Published:Updated:

எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!
எங்கள் பள்ளி!

எங்கள் பள்ளி!

நீலகிரி மலைமகளின் மடியில் கலைமகளின் கோயில், சச்சிதானந்த ஜோதி நிகேதன்.

குருதேவர் என உலக மக்களால் போற்றப்படும் சச்சிதானந்த மகராஜ் அவர்களின் அருளாசியுடன் 1997-ம் ஆண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. இயற்கை எழில் பொங்கும் நீலகிரி மலைச்சாரலில் உள்ள கல்லாறில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ‘அன்புச் சேவை நம் பணி; அதற்கு உன்னை அர்ப்பணி!’ என்பதே குருதேவரின் நன்னெறி.

எங்கள் பள்ளி!

பண்பாடு மாறாத பயன்பாட்டுக் கல்வி வழங்குவதுடன் உடலும், உள்ளமும் வளம் பெறவும், தன்னலமற்ற சமூக நலன் கருதி சேவை செய்யவும், ஆன்ம நெறி கலந்த ஆற்றல் மிக்க அறிவுடன் வருங்காலத் தூண்களை எதிர்கால இந்தியாவுக்கு வார்த்தெடுப்பதும் நம் பள்ளியியின் குறிக்கோள்களாகும்.

இருபாலர் பயிலும் இந்த உறைவிடப் பள்ளியில், அனைத்து அறிவியல் துறை சார்ந்த ஆய்வகம் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. திறன்மிகு ஆசிரியர்களின் புதிய அணுகுமுறையுடன், கருத்துச்செறிவுடன் கூடிய கணினி வழிக்கல்வி நடத்தப்படுகிறது. மாணவர்களின் அறிவுத் தேடலை எளிதாக்கும் பொருட்டு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுடன் ஒலி, ஒளி அரங்குடன் அமைந்துள்ளது. தபால்தலை சேகரிப்பு இயக்கம், இன்னிசைக்கு இசைத்துறை, ஒளி கூட்டி வழிகாட்டும் கூட்டு வழிபாட்டு மன்றம். இலக்கியம் வளர்க்க பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம். எண்ணங்களை வண்ணங்களாக்கும் ஓவியக்கலை மன்றம். சீருடை சேவைக்கு சாரணர் இயக்கம், தேசம் காக்க நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, தற்காப்புக்கு கராத்தே, நடனப் பயிற்சிக்கு நாட்டிய மன்றம், மேற்கத்திய இசை பயில இசைக் குழு. அறிவை வளர்க்க, ‘சித்தார்த்தபாசு அறிவு மன்றம்’, காந்திய சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில், எளியோர்க்கு உதவி செயலாக்குகின்ற ‘காந்தி அறநெறி மன்றம்’, ஆங்கில ஆற்றலை பன்முகத்தில் வளர்த்திட ‘டிகோ மாஸ்டர்’ ஆங்கில மேடை. விவேகானந்தரின் வீரியம்மிக்க சிந்தனைவரிகளை மாணவர்களின் மனதில் பதித்து மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்க்க ‘விவேகானந்தா பயிலரங்க கல்வி மையம்’ ஆகிய அமைப்புகள்  மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வருகின்றன. பரந்த விளையாட்டு மைதானம், உள்விளையாட்டரங்கம், சர்வதேசத் தரம் வாய்ந்த நீச்சல் குளம் என்பதோடு, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனிப் பயிற்சியாளர்கள் இருப்பது சிறப்பு அம்சம்.

எங்கள் பள்ளி!

மாணவர் நலனில் அக்கறைகொண்டு ஒவ்வொரு காலையும் யோகாசனப் பயிற்சி நடைபெறுகிறது. மாணவர்கள் விருப்பத்துக்கேற்ற விளையாட்டுகளில் முழுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இறை உணர்வை ஊட்டும் வகையில் வழிபாடும். தியானமும் நடைபெறுகிறது. மாணவர்களின் கூட்டு முயற்சிக்கும். குழுப் பணிக்கும்  டாக்டர் அப்துல் கலாமின் கனவினை நனவாக்கும் இலட்சிய நோக்கோடு அமைந்த அக்னி, பிரித்வி, ஆகாஷ், திரிசூல் ஆகிய நான்கு அணிகளுக்கிடையே ஆண்டுதோறும் பல்வேறு திறன் வளர் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் உடல்நிலையில் மிகுந்த அக்கறைகொண்டு, அவர்களுக்கு சுவை மிகுந்த, சத்தான உணவு வழங்கப்படுகிறது.

‘மதங்கள் அனைத்தும் வலியுறுத்துவது, மனிதநேயம் என்கிற அன்பையே’ எனப் போதிக்கும் சுவாமிஜியின் வார்த்தைகளின் வழி நடக்கும் விதமாக, ஒவ்வொரு நாளும் இறைவணக்கத்தின்போது, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘ஆயிரம் கோடி வழி உண்டு, ஆயினும் ஆண்டவர் ஒன்றேதான்... அன்பினில் மூழ்கி அருள்கொண்ட இவ்வுகிலம் முழுவதும் அவனேதான்!’ எனும் பாடலைப் பாடிவருகின்றனர்.

எங்கள் பள்ளி!

‘உண்மை ஒன்று, வழிகள் பல’ என்ற சச்சிதானந்த சுவாமிகளின் கொள்கையோடு, இந்தப் பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

எங்கள் பள்ளி!
எங்கள் பள்ளி!

‘நிழலில்லா நிஜங்களை உருவாக்குவோம். எதிர்கால இந்தியாவைத் தரமாக்குவோம்.’ இது,  பள்ளியின் அறங்காவலர் கே.ராமசாமி ஐயாவின் அறநெறி.

எங்கள் பள்ளி!

‘இலட்சியவாதிகளை உருவாக்குவதே எனது இலட்சியம்’ என்கிற இலக்கோடு இயங்கி, மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பவர், பள்ளியின் செயலர், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன்.

எங்கள் பள்ளி!

‘சீருடை செங்கதிராய் ஒளிரும் கிழக்கு; வெற்றி என்பதே இவரது இலக்கு’ என்ற  உயர்ந்த எண்ணத்தோடு, மாணவர் நலனில் அக்கறைக் கொண்டு செயலாற்றும்  பள்ளியின் துணைச் செயலர் ஞானபண்டிதன்.

எங்கள் பள்ளி!

‘தரமான மாணவர்களை உருவாக்குவோம். தன்னிகரில்லா இந்தியாவை உருவாக்குவோம்.’ இதுவே நல்லாசிரியர் விருதுபெற்ற பள்ளி முதுநிலை முதல்வர் வெ.கணேசனின் கனவு.

‘மாணவனுக்கு ஒழுக்கமே உயிர் மூச்சு’ என்ற கொள்கையோடு  செயலாற்றும்  பள்ளி முதல்வர் இர.உமா மகேஸ்வரி.

அடுத்த கட்டுரைக்கு