Published:Updated:

பாக்குக்கு முதல் மரியாதை!

பாக்குக்கு முதல் மரியாதை!
பிரீமியம் ஸ்டோரி
News
பாக்குக்கு முதல் மரியாதை!

பாக்குக்கு முதல் மரியாதை!

சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதையாக, வெற்றிலை பாக்கு  தருவதைப் பார்த்திருப்பீர்கள்.  அந்த மரியாதைக்குரிய பாக்கு, எங்கள் பகுதியில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம். எங்கள் பள்ளிக்கு  அருகில் உள்ள பாக்குத் தோட்டத்துக்கு விசிட் அடித்தோம். தோட்ட உரிமையாளர் வெங்கடேசன், பாக்கு விளைச்சல் பற்றி எங்களோடு சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டார்.

பாக்குக்கு முதல் மரியாதை!

‘‘இந்தப் பாக்குத் தோட்டத்தை எப்போது உருவாக்குனீங்க?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாக்குக்கு முதல் மரியாதை!

‘‘இது, நான் உருவாக்கிய தோட்டம் இல்லை. தாத்தா உருவாக்கியது. நெல், கடலை போல பாக்குத் தோட்டத்தை உடனே உருவாக்க முடியாது. மரத்துக்கு வயது ஆக ஆக, புது மரங்களை உருவாக்கணும்.’’

‘‘பாக்கை எப்படி நடவு செய்வீங்க?’’

பாக்குக்கு முதல் மரியாதை!

‘‘பழம் போல காய்க்கும் பாக்கில், நன்றாக  முதிர்ந்ததைச் சேகரித்துவைத்துக்கொள்வோம். எரு கலந்த மண்ணை பாக்கெட்டுகளில் சேர்த்து, அதில் விதைப் பாக்கைப் போட்டு நீர் ஊற்றி வளர்ப்போம்.’’

‘‘ஒரு பாக்கு மரம் எவ்வளவு நாளில் காய்க்கும்?’’

‘‘செடி வைத்து எட்டு வருடங்களில் காய்க்க ஆரம்பிக்கும்.’’

‘‘ஒரு மரம் எத்தனை வருடங்கள் பாக்கு கொடுக்கும்?’’

பாக்குக்கு முதல் மரியாதை!

‘‘ஒரு வருடத்துக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மகசூல் நிறையக் கிடைக்கும். 80 வருடங்கள் வரை காய்க்கும். ஆனால், அதிக காய்கள் கிடைக்காது. மரங்களின் காய்ப்பு குறையக் குறைய, புதிய மரங்களை நடணும்.’’

‘‘எப்படி விற்பனை செய்வீங்க?’’

‘‘கல்லாறு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் தோட்டங்களில் கிடைக்கும் பாக்குகளை, மொத்த வியாபாரிகள் வாங்குவாங்க. தமிழ்நாட்டைவிட வட மாநிலங்களில்தான் அதிகம் வாங்குறாங்க.’’

‘‘பாக்கு மரம் வளர்ப்பதில் உள்ள பிரச்னைகள் என்ன? அதை எப்படித் தவிர்ப்பீர்கள்?’’

பாக்குக்கு முதல் மரியாதை!

‘‘முதலில், வேர்ப் புழுக்களால் மரம் தாக்கப்படும். அதற்கு, வேப்பம் புண்ணாக்கைப் பயன்படுத்துவோம்.   வனப் பகுதிக்கு அருகே தோட்டம் இருப்பதால், காட்டுப் பன்றி, யானைகள் தொந்தரவு அதிகம். மரம் வளரும் பருவத்தில், வேர்ப் பகுதியில் கிழங்கு போல உள்ள வேரை, பன்றிகள் கடித்துத் தின்றுவிடும். யானைகள், தண்டுப் பகுதியை வளைத்து ஒடித்துத் தின்றுவிடும். இவை கூட்டமாக வந்தால், நம் உயிருக்கும் ஆபத்து வரலாம். இந்தச் சவால்களை எல்லாம் சந்தித்துதான் பாக்குத் தோட்டத்தைப் பாதுகாக்கிறோம்.’’

பல்வேறு இடையூறுகளையும் தாண்டி, ஓகோவென வளர்ந்து நிற்கும் பாக்கு மரங்களைப் போல நாமும் தன்னம்பிக்கையோடு இருப்போம்.

- ரா.பி.அனுசுயா, ஜி.ஜெ.வர்ஷா, சுஜா,பி.ப்ரியதர்ஷினி, ஆர்.ஜி.பவித்ரா,எஸ்.பழனியப்பன், ஏ.ஆதிராஜா.