதன் பிறகு, மேலே ஒட்டியிருக்கும் மெல்லிய தோலை மெஷின் அல்லது கையால் உரிப்பார்கள்.

பிரித்தெடுக்கப்படும் முந்திரிகளை ரகம் பிரித்து, டின் அல்லது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். அதுதான் நாம்  சுவைக்கும் முந்திரி.

மெஷினில் முந்திரி விதைகளைக் கவனமாக உடைத்துக்கொண்டு இருந்தார், சாரதா என்கிற அக்கா.

“முந்திரிப் பால் கையில் படாம இருக்க என்ன செய்வீங்க?’’ என்று கேட்டோம்.

“மெஷின் ஓடுதுல கண்ணு, கொஞ்சம் சத்தமா கேளு’’ என்றார். கேள்வியை சத்தமாக இன்னொரு தடவை கேட்டோம்.

மணக்கும் மருங்கூர் முந்திரி!

“கிளவுஸ் மாட்டிக்குவோம். இல்லைனா, சாம்பலை தொட்டுப்போம். அதனால், பால் சாம்பலில்தான் படும். சோப் போட்டுக் கழுவினா, ஈஸியாப் போயிடும்”

சாரதா அக்காவின் வாய் பேசினாலும் கை, முந்திரி உடைப்பதை நிறுத்தவில்லை. சரி, அடுத்த கேள்வியைக் கேளு என்பதுபோல நிமிர்ந்து பார்த்தார்.

“முந்திரித் தோலை என்ன செய்வாங்க?’’

‘‘இந்தத் தோலை அரைச்சு  முந்திரி எண்ணை தயாரிக்கிறாங்க.”

“ஒரு நாளைக்கு எத்தனை மூட்டை உடைப்பீங்க? எவ்வளவு கூலி கொடுப்பாங்க?”

மணக்கும் மருங்கூர் முந்திரி!

“மூட்டைக் கணக்கெல்லாம் தெரியாது. மூணு கிலோவை ஒரு எடைனு சொல்லுவாங்க. அதை உடைச்சுத் தந்தா, 25 ரூபாய் கூலி. எங்ககிட்டே கொடுக்கிற முந்திரிக்காயை, பயறு தனியா, தோல் தனியா பிரிச்சுக் கொடுக்கிறதுதான் வேலை.”

“ஒரு மாசத்துக்கு எவ்வளவு உடைப்பீங்க?’’

மணக்கும் மருங்கூர் முந்திரி!

“அது, நம்ம உழைப்பைப் பொறுத்து இருக்கு கண்ணு. ஒரு மாசம் கூடும், இன்னொரு மாசம் குறையும்.”

இன்னோர் இடத்தில் அக்கா ஒருவர் முந்திரிப் பருப்புகளைப் பிரித்து, பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டிருந்தார்.  அவரிடம் சென்றோம்.

“அக்கா, முந்திரியில் மொத்தம் எத்தனை ரகங்கள் இருக்கு?”

மணக்கும் மருங்கூர் முந்திரி!

‘‘W210, W240, W320, S, LNP -னு 15 ரகங்களுக்கும் மேல இருக்கு.’’

 ‘‘எந்த ரகம் பெஸ்ட் குவாலிட்டியா இருக்கும்?’’

மணக்கும் மருங்கூர் முந்திரி!

‘‘எங்ககிட்டே இருக்கிற எல்லாமே  நல்லாதான் இருக்கும். ரகம்னு பார்த்தால், W210 ரொம்ப பெஸ்ட்.’’

மணக்கும் மருங்கூர் முந்திரி!

‘‘ஒரு மூட்டை எவ்வளவுக்கு விற்பீங்க?’’

‘‘அதெல்லாம் எங்களுக்கு என்னப்பா தெரியும். உடைச்சு, ரகம் பிரிச்சுத் தந்ததும் எங்க வேலை முடிஞ்சுது. இந்தா இதைச் சாப்பிடு. நல்லா இருக்கும்” என எல்லோருக்கும் கொடுத்தார்.

முந்திரி சாப்பிட்ட தெம்போடு பள்ளி வேனில் ஏறினோம்.

இ.ஷீலாராணி,எம்.அபிநயா,ஆர்.சந்தானலெட்சுமி,என்.விமல்,கே.பிரியதர்ஷினி,எம்.சரண்யா,என்.சிவரஞ்சனி, எம்.செளமியா, வி.ஜீவிதா,ஆர்.ராம்குமார்,எஸ்.தீனதயாளன், வி.ஜனா,என்.கனிமொழி, முரளிதரன்,கே.கார்த்திகேயன்,எம்.சர்மிளா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism