Published:Updated:

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!
News
குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

ட்டி என்றதும் மலை ரயில் நினைவுக்கு வரும். மலை மீது ஊர்ந்து செல்லும் அதன் அழகைப் பார்க்க ரசிகர் பட்டாளமே உண்டு.  மலைகளின் ராணியான ஊட்டிக்கு வரும் வெளிநாட்டவரையும் சுண்டி இழுக்கும் இந்த ரயில், எங்கள் பள்ளிக்கு மிக அருகில்தான் கடந்து போகும். அதன் குயில் போன்ற ஓசையைக் கேட்கும்போதே உற்சாகமாக இருக்கும். ரயில்வேயின் சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் ஆன்டோ பாபு ஜோஸ், இந்த மலை ரயிலின் சிறப்புகள் பற்றி சொல்றதைக் கேட்போம் வாங்க.

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘மற்ற ரயில்வே தண்டவாளம் மாதிரி இல்லாமல், நடுவில் இன்னொரு டிராக் எதுக்கு இருக்கு?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘மீட்டர் கேஜ், பிராட் கேஜ், நேரோ கேஜ் என ரயில்வேயில் மூன்று வகையான தண்டவாளங்கள் இருக்கு. மீட்டர் கேஜ் என்பது, ஒரு மீட்டர் அகலம் இருக்கும். பிராட் கேஜ் அதைவிட அகலமாக (1,676 மில்லிமீட்டர்) இருக்கும். நேரோ கேஜ் என்பது மீட்டர் கேஜைவிட குறைவானது. நம்ம நாட்டில் அதிகமாக இருப்பது பிராட் கேஜ் டிராக்தான். நேரோ கேஜ் டிராக், காங்ரா மற்றும் டார்ஜிலிங் பகுதியில் மலை ஏறுவதற்காக உள்ளது. இந்தியாவில் இங்கே மட்டும்தான் இருப்புப் பாதையில் ரேக் பார் உள்ளது. இரண்டு இரும்பு டிராக்குகளுக்கு நடுவில், இரும்பு  பற்சக்கர அமைப்புக்குத்தான் ரேக் பார் என்று பெயர். இதை எக்ஸ்ட்ரா டிராக் என்பார்கள்.’’

‘‘இந்த டிராக் எதற்காகப் பயன்படுகிறது?’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘சாதாரண சாலையில் சைக்கிளில்  செல்வதற்கும் மேட்டில் ஏறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா, அதுபோலதான். மலையின் மேல் செல்லும் ரயிலின் வாட்டம், செங்குத்தாக இருக்கும். அப்போது, ரயிலுக்கு அடியில் இருக்கும்  பினியன் என்ற அமைப்பு இந்த ரேக் பாரை கவ்விப் பிடித்துக்கொள்ளும். அதனால், ரயில் செங்குத்தாக செல்லும்போது ஸ்லிப் ஆகாமல் இருக்கும். இந்த பினியன் சுற்றுவதற்கு தனியாக ஒரு சிலிண்டர் இருக்கும்.’’

‘‘மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை எத்தனை ஸ்டேஷன்கள், அங்கே எவ்வளவு நேரம் ரயில் நிற்கும்?’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இரண்டு செக்‌ஷனாகப் பிரிக்கப்படுகிறது.  மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை  நீராவி இன்ஜின் மூலமாக ஓடும். இதற்கு இடையில் கல்லார், ஹில்க்ரோ ஆகிய இரண்டு நிறுத்தங்கள் வரும். நீராவி இன்ஜின் மூலம் செல்லும்போது, ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒருமுறை நீர் பிடிக்க வேண்டும். அதற்காக அடர்லி, ரன்னிமேடு ஆகிய இரண்டு இடங்களில் நிற்கும். அடுத்த செக்‌ஷன், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் இன்ஜின் மூலம் ஓடும். அப்போது,  வெல்லிங்டன், அரவங்காடு, கெட்டி (ketti) லவ்டேல் என நான்கு நிறுத்தங்களில் நிற்கும்.’’

‘‘இங்கிருந்து ஊட்டி வரை இடையே  குகைகள் இருக்கிறதாமே...’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘ஆமாம். 16 குகைகள் இருக்கின்றன. அதில் ஹில்க்ரோ ஸ்டேஷனுக்கு அடுத்து வரும் 12-வது குகைதான் பெரியது. குகையில் ஓட்டைகள் போடப்பட்டு, அதன் வழியாக காற்று உள்ளே செல்லும். லைட்டிங் ஏற்பாடுகளும் அருமையாக இருக்கும்.’’

‘‘இந்த ரயிலில் எத்தனை பேர் போகலாம்? எவ்வளவு வேகத்தில் செல்லும்?’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘மொத்தம் நான்கு கோச் உள்ளன. 200 பேர் பயணிக்கலாம். இதன் வேகம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை மணிக்கு 30 கிலோமீட்டர். கல்லாறில் இருந்து குன்னூர் வரை மணிக்கு 13 கிலோமீட்டர். குன்னூரில் இருந்து ஊட்டி வரை 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.’’

‘‘இதில் எத்தனை டிரைவர் இருக்காங்க?’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘எல்லா ரயிலைப் போல இதிலும் ஒரு டிரைவரும் உதவியாளர் ஒருவரும் இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு கோச்சுக்கும் ஒரு பிரேக்மேன் இருப்பார். ஒவ்வொரு கோச்சுக்கும் தனியாக   ஒரு பிரேக் இருக்கும். ஏதேனும் அவசர சமயத்தில்  மட்டுமே அதைப் பயன்படுத்துவார்கள். இந்த ரயில் முன்பு நிலக்கரி மூலமாக இயங்கியது.  அதை கையாளுவதில் நிறைய பிரச்னைகள் இருப்பதால், இப்போது நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. நீரை ஆவியாக்குவதற்கு ஃபர்னஸ் ஆயிலைப் (Furnace Oil) பயன்படுத்துகிறோம்.’’

‘‘இங்கே உங்கள் பணி என்ன?’’

குயிலாக இசைக்கும் மலைராணி ரயில்!

‘‘நான் இங்கே சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயரிங் [Senior Section Engineering] என்ற மெக்கானிக்கல் பொறுப்பாளராக இருக்கிறேன். என்னுடைய வேலை, ரயிலின் பெர்ஃபாமன்ஸ், ஃபங்ஷன் ஆகியவற்றை செக் செய்வது. பிரேக் பவர் செக் செய்து,  ரயில் சென்று சேர்ந்துவிட்டதா என்று குன்னூர் வரை சென்று பார்த்து  வரவேண்டும்.’’

‘‘நீங்கள் இந்த ரயிலில் முதன்முறையாக சென்ற அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘நான் இதற்கு முன்பு 16 வருடங்கள் பிராடு கேஜ் டிராக் வேலையில் இருந்தேன். அப்போது, எந்த மலைப் பகுதிக்கும் சென்றது இல்லை. முதன்முதலாக இந்த மலை ரயிலில் சென்றது உற்சாகமாக இருந்தது. பலமுறை சென்றுவிட்டாலும் இப்போதும் அந்த உற்சாகம் இருக்கிறது. காரணம், செல்லும் வழி எங்கும் இயற்கை கொட்டிவைத்திருக்கும் அழகு.’’

- ஜி.ஜெ.வர்ஷா, ரா.பி.அனுசுயா, பி.தயாஸ்ரீ, சி.நேஹா, கே.கே.காவியா, ஜி.இலக்கிய வர்ஷனா, ஆர்.வி.நித்தின்கார்த்திக், கே.ஜனனி, ச.வி.வித்யாசரண், எம்.எஸ்.பூரணி, என்.அகிலேஷ், டி.இ.ஆதித்யா, ஜி.கோகுலன், ஏ.வி.ஹிர்திக்விஷால்.