ஆப்பிள் என்றவுடனே அதன் சுவை நினைவுக்கு வரும்... ஆனால், அந்த ஆப்பிள் பெயர் தற்போது உலகம் எங்கும் கண்ணீரை வர வைத்துவிட்டது. காரணம்... ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் நம்பிக்கை நாயகனின் மறைவு.

கணிப்பொறிகளை கண்ணைக் கவருகிற மாதிரி வடிவமைத்தது, ஐ பாட், ஐ போன்... என இவரது சாதனைகள் அபாரமானவை. இத்தனைக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மென்பொருள் வல்லுனரோ, கணினி புலியோ இல்லை. காலி பாட்டில்களைச் சேகரித்து விற்று, நண்பர்களின் வீட்டு மாடி முற்றத்தில் தூங்கிய மனிதர். இவரின் அப்போதைய நிலைமை... ஏழு மைல் தூரம் ஒரு வேளை உணவுக்காக தினம் நடப்பது. ஒரு வீடியோ கேம்

கடையில் வேலை. ஆனால், அவர் கண்ட கனவு பெரிது.

தான் கல்லூரியில் அரைகுறையாய் கற்றதைக் கொண்டே, தன் முதல் கணினிக்கான வடிவமைப்பை உருவாக்கினார். ''எனக்கு பிடிக்காத ஒன்றை உலகுக்குத் தரமாட்டேன். எதிலும் எளிமை மற்றும் நளினம் நிறைந்து இருக்க வேண்டும்'' என்றார். ஸ்டீவ் ஜாப்ஸ் முதலில்இந்தத் துறையில் நுழைந்த பொழுதுஎதிர் கொண்டது மிஙிவி எனும் யானை பலம்கொண்ட சாம்ராஜ்யத்தை! ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவருக்கும் நம்பர் கொடுத்தபோது, ''எனக்கு எண் 0 வேண்டும்! ஏன் என்றால், நான்தான் என்றைக்கும் முன்னிலையில் இருக்க வேண்டும்'' என்றார்.

2004-ல் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. வலியோடு நிறுவனப் பதவியை விட்டு விலகினார். இதனால், நிறுவனத்தின் பங்குகள் கீழே போய்விட்டன. மீண்டும் வந்து, பல புதுமைகளைச் செய்தார். அப்போது அவர் சொன்னது... ''இன்றோடு வாழ்க்கை முடியப் போகிறது என்கிற நினைப் போடு உழையுங்கள்... பல விஷயங்கள் துரிதமாகவும் சுலபமாகவும் முடியும்''

அப்படியே... அடுத்து வந்த ஆப்பிள் தயாரிப்புகள் பெரிய ஹிட். ஆப்பிள் நிறுவனத்தைவிட்டு வெளியேறி, சில காலம் ஒரு சிறிய ஸ்டுடியோவை விலைக்கு வாங்கி, அங்கும் புதுமைகள் செய்தார். அந்த நிறுவனம் தயாரித்த படங்கள்தான்... சுட்டிகளைக் கவர்ந்த டாய் ஸ்டோரி, பைண்டிங் நிமோ போன்ற அனிமேஷன் அசத்தல்கள்.

சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பெயரை, உலகம் உச்சரிக்க வைத்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதனால்தான் அவர் மறைந்த பொழுது அமெரிக்க ஒபாமா முதல் நம்ம ஊர் உலகநாதன் வரை எல்லோரும் அவர் பெயரை நினைவு கூர்ந் தார்கள்.