Published:Updated:

உலகம் போற்றும் ராமன்!

உலகம் போற்றும் ராமன்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் போற்றும் ராமன்!

பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினம்

ந்திரசேகர வெங்கட ராமன் என்கிற சி.வி.ராமன், திருச்சி அருகே திருவானைக்காவல் எனும் ஊரில், நவம்பர் 7, 1888-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை, இயற்பியல் மற்றும் கணித விரிவுரையாளர். அதனால், அறிவியல் மீது இயல்பாக ராமனுக்கு ஆர்வம் உண்டானது. இசை மீதான ஆர்வத்தையும் தந்தை உண்டாக்கினார்.

உலகம் போற்றும் ராமன்!

ராமன், ஆரம்பக் கல்வியை விசாகப்பட்டினத்தில் பயின்றார். அப்போது, மெட்ரிகுலேஷன் முடிக்க வயது வரம்பு இல்லை. எனவே, தனது 11-வது வயதிலேயே அதனை முடித்தார். 1902-ம் ஆண்டு சென்னை மாகாணக் கல்லூரியில் நுழைந்து, 1904-ல் இளநிலை (BA) பட்டத்தில் முதல் இடமும், இயற்பியலில் தங்கப் பதக்கமும் பெற்றார். 1907-ல் முதுநிலைப் (MA) படிப்பை அதிக மதிபெண்களுடன் முடித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகம் போற்றும் ராமன்!
உலகம் போற்றும் ராமன்!

1921-ம் ஆண்டு. இங்கிலாந்தில் நடந்த மாநாட்டுக்காக கடலில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இயற்பியலில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடல் ஏன் நீல நிறத்தில் இருக்கின்றது? கடலின் நீல நிறம், வானைப் பிரதிபலிக்கின்றதா?’ என்ற கேள்விகள் அவருக்குள் எழுந்தன. சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்ற பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆராய்ந்தார்.

உலகம் போற்றும் ராமன்!
உலகம் போற்றும் ராமன்!

பட்டம் பெற்ற ராமன், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், கணக்கர் பணியில்  சேர்ந்தார். அதோடு, கொல்கத்தாவில் மருத்துவர் மகேந்திரலால் சர்க்கார் என்பவரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science),  ஒளிச்சிதறல் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1917-ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார்.

உலகம் போற்றும் ராமன்!

இந்திய இயற்பியல் ஆய்விதழில், ‘ஒரு புதிய ஒளிர்ப்பாடு’ (A new Radiation) என்னும் தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டார். ‘திரவப் பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு, வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால்தான் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது’ எனக் கண்டறிந்தார். 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவியைப் பயன்படுத்திக் கண்டறிந்த  ‘ராமன் விளைவு’,  1930-ல் அவருக்கு நோபல் பக்சைப்  பெற்றுத்தந்தது. இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர், நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.

உலகம் போற்றும் ராமன்!

1947-ம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதல் தேசியப் பேராசிரியராக ராமன் நியமிக்கப்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப் விருது’, பிரிட்டிஷ் அரசின் ‘நைட் ஹூட்’ எனும் பட்டம், இங்கிலாந்து அரசின் ‘சர்’ பட்டம், இந்தியாவின் ‘பாரத ரத்னா’ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ராமன், நவம்பர் 21, 1970ல் காலமானார்.

- யுவா